414மேருமந்தர புராணம்  


 

பவனும்,   கையில்  -  அம்முனிவரனுடைய  கையில், கூர் - கூர்மை
பொருந்திய,   முள்ளின்சலாகை   - முள்ளைப்போன்ற சலாகைகளை,
ஏற்றும்   - ஏற்றுவானும், குறங்கிடை - துடையில், கொடியைச்சுற்றி -
கொடியினைச்சுற்றி,   நீர்விழ   -   செந்நீர்விழ (அதாவது : இரத்தஞ்
சொரியும்படி ),       கடையும் - கடைபவனும்,   பாதத்து - காலில்,
நீண்முளையை      - நீண்ட      முளைகளை,       (அதாவது :
முளைக்கொம்புகளை), அடிக்கும் - அடிப்பவனும், நின்று  - இன்னும்
நீங்காமல் நின்று, எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                   (70)

883. அச்சுமுட் கொண்டு சுற்று மடித்திடும் வயிர வாணி
     யுச்சியுட் புடைத்தி ழுத்திட் டோடியங் கெறியுங் கல்லால்
     கைச்சிலை கணையைக் கோத்துக் காதள வெய்த வாங்கி
     யச்சுறத் தோன்று மிவ்வா றிடும்பைக ளனேகஞ் செய்தான்.

     (இ-ள்.) அச்சுமுட்கொண்டு   - அச்சங்கரணை முள்ளுகளைக்
கொண்டு,      சுற்றும்      - முனிவனைச் சுற்றிலும், அடித்திடும் -
அடிப்பவனும்,    வயிரவாணி     - வைரம் பொருந்திய ஆணிகளை,
உச்சியுள்   - தலையில், புடைத்து - அடித்து, இழுத்திட்டு - இழுத்து,
ஓடி -   தூரத்தில் சென்று, அங்கு - அவ்விடத்தினின்றும், கல்லால் -
கற்களினால், எறியும்  - எறிபவனும், கை - தன்கையிலிராநின்ற, சிலை
- வில்லில்,   கணையை    -    அம்புகளை,  கோத்து - தொடுத்து,
காதளவெய்த - தன் காது பரியந்தம் அடையும்படி, வாங்கி - நாரியை
இழுத்து,    அச்சுற    - யாவர்களும்     நடுங்கும்படி, தோன்றும் -
தோன்றுபவனும், (ஆகி), இவ்வாறு - இந்தப் பிரகாரம், இடும்பைகள் -
உபஸருக்கங்களை,   அனேகம் - இன்னும் பலவாகவும்,  செய்தான் -
செய்தனன், எ-று.                                        (71)

884. எரிசொரிந் திட்ட வண்ண மிவன்செய்த விடும்பை யெல்லாந்
    தெரிவதொன் றின்றி நின்றம் முனிவனும் பொறுத்துச் சிந்தைத்
    தருமநற் றியானத் தோடுஞ் சென்றுதன் னுடம்பு நீங்கித்
    திருமலி யுலகத் துச்சி சவ்வட்ட சித்தி புக்கான்.

     (இ-ள்.) எரி - அக்கினியை, சொரிந்திட்ட வண்ணம் - சொரிந்த
விதம்    போல,    இவன் - இவ்வேடனால், செய்த - செய்யப்பட்ட,
இடும்பையெல்லாம்   -   துன்பங்களையெல்லாம், தெரிவதொன்றின்றி
நின்று    தெரிதலில்லாமல் (ஆத்ம    பாவனையிலேயே   மனவசன
காயங்களை   நிறுத்தி),  அம்முனிவனும் - அவ்வஜ்ராயுத முனிவனும்,
பொறுத்து    -   உபசருக்கமென்னும் வதை பரீஷஹ ஜெயம் செய்து,
சிந்தை     -  மனது, தரும நற்றியானத்தோடும் - (ஆஜ்ஞா, அபாய,
விபாக,   சம்ஸ்  தான விசயமென்னும்) நல்ல தருமத்தியானத்தோடும்,
சென்று   - செல்ல,   தன்னுடம்பு - தனது சரீரத்தை, நீங்கி - விட்டு,
உலகத்துச்சி - ஊர்த்துவ லோகத்