மற்ற காம இன்பஹேதுக்களாகும், அன்றி - அப்படியல்லாமல், (ஸ்திரீ
புருஷர் சேரின்), இது - இக்காம அனுபவமானது, பிணம் -
பிரேதத்தோடொக்கும், (ஆதலின், விருப்பமற்ற என் உறவை நீ
விரும்புவது வெறுக்கத்தக்க செய்கையாகும், இதை நீ விட்டுவிடுவாய்
என்று சொன்னாள்; அதற்கவன், பெண்ணே! பிணத்தின்
சேர்க்கையிலும் இன்பமேயிருக்கின்றது; ஆதலின்), பிணத்தைச்
சேர்ந்தால் - அப்படியாகிய பிரேதேத்தைக் கூடினால், பிழைத்தது -
தவறான காரியமானது, என் - என்ன, அணையுமேல் - ஒருவன்
அப்பிணத்தைக் கூடுவானானால், பெரிய இன்பம் - அதுவே பெரிதான
சுகம், என்ன - என்று சொல்ல, அவள் - அக்கணிகையானவள், சால
- மிகவும், சுளிந்து - முகங்கடுத்து, வெறுத்து - இம்முனியின்மேல்
வெறுப்பையடைந்து, போனாள் - பேசாமல் விலகிப் போயினாள்,
எ-று. (46)
859. மாலைசாந் தெண்ணெய் சுண்ணம் மஞ்சள்வான் கலிங்கம் வேறாச்
சாலநா ளிருக்கி னுந்தங் குணஞ்செவ்வி யழிந்தி டாவா
மூனுலா முடம்பைச் சேர்ந்தா லொருகணத் தழியும் வண்ணம்
வானெலாம் வணக்குஞ் சீல மாய்தலெண் ணாது சொன்னான்.
(இ-ள்.) மாலை - புஷ்பமாலையும், சார்ந்து - சந்தனாதிகளும்,
எண்ணெய் - வாசனை யெண்ணெயும், சுண்ணம் - கதம்பத்தூள்களும்,
மஞ்சள் - மஞ்சளும், வான் - அழகிய, கலிங்கம் - பட்டு - வஸ்திர
முதலானவைகளும், வேறா - தனியாக, சாலநாள் - வெகுகாலம்,
இருக்கினும் - இருந்தாலும், தம் - அவைகளுடைய, செவ்விகுணம் -
அழகும் ஸ்வபாவமாகிய குணமும், அழிந்திடாவாம் -
கெடாதவையாகும், ஊனுலாம் - மாம்ஸாதிகள் வியாபித்த, உடம்பை -
சரீரத்தை, சேர்ந்தால் - அடைந்தால், ஒரு கணத்து - அடைந்த ஒரு
ஸமயகாலத்துள், அழியும் - குணம் கெட்டு விபாவமடைந்து போம்,
வண்ணம் - இந்த விதத்தையும், (மோகத்தால்), வானெலாம் -
தேவர்களெல்லாம், வணங்கும் - வணங்கும்படியான, சீலம் -
சீலாச்சாரமானது, மாய்தல் - நாசமாகிக் குணம் கெட்டு
விபாவமடைவதையும், எண்ணாது - மனதில் ஆலோசிக்காமல், (இந்த
விசித்திரமதி முனிவன்), சொன்னான் - (கணிகையினிடத்தில்
காமானுபவமாய்ச் சேருவோம், நீ இசைவாயாக என்று
தன்னிலைமைக்குத் தகாத வார்த்தையைச்) சொல்லினான்,
எ-று. (47)
860. மோகத்தால் முடையு டம்பின் நாற்றத்தை முனித லின்றிப்
போகத்தாற் கழுமி நிற்கும் புல்லறி வாள ராகுஞ்
சேகற்கா முடையு டம்பைச் சேர்தன்மற் றொன்று மென்றிட்
டாகத்தா னினைக்க மாட்டா தருந்தவத் திழிந்து நின்றான்.
(இ-ள்.) (மேலும்) மோகத்தால் - மோஹினீய
பரிணாமோதயத்தால், முடை - துர்க்கந்தமுடைய, உடம்பின் -
சரீரத்தினது, நாற்றத்தை - அத்துர்க் |