பிராணிகளையும், படுக்கவேண்டி - துன்பப்படுத்திக் கொல்லவேண்டி,
சாபம் - வில்லையும், செஞ்சரங்கள் - செம்மையாகிய (அதாவது :
ஆயுத நேர்மைப்படி அமைந்த) அம்புகளையும், ஏந்தி - தரித்து,
திரிகின்ற தனையான் - திரிவதை நிகர்த்தவனாகிய அவ்வேடன்,
கோபந்தானாதியுள்ளான் - அனந்தானு பந்தியென்னும்
குரோதமுடையவனாகி, கொலையில் - கொலை செய்வதில்,
ஆனந்தத்தோடும் - ஹிம்ஸானந்தத்துடன், உயிர்கட்கு -
ஜீவன்களுக்கு, வேபம் - நடுக்கத்தை, ஆக்கி - உண்டுபண்ணி, வந்து
- ஒரு பர்வத சமீபத்தில் வந்து சேர்ந்து, விலங்கல் மேல் -
அப்பர்வதத்தின் மேல், ஏறினான் - எத்ரேச்சையாக ஏறினான், எ-று.
மூன்றிடத்தும், தான் - அசை. (68)
881. வரைமிசை யோகி னின்ற வச்சிரா யுதனைக் காணா
வெரியென விழித்து வேரத் தெழுந்ததோர் கோபத் தீயால்
வரையினை முருக்கு வான்போற் கணத்திடை வந்து கூடித்
தெரிவிலான் செய்த தீமை செப்புதற் கரிய தொன்றே.
(இ-ள்.) (அவ்வாறு ஏறிய பின்), வரைமிசை - அந்தப்
பர்வதத்தின்மேல், யோகின் - யோகத்திலே, நின்ற - நிலைபெற்றிருந்த,
வச்சிராயுதனை - வச்சிராயுத மஹாமுனியை, காணா - கண்டு,
எரியென - அக்கினிபோல, விழித்து - கண்ணை விழித்து, வோத்து -
வைரபாவத்தினால், எழுந்த - உண்டாகிய, ஓர் - ஒப்பற்ற,
கோபத்தீயால் - கோபாக்கினியால், வரையினை - பர்வதத்தை,
முருக்குவான் போல் - அழிப்பவன்போல, கணத்திடை - ஒருக்ஷண
நேரத்திற்குள்ளே, வந்து - ஓட்டமாக வந்து, கூடி - முனிவரன்
சமீபஞ்சேர்ந்து, தெரிவிலான் - அறிவிலியாகிய அவ்வேடன்,
(அவர்க்குக் கொடுமையைச் செய்யத் தொடங்கினான்), செய்த -
அவ்வாறு செய்த, தீமை - உபஸர்க்கம், செப்புதற்கு - சொல்வதற்கு,
அரியது - அருமையானதாகிய, ஒன்று - ஒன்றாம், எ-று.
‘என்றே" என்பதில், ஏ - அசை. (69)
882. கூர்நுனைப் பகழி கொண்டு செவியிடைக் குடையுங் குத்துங்
கார்முகங் கொண்டு நின்று மத்தகத் தடிக்குங் கையிற்
கூர்முளின் சலாகை யேற்றுங் குறங்கிடைக் கொடியைச் சுற்றி
நீர்விழக் கடையும் பாதத் தடிக்குநீண் முளையை நின்றே.
(இ-ள்.) (அவ்வாறு கொடுமை செய்யத் தொடங்கிய அவன்),
கூர்நுனை - கூர்மை பொருந்திய முனையையுடைய, பகழி - அம்பை,
கொண்டு - கையிற்பற்றிக்கொண்டு (அதனால்), செவியிடை -
அம்முனிவனுடைய காதிலே, குடையும் - குடைவானும், குத்தும் -
குத்துவானும், கார்முகங்கொண்டு - வில்லையெடுத்துக்கொண்டு, நின்று
- எதிரில் நின்று, மத்தகத்து - தலையில், அடிக்கும் - அடிப் |