வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 393


 

விளங்கும், பூணோய்  - ஆபரணமணிந்த அரசனே!, விலங்கல்போல் -
பர்வதம்போல,   நின்ற -    நின்றதாகிய, வேழம் - இந்த யானைக்கு,
யாதும்     -    யாதொன்றும், வியாதி    -  நோயானது, இல்லை -
உண்டானதில்லை,  இவ்வுயிர்ப்பின் - இது விடுகின்ற இப்பெருமூச்சின்
தன்மையால்,    உன்னினால்  - யுக்தியாக ஆலோசித்துப் பார்த்தால்,
பிறப்பு - ஏதோ காரணத்தால் பூர்வபவ பிறப்பை, உணர்ந்ததொக்கும் -
அறிந்ததற்குச்     சமானமா    யிராநின்றது,    என்றார்   - என்று
சொல்லினார்கள், எ-று.                                    (28)

841. ஐயொடு வாத பித்தம் விகாரத்தை யடைந்த தில்லை
    மையலும் வெய்ய தொன்று மற்றிதற் குற்ற தில்லை
    கைம்மலை யிதன்கை யூனிற் கவளங்கள் வைத்த போழ்தி
    னையமொன் றின்றி வாங்கி னறிந்தது பிறப்பை யென்றார்.

     (இ-ள்.) (அவர்கள் அவ்வாறு சொல்லிப் பின்னரும்), ஐயொடு -
சிலேத்து   மத்தோடு,  வாதம் - வாதமும், பித்தம் - பித்தமுமென்னும்
பகுதிகள், விகாரத்தை - வித்தியாசத்தை, அடைந்ததில்லை - அடைந்த
தன்மை  இதனிடத்தில்லை, வெய்யது - கொடுமையுள்ளதாகிய, மையல்
ஒன்றும் - மயக்கமொன்றும், இதற்கு - இவ்வியானைக்கு, உற்றதில்லை
-   அடைந்ததில்லை,  கைமலை - துதிக்கையையுடைய மலைபோன்ற
யானையாகிய,   இதன்கை   - இதனுடைய கையில், ஊனில் - மாம்ஸ
மிஸ்ரமில்லாத,    கவளங்கள்  -   பவித்திராஹார     கவளங்களை,
வைத்தபோழ்தில்   -   வைத்தகாலத்தில், ஐயமொன்றின்றி  - சிறிதும்
சந்தேகமில்லாமல்,    (இது),  வாங்கின்   - கிரஹித்துப் பொசிக்கின்,
பிறப்பை   - தனது பிறப்பாகிய பூர்வ பவ ஸ்வரூபத்தை, அறிந்தது -
பவஸ்மிருதி      யென்னும்        ஞானம்        உற்பன்னமாகித்
தெரிந்துகொண்டதாகும்,      என்றார்     - என்று   சொன்னார்கள்,
எ-று.                                                  (29)

842. தேனுலாந் தாரி னானு மப்படிச் செய்த வென்ன
    வூனிலாத் தூய நல்ல கவளங்க ளுழையர் நீட்ட
    மானமா வாங்கக் கண்டு மன்னனும் வியந்து பின்னைக்
    கானின்மா முனிவன் றன்னைக் கண்டடி பணிந்து சொன்னான்.

     (இ-ள்.) (அதைக்கேட்டு),    தேன்    -  வண்டுகள், உலாம் -
தேனையுண்ணும்   பொருட்டு   நெருங்கியுலவுகின்ற,   தாரினானும் -
மாலையை    யணிந்தவரசனும்,   அப்படி - அப் பிரகாரம், செய்க -
செய்யக்கடவீராக,   என்ன   -   என்று   ஆஜ்ஞாபிக்க, ஊனிலா -
மாமிசமில்லாத, தூய - பரிசுத்தமாகிய, நல்ல - நலமான, கவளங்கள் -
அன்னக்  குவியல்களை, உழையர் - வேலைக்காரர்களாகிய பாகர்கள்,
நீட்ட    -   கொடுக்க, மானம்   - அபிமானத்தையுடைய,     மா -
அவ்வியானையானது,    வாங்க - வாங்கிப் புசிக்க, கண்டு - அதைப்
பார்த்து,    மன்னனும்   -   அரசனும், வியந்து - ஆச்சரியமடைந்து,
பின்னை   - பிறகு,  கானில்  - மனோஹரமென்னும் உத்தியானத்தில்
இராநின்ற,