பொருந்திய ஸ்த்ரீமார்களுடைய, வதனமென்னும் - முகமென்கிற,
அரவிந்தம் - தாமரை மலரானது, மலர - விகஸனத்தை யடையும்படி,
இரவிபோல் - சூர்யன் போல், தோன்றும் - தோற்றுகின்ற, தாபம் -
பிரதாபத்தையுடைய, அரசன்றான் - ராஜாவாகிய, அருகதாசன் -
அர்ஹத்தாஸனென்னும் பெயருடையவன், தேவி - அவனுடைய
பட்டத்தரசியானவள், சுரி - சுருண்ட, குழல் - அளகத்தையும், கரும்
- கறுத்த, கண் - கண்களையும், செவ்வாய் - சிவந்த வாயையுமுடைய,
தோகை - ஆண்மயில் போன்றவளாகிய, சுவ்வதை யென்பாள் ஆம் -
ஸுவ்ரதை யென்னும் பெயருடையவளாவள், எ-று.
தான், மற்று - அசைகள். (6)
897. அச்சுதைக் கிறைவ னாய வரதன மாலை யந்தக்
கச்சணி முலையி னாட்குப் புதல்வனாய்ப் பிறந்த காலை
நச்சுவேல் வேந்தற் கஞ்சி மன்னவர் நடுங்க வையத்
திச்சையை நிறைத்து வீத பயனிவ னென்று சொன்னார்.
(இ-ள்.) அச்சுதைக்கு - அச்சுதகல் பத்துக்கு, இறைவனாய -
நாதனாகிய, அரதனமாலை - பூர்வ இரத்தினமாலை யென்பவள், அந்த
-இப்போது சொல்லப்பட்ட அந்த, கச்சணி - இரவிக்கையணிந்த,
முலையினாட்கு - ஸ்தனங்களையுடைய ஸுவ்ரதைக்கு, புதல்வனாய் -
புத்திரனாக, (பிறந்தாள்),பிறந்த காலை - அவ்வாறு ஜனித்த காலத்தில்,
நச்சு - விஷம் பொருந்திய, வேல் - வேலாயுதத்தையுடைய, வேந்தற்கு
- அருகத்தாஸ மஹாராஜனுக்கு, மன்னவர் - எல்லாத்தேச வாசர்களும்,
நடுங்க - பயத்தையடைய, வையத்து - இவ்வுலகிலுள்ளவர்களுடைய,
இச்சையை - வறுமையாலுண்டான பொருளாசையை, நிறைத்து -
நிறையச் செய்து, (அதாவது : தரித்திரர்க்கு மிகுதியாகத்
தானங்கொடுத்து), இவன் - பிறந்த இப்புத்திரன், வீத பயனென்று -
வீத பயனென்று, சொன்னார் - (பெரியோர்) நாமகரணஞ் செய்தார்கள்,
எ-று. (7)
898. மற்றந்த மன்னன் றேவி வடிநுனைப் பகழி வாட்கட்
சிற்றிடைப் பரவை யல்குற் சினத்தைச் சிறுவ னாகிச்
சுற்றிய காத லால்வந் திரதனா யுதனுந் தோன்ற
வெற்றிவேல் வீரன் பேரும் விபீடண னென்று சொன்னார்.
(இ-ள்.) மற்று - பின்னையும், அந்த மன்னன் - அந்த
அருகத்தாஸ மஹாராஜனுடைய, தேவி - மற்றொரு தேவியாகிய, வடி -
கூர்மைபெற்ற, நுனை - நுனியையுடைய, பகழி - அம்புபோன்ற, வாள்
- ஒளிபெற்ற, கண் - கண்களையும், சிற்றிடை - மெல்லிய
இடையையும், பரவை - அகன்ற, அல்குல் - அல்குலினையுமுடைய,
சினதத்தை - ஜினதத்தைக்கு, இரதனாயுதனும் - பூர்வம் இரத் |