வச்சிராயுதன ணுத்தரம்புக்க சருக்கம் 409


 

    விரகினாற் றூண்டிற் பொன்னை விழுங்கிய மீனைப் போன்றுந்
    தெரிவின்றி நுகர்ந்த வெல்லாந் தீரயான் றுறப்ப னென்றான்.

     (இ-ள்.)  (அவ்வாறு வினவிப்  பின்னரும்), எரியிடை - ஏற்றிய
விளக்கின்    நெருப்பில்,    பதங்கம்போன்று    -   (சக்ஷுரிந்திரிய
விஷயத்தினால்   வந்து வீழ்கின்ற) வீட்டில் பூச்சிபோன்றும், இளம் -
இளமையாகிய,    பிடிக்களிறுபோன்றும் - (சரீரேந்திரிய விஷயத்தில்)
பெட்டை     யானைபோலவும்,   கரி - யானையினுடைய, மதத்து -
மதஜலத்தில், அளியைப் போன்றும் - கிராணேந்திரிய விஷயத்தினால்
வந்து   மொய்க்கின்ற வண்டுக் கூட்டங்கள் போலவும், கானத்தின் -
கீதத்தில்,   அசுணம்போன்றும் - (பேஸ்ரீத்திர விஷயத்தினால் மயக்க
மடைகின்ற)   கேகயப்புள் போலவும், விரகினால் - தந்திரத்தாலாகிய,
தூண்டில் - தூண்டில் முள்ளில் பற்றிய, பொன்னை - நாகப்பூச்சியை,
விழுங்கிய   -    ரஸநேந்திரிய    விஷயத்தினால்   விழுங்குகின்ற,
மீனைப்போன்றும்    -    மஸ்யத்தைப்போலவும்,    தெரிவின்றி -
மயக்கத்தினின்றும்    தெளிதலின்றி, (அஞ்ஞானத்தினாலே), நுகர்ந்த
வெல்லாம்  - அனுபவிக்கப் பெற்றதனாலுண்டாகிய பாபங்களெல்லாம்,
தீர  - நீங்கும்படியாக,   யான் - நான், துறப்பன் - இந்திரிய விஷய
வாஞ்சையை முழுதும் நீங்கித் தபசைக் கைக்கொள்வேன், என்றான் -
என்று சொன்னான், எ-று.                                 (50)

873. வினைப்பயன் றன்னை வேங்கை முன்விடை போல வஞ்சிச்
    சினக்களிற் றுழவன் செம்பொன் முடியினை மகனுக் கீந்திட்
    டினத்திடை நீங்கிப் போகு மேறென வேந்து கொங்கை
    மினற்கொடிக் குழாத்து நீங்கி மீண்டுபோய் வனம்புக் கானே.

     (இ-ள்.)   (அவ்வாறு   சொல்லிப்  பின்னர்), சினம் - கோபம்
பொருந்திய   களிற்றுழவன்  - யானைக்குத் தலைவனாகிய ரத்னாயுத
மஹாராஜன்,    வினை      - கருமங்களினது,    பயன் தன்னை -
உதயத்தினாலாகிய பலங்களுக்கு, வேங்கைமுன் - புலியினெதிர்ப்பட்ட,
விடைபோல - விருஷபத்தைப்போல, அஞ்சி - பயந்து, செம்பொன் -
சிவந்த  பொன்னாலாகிய, முடியினை - கிரீடத்தை, மகனுக்கு - தனது
குமாரனுக்கு,    ஈந்திட்டு     - பட்டாபிஷேக பூர்வமாகக் கொடுத்து,
இனத்திடை - பசுமாட்டுக் கூட்டத்தினின்றும், நீங்கிப்போகும் - பிரிந்து
போகின்ற,   ஏறென - விருஷபத்தைப்போல, ஏந்தும் - மார்பிற்றரித்த,
கொங்கை     -       ஸ்தனங்களையுடைய, மினல்கொடி - மின்னல்
கொடிபோலப் பிரகாசம் பொருந்திய ராஜ ஸ்திரீமார்களின், குழாத்து -
கூட்டத்தினின்றும், நீங்கி - விலகி, மீண்டு - மறுபடியும், வனம் - முன்
சொன்ன    முனிவரனிருக்கின்ற மனோகரவனத்தில், போய் - சென்று,
புக்கான் - அம்முனிவரிடஞ் சேர்ந்தான், எ-று.                 (61)

874. இடையறா தேற்ற காலத் தீயுமோர் முகிலைப் போலும்
    வடிவுடைத் தடக்கை வேந்தன் வச்சிர தந்தன் பாதம்