கந்தத்தை, முனிதலின்றி - (ஆத்ம ஞானத்தால் பேத பாவனை
பாவித்து) வெறுப்படையாமல், போகத்தால் - அச்சரீரத்தின்
காமபோகத்தில், கழுமிநிற்கும் - பொருந்தி நிற்கின்றவர்கள்,
புல்லறிவாளர் ஆகும் - அற்ப புத்தியையுடைய
அஞ்ஞானிகளாவார்கள், *சேகற்கு - மாமிச பட்சண பட்சிகளுக்கு,
ஆம் - இரையாகும்படியான, முடையுடம்பை - துர்நாற்ற சரீரத்தை,
சேர்தல் - காமத்தினால் சேர்தலினால், ஒன்றுமென்று இட்டு - சுகம்
பொருந்துமென்று கருதி, ஆகத்தான் - (அதனால்) ஆத்மனுக்கு
பந்தமாகும்படியான அசுபகர்மத்தினது தன்மையை நெஞ்சினால்,
நினைக்கமாட்டாது - தியானித்தறிய முடியாமல், அரும் - அரிதாகிய,
தவத்து - தபஸினின்றும், இழிந்து - நழுவி, நின்றான் - கெட்ட
நிலைமையை அடைந்தான், எ-று.
*சேவலுக்கு என்னும் பதம், செய்யுளில், சேகற்கு, என வந்தது.
நிற்கும், ஆகும் - இழிவால் அஃறிணை முடிபுபெற்றன; திணை
வழுவமைதி, நிற்கும். வினையாலணையும் பெயர். (48)
861. புழுக்குலம் பொதிந்த யாக்கை புனிதனேன் பொருந்தி னேன்முன்
னழுக்குடம் பிதன்கட் சென்ற வார்வத்தா லென்று தன்னை
யிழித்திடா தழுக்குச் சோரும் புழுக்குலத் திச்சை தன்னால்
வழுக்கினான் மாற்றை யாற்றக் கெடுக்குமா தவத்தின் மாதோ.
(இ-ள்.) புழுக்குலம் - கிருமிக் கூட்டங்கள் பொதிந்த -
நிறைந்த, யாக்கை - சரீரத்தை, புனிதனேன் - பவித்திராத்மாவாகிய
யான், முன் - முன்னே, அழுக்கு - மலங்களோடு கூடிய, உடம்பிதன்
கண் - இச்சரீரத்தினிடத்திலே, சென்ற - சென்றதாகிய, ஆர்வத்தால் -
ராக பரிணதியினாலே, பொருந்தினேன் - சேர்ந்து வருத்தமடைந்தேன்,
என்று - என்று, தன்னை - தான் என்னும் ஆத்மனை, இழித்திடாது -
(அசுத்தோப யோகத்திற் சென்றனைணே யென்று) நிந்தனை
பண்ணாமல், அழுக்கு சோரும் - மலங்கள் சொரிகின்ற, புழுக்குலத்து
- புழுக்கூட்டமாகிய சரீரத்தின்மேலாகிய, இச்சைதன்னால் - மோஹ
வாஞ்சையினால், மாற்றை - இச்சம்சார பிறப்பை, ஆற்ற - மிகவும்,
கெடுக்கும் - கெடுத்து ஸமயஸாரம் தரும்படியான, மா - பெருமை
பொருந்திய, தவத்தின் - தபஸினின்றும், வழுக்கினான் - நழுவி
விட்டான், எ-று. (49)
862. பொறிப்புலத் தெழுந்த போகத் தாசையைப் போக விட்டு
வெறுத்தெழு மனத்த ராகின் வீட்டின்பம் விளையு மன்றி
மறுத்தெதி ராகச் செல்லின் மாற்றிடைச் சுழல்வ ரென்னுந்
திறத்தினை நினைத்த லில்லான் சீலத்தி னிழிந்து சென்றான்.
(இ-ள்.) (இன்னும் மனிதர்), பொறி - பஞ்சேந்திரியங்களின்,
புலத்து - விஷயங்களிலே, எழுந்த - உண்டாகிய, போகத்து -
போகோபபோகங்களினா |