392மேருமந்தர புராணம்  


 

யானையானது,   கேளா   -   கேட்டு, பிறப்பினை - தனது பூர்வபவ
பிறப்பை, உணர்ந்திட்டு - (க்ஷயோபசமலப்தி பூர்வம் விசோதிலப்தியால்
பவஸ்மிருதியென்னும்   அறிவுண்டாகவதனால்)   அறிந்து,    ஊனின்
விரவிய - மாம்ஸத்திற் கலந்த (அதாவது : மாம்ஸமிசிரமாகிய), கவளம்
- கவளத்தை,     கொள்ளாது     -  ஏற்றுக்கொள்ளாமல், ஒழிந்து -
அதைவிட்டு    நீங்கி,   வெய்துயிர்த்தது - பெருமூச்செறிந்து நின்றது,
எ-று.                                                  (26)

839. பிறர்மனை பிழைத்த நெஞ்சிற் பெரியவ னொருவன் போல
    நிறைமதம் புலர்ந்து நைந்து நீசனென் செய்தே னென்று
    மறமொழிந் துறவி யோம்பிக் கவளங்கள் வாங்கா நீங்க
    வறைகழ லரசற் கோடி யறிந்தவ ருணர்த்தி னாரே.

     (இ-ள்.) (அவ்வாறாய் அந்த  யானை), பிறர் மனை - அன்னிய
ஸ்த்ரீயினிடத்தில்,   பிழைத்த    - குற்றஞ்   செய்த (அதாவது : நீதி
விரோதஞ்செய்து  அவளை அனுபவித்த), பெரியவனொருவன்போல -
ஒரு    பெரிய      மனுஷ்யனைப்போல     (அதாவது :    பெரிய
மனுஷ்யனானவன்    தான்செய்த   அக்காரியம் கெட்டவிஷயமென்று
அறிந்து    தன்னைத்தானே நிந்தித்து அதற்குப் பிராயச்சித்தம் செய்து
கொள்வதுபோல)  நிறை   - நிறைந்த, மதம் - மதமானது, புலர்ந்து -
உலர்ந்து (அதாவது : ஒழிந்து), நீசன் - புத்தியில்லாத நீசனாகிய யான்,
என்செய்தேனென்று   - என்ன கெட்ட காரியத்தைச் செய்தேனென்று,
நெஞ்சில்    -    மனதில்,  நைந்து - நினைந்துருகி (ஆத்மநிந்தனை
பண்ணி),    மறம் -   பாபத்தொழிலை, ஒழிந்து - தவிர்ந்து, உறவி -
ஜீவன்களை,  ஓம்பி   - இரக்ஷித்து (அதாவது : ஹிம்ஸைபண்ணாமல்,
ஜீவதயவுடையதாகி),  கவளங்கள் - மாம்ஸ மிஸ்ரமாகிய கவளங்களை,
வாங்காநீங்க   -   வாங்காமல்    விட்டுவிட,   அறிந்தவர்   - இது
கவளங்கொள்ளாதிருப்பதை யுணர்ந்த பாகர்கள், ஒடி - சென்று, அறை
- சப்தியா  நின்ற,   கழல்   - வீரகண்டயத்தை யணிந்த, அரசற்கு -
இரத்தினாயுத   மஹாராஜனுக்கு,     உணர்த்தினார்    -    யானை
கவளங்கொள்ளவில்லையென்று தெரிவித்தார்கள், எ-று.         (27)

840. மன்னன்வந் தமைச்ச ரோடு மருந்தறி புலவர் தம்மை
    யென்னிதற் குற்ற தென்ன வியாதிமற் றியாது மில்லை
    மின்னுமிழந் திலங்கும் பூணோய் விலங்கல்போ னின்ற வேழ
    முன்னினாற் பிறப்பு ணர்ந்த தொக்குமிவ் வுயிர்ப்பி னென்றார்.

     (இ-ள்.) மன்னன்   -  இரத்தினாயுதவாசன், அமைச்சரோடும் -
மந்திரிகளுடன்,  வந்து - யானை யிருக்குமிடம் வந்து, மருந்தறிபுலவர்
தம்மை   -   வைத்தியர்களை, என்   - என்ன, இதற்குற்றது - இந்த
யானைக்கு  அடைந்தது, என்ன   - என்று கேட்க (அவர்கள்), மின் -
பிரகாசத்தை, உமிழ்ந்து - சொரிந்து, இலங்கும் -