404மேருமந்தர புராணம்  


 

லாகிய, ஆசையை - ராகத்தை, போகவிட்டு - பேத பாவனை பண்ணி
நீக்கி,  வெறுத்து -  அவ்விந்திரிய விஷய போகங்களில் விராகமுற்று,
எழும்    -    சுத்தாத்தும ஸ்வரூபத்தில் உண்டாகிய, மனத்தராகில் -
ஏகாக்கிர    சித்தத்தராகினால்   (அவர்கட்கு), வீட்டின்பம் - மோட்ச
சௌக்கியம்,   விளையும் - உண்டாகும், அன்றி - அப்படியில்லாமல்,
(அவர்கள்).  மறுத்து - அதனைத் தடைசெய்து, எதிராகச் செல்லின் -
அதற்கு   விரோதமாக    இந்திரிய விஷய போகங்களில் ராகமுற்றுச்
சென்றால்,   மாற்றிடை   - சம்ஸாரத்தில்,  சுழல்வர் - சுழலுவார்கள்,
என்னும்    - என்கின்ற,    திறத்தினை -    சுருதஞான  விதத்தை,
நினைத்தலில்லான்       -      எண்ணாதவனாகி,     சீலத்தின் -
சீலாச்சாரத்தினின்றும்,    இழிந்து   -  நழுவி, சென்றான் - தாழ்ந்த
ஸ்திதியிற் புகுந்தான், எ-று.                               (50)

863. உண்டுநாம் விட்ட வல்லா வுருவில்லை யுலகத் தின்கண்
    வண்டுலாங் கூந்த லாகி மாசெலாந் திரண்ட தன்றிக்
    கண்டதொன் றில்லை காமங் கண்ணினைப் புதைத்த காலத்
    துண்டுநாம் விட்ட வாசை யுவர்த்துமென் றுணர்வி லாதான்.

     (இ-ள்.)   நாம்   - சேதனாஸ்வரூபமுள்ள ஆத்மனாகிய நாம்,
உண்டு    -   அனாதியாகவே    அசுத்தசேதனையால் அனுபவித்து,
விட்டவல்லா  - நீக்கப்பட்டதல்லாத, உருவு - புத்கல பதார்த்தமானது,
உலகத்தின்  கண்  - லோகத்திலே, இல்லை - கிடையாது (அதாவது :
உலகத்துள்ள   சகல     புத்கலங்களையும்    ஆத்மன்     அசுத்த
சேதனையினால்,  பாவகர்ம,   திரவியகர்ம, நோகர்மத்தால்  பந்தித்து
நின்றதேயாகும்,    ஆதலின்   இதைக்கொண்டு     ஆராயுமிடத்து),
உலகத்தின்கண்    -    இவ்வுலகில்,    (ஸ்த்ரீரூபமானது),  வண்டு -
வண்டுகளானவை,     உலாம்    - உலாவும்படியான,   கூந்தலாகி -
அளகத்தை    யுடையதாகி,     மாசெலாம்    -     துர்கந்தமுள்ள
அணுத்திரள்களெல்லாம்,    திரண்டதன்றி    -     ஸ்கந்தரூபமாகப்
பரிணமித்ததன்றி, (இதில்),கண்டதொன்றில்லை - பார்த்தது வேறொன்று
மில்லை,    (ஆதலின்),    காமம்   - காமராகமானது, கண்ணினை -
ஆத்மனது   தர்சனத்தை, புதைத்தகாலத்து   - மறைத்த அக்காலத்து,
உண்டு    - அனேகவாரம்   அனுபவித்து, நாம் - நம்மால், விட்ட -
விடப்பட்ட,   ஆசை   -  இக்காம வாஞ்சையை, உவர்த்துமென்று -
வெறுப்போமென்று,   உணர்விலாதான்   - இந்த விசித்ரமதி முனிவன்
ஆலோசித்தல் இல்லாதவனாகினான், எ-று.                    (51)

864. விலையிலா வாச மாலை தூமத்தால் வேய்ந்த கூந்தற்
     றலையினின் றிழிந்த காலைத் தான்றுறந் திட்ட தேபோல்
     மலையன தவத்து வேடங் கண்டுமுன் வணங்கி மாண்ட
     நிலையினின் றிழியப் பின்னை நேரிழை யிகழ்ந்திட் டாளே.

     (இ-ள்.) விலையிலா  - விலை மதிப்பில்லாத (அதாவது : அதிக
விலையுள்ள),   வாசம்     -   வாசனைகளையுடைய,      மாலை -
புஷ்பமாலையானது, தூமத்தால் - அகிற்றூப