மாமிசம் முதலியவைகளை) மென்றுதின்றொழுகுபவனும், அப்புரத்து
வேந்தன் - அந்நகரத்தரசனும், ஆம் - ஆகிய, கந்தமித்திரன்
என்பான் - கந்தமித்ரனென்னும் பெயருடையவன், உவப்பதோர்
படியின் - சந்தோஷத்தை யடையும் விதத்தில், மடையனாய் -
அவனுக்குச் சமையல்காரனாக அமர்ந்து, ஊனை - மாமிசங்களை,
சமைத்துக் காட்டி - பாகம் செய்து அவன் அதேமாதிரி
தின்னும்படியாகக் காண்பித்து, மற்று - பிறகு, அந்த மன்னனால் -
அவ்வரசன் சகாயத்தினால், (அவளைத் தன்னோடு கூடும்படி
அரசனால் அவளுக்கு ஆக்ஞையிடச் செய்து), துடியிடை -
உடுக்கைபோலு மிடையையுடைய, அப்புத்திசேனை தன்னகம் - அந்த
புத்தி ஷேணையினிடத்தில், துன்னினான் - சேர்ந்தான்,
எ-று. (54)
867. மௌவலங் குழலிக் காக மயங்கிமா தவத்தை விட்டூன்
செவ்வியைக் காட்டித் தீற்றச் செறிந்திட்ட பாவந் தன்னால்
அவ்வுடல் விட்டு வந்தவ் வளியனிவ் வானை யானா
னிவ்வனத் தியான்றி லோக பச்சத்தி யியம்பக் கேளா.
(இ-ள்.) (இவ்வாறு), மௌவல் - முல்லைப் பூமாலையணிந்த,
அம் -அழகிய, குழலிக்காக - அளகபாரத்தையுடைய அந்தக் கணிகை
மாதிற்காக, மயங்கி - மோஹமடைந்து, மா - பெருமை பொருந்திய,
தவத்தை - தபோநிலைமையை, விட்டு - நீங்கி, ஊன் - மாமிசத்தின்,
செவ்வியை - பாகநலத்தை, காட்டி - அரசனுக்குக் காட்டிச்
சந்தோஷத்தை யுண்டாக்கி, தீற்ற - ஊட்டி (அவ்வேசியுடன் கூட
அச்செய்கைகட்காக), செறிந்திட்ட - தன்னைச் சேர்ந்த, பாவந்தன்னால்
- பாவத்தால், அவ்வுடல்விட்டு - அந்த மனித சரீரத்தைவிட்டு
ஆயுரவஸானத்தில், அவ்வளியன் - அந்த ஏழை அஞ்ஞானியாகிய
விசித்ரமதி முனிவன், இவ்வியானையானான் - மேக விஜயமென்னும்
பெயருடைய இந்த யானையாக உற்பவித்தான், (இப்போது), இவ்வனத்து
- இந்த உத்தியானத்திலே, யான் - நான், திலோகப் பச்சத்தி -
திரிலோகப் பிரஜ்ஞப்தி என்னும் பரமாகமத்தை, இயம்ப - சொல்ல,
கேளா - இவ்வியானையானது கேட்டு, எ-று.
இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (55)
868. அப்பிறப் பறிந்து நொந்திட் டவலமுற் றழுந்தி யின்று
மெய்ப்பட வுணர்வு தோன்ற விரதசீ லத்த தாய
திப்படித் திதன்றன் செய்கை யேந்திள முலையி னார்தந்
துப்புறழ் தொண்டைச் செவ்வாய்ப் பயனிது சொல்லி னென்றான்.
(இ-ள்.) அப்பிறப்பு - பூர்வத்தில்தான் விசித்திரமதியென்னும்
முனிவனாகி யிருந்த அந்த ஜென்மத்தை, அறிந்து - (இந்த
ஆகமஸாரங் கேட்ட தெளிவினால் ஆத்மசக்தி கொஞ்சம்
அதிகமாகவும், கர்மசக்தி உபசமமாகவும், அதனாலுண்டாகிய
பவஸ்மிருதியால்) தெரிந்து, நொந்திட்டு - மனம் நொந்து தன்னை |