கட்கு - இப்பூமிக்கு, இறைவராக - அரசர்களாக, (அப்போது), நின்ற -
நிலை பெற்ற, தம் பகைவன் - இவர் தம் சத்துருவாகிய
பிரதிவாஸுதேவன், வெம்பி - (இவர்களதிகாரத்தைப் பொறாதவனாகிக்)
கோபித்து, (யுத்தோன் முகனாக, இவ்விருவகையாரின்
படைகளுமெதிர்த்தன; அங்ஙனமெதிர்க்கவே இருவகைப்படை
வீரர்களும்), மலைமிசை - உதய பர்வதத்திலெழுந்தருளும், பருதியோடு
- சூர்யனோடு, மால் - பெரிதாகிய, கடலிரண்டு வந்து - இரண்டு
ஸமுத்திரங்கள் வந்து, நிலமிசை - பூமியின்மேல், பொருவபோன்று -
பொருவதுபோல, (சூரியனைப் போன்ற தங்கள் அரசர்கள்
மலைபோன்ற யானைகளில் ஏறிவரத் தாங்கள் கடல்கள்போல் வந்து),
நின்று - நேரே நின்று, போர் தொடங்கினார் - யுத்தம் செய்ய
வாரம்பித்தார்கள், எ-று. (10)
901. துரகங்க டிரைக ளான சுறாவெறி வீர ரானார்
கரிமக ரங்க ளான காற்படை கடல தாகப்
பொருபடை வீரர் கைவாள் புரண்டெழு மீன் ளாகக்
கரைசெறி நாவாய் தேராய்க் காவலர் காம ரானார்.
(இ-ள்.) (அவ்வாறு போர் தொடங்கியபோது), காற்படை -
பதாதிப் படைகள்,கடலதாக - ஸமுத்திரமாக, துரகங்கள் - குதிரைகள்,
திரைகளான - அலைகளாயின, எறி - ஒருவர்க்கொருவர் மேலே
ஆயுதங்களையெறிந்து சண்டை தொடுக்கின்ற, வீரர் - ரணவீரர்கள்,
சுறாவானார் - மகரமத்ஸயங்களுக்கு ஒப்பானார்கள், கரி - யானைகள்,
மகரங்களான -முதலைகளுக் கொப்பாயின, பொரும் - பொருதுகின்ற,
படைவீரர் - படைவீரர்களின், கை - கையில் இராநின்ற, வாள் -
வாள்கள், புரண்டெழும் - புரண்டு செல்கின்ற, மீன்களாக - மற்ற
மத்ஸயங்களுக்கொப்பாக, கரை செறி - துறைமுகக் கரையில்
சேரும்படியான, நாவாய் - கப்பல்கள், தேராய் - ரதங்களாக, காவலர்
- அரசர்கள், காமரானார் - மீகாமருக்கொப்பனார்கள், எ-று. (11)
902. வில்லொடு வில்வந் தெற்ற வேலொடு வேல்வந் தெற்ற
மல்லொடு மல்ல ரெற்ற வாட்படை வாளோ டெற்றக்
கொல்களி யானை யோடு தேர்களுந் தம்மி லெற்ற
நல்லுளைப் புரவி யோடு புரவிநாட் செய்த போரே.
(இ-ள்.) (அங்ஙனமாய் இருதிறப்படைகளும் போர்
செய்யும்போது), வில்லொடு - விற்படைகளோடு, வில் வந்தெற்ற -
விற்படைகள் வந்து தாக்கவும், வேலொடு - வேலாயுதத்தையுடைய
சேனைகளோடு, வேல்வந் தெற்ற - வேலாயுதத்தையுடைய சேனைகள்
வந்து தாக்கவும், மல்லொடு மல்ல யுத்தம் செய்யுமவர்களுடன்,
மல்லர் - மல்ல யுத்தஞ் செய்பவர்கள், ஏற்ற - தாக்கவும், வாட்படை -
வாள் வல்லவர்கள், வாளோடு - வாள் வல்லார்களுடனே, ஏற்ற -
தாக்கவும், கொல் - |