வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 399


 

மாமிசமுண்ணலினின்றும்,  தேன்  - மதுவுண்ணலினின்றும், கள்ளின் -
கள்ளுண்ணலினின்றும்,   மீண்டு  -  திரும்பி (அதாவது : அவற்றைப்
பொசிப்பதில்லையென்று நிவர்த்தி விரதங்கொண்டு), மன்னியகுணத்து -
(தாதாத்மிய     ஸ்வரூபமான     சுத்தோபயோகத்தைப்  பெறும்படி)
பொருந்திய    குணத்தில்,    நிற்றல் - (ஸம்மியக்மதிஞான பூர்வமாக
ஸ்ரீுதஜ்ஞானாப்பியாசம்    பண்ணி)      நிற்றலும்,      மாயமில் -
மாயாச்சாரமில்லாத,    மனத்தர்   ஆதல் - மனதுடையவர்களாதலும்,
(ஆகிய   இச்சுபோபயோகங்கள்),    பன்னரும்   - சொல்லுதற்கரிய,
குலத்தை   - மேலான   குலத்தை,    பண்ணும் - செய்யும்படியான,
பான்மைக்கு - பக்குவத்திற்கு, நிமித்தம் - காரணங்களாகும், என்றான்
- என்று சொன்னான், எ-று.                               (40)

853. அருந்தவ னுரைத்த வின்சொ லறவமிர் தார மாந்தித்
     திருந்திய குணத்தி னாளும் புலைசுதேன் கள்ளி னீங்கிப்
     பொருந்துவ சீல மற்று மாற்றுவ பணிந்து கொண்டாள்
     திரிந்துபோய் முனிவன் கானின் விசித்திர மதியைச் சேர்ந்தான்.

     (இ-ள்.)  (இவ்வாறு), அருந்தவன் - அரிதாகிய தவத்தையுடைய
ப்ரீதிங்   கரமுனிவனால்,    உரைத்த - சொல்லப்பட்ட, இன்சொல் -
இனிமையான    வசனமாகிற,  அறவமிர்து - தர்மாமிருதத்தை, ஆர -
நிறைவாக,    மாந்தி   - பொசித்து (அதாவது : கேட்டு), திருந்திய -
திருத்தமாகிய,     குணத்தினாளும்    -     குணத்தையுடைய அந்த
புத்திஷேனையும்,     புலைசு       -   மாமிசத்தினின்றும், தேன் -
மதுவினின்றும், கள்ளின் - கள்ளினின்றும், நீங்கி - விலகி (அதாவது :
அவற்றை   விட்டு  நிவர்த்தி விரதம் ஏற்றுக்கொண்டு), பொருந்துவ -
தனக்கிசையும்படியான,   சீலம் - சீல விரதங்களின் அமிசங்களையும்,
மற்றும் - பின்னையும், ஆற்றுவ - செய்யத்தக்கவைகளையும், பணிந்து
- முனிவரனை    வணங்கி,    கொண்டாள்     - கைக்கொண்டாள்,
(அதன்மேல்),     முனிவன்     - பிரீதிங்கர    முனிவன், திரிந்து -
ஆஹாரங்கொள்ளாமல்    விக்கினமாகி, போய் - சென்று, கானின் -
உத்யானத்திலுள்ள,    விசித்திரமதியை    - விசித்திரமதி முனிவனை,
சேர்ந்தான் - அடைந்தான், எ-று.                           (41)

854. விசித்திர மதியும் வீர விளம்பித்த தென்கொ லென்னப்
     பவித்திர முனியும் பைம்பொற் கணிகைபாற் பட்ட வெல்லாம்
     விரித்துட னுரைப்பக் கேட்டு வியந்துவெய் துயிர்த்து வேட்கை
     யுருத்தெழ விருக்கை நாம முருவமுந் தெரியக் கேட்டான்.

      (இ-ள்.)    (அவ்வாறு    சேர்ந்தவுடன்),   விசித்திரமதியும் -
விசித்திரமதிமுனியும்,   (இப்பிரீதிங்கர   முனிவரனை நோக்கி), வீர -
வீர்யாச்சாரத்தைப்    பலமாக     அனுஷ்டிக்கின்ற   வீரபுருஷனே!,
விளம்பித்தது    - நீ   திரும்பிவர   இவ்வளவு காலதாமதமானதற்கு,
(அப்பட்டணத்தில் நேர்ந்த காரணம்), என் கொல் - யாது?,