424மேருமந்தர புராணம்  


 

கொலைத்தொழிலையுடைய,   களி   -  கர்வமுடைய, யானையோடு -
யானைப்படைகளுடனே,   தேர்களும் - ரதங்களும், தம்மில் - தங்கள்
தங்கள் இனங்களோடு, ஏற்ற - தாக்கவும், நல் - நன்மையாகிய, உளை
- கழுத்து  மயிரையுடைய, புரவியோடு - குதிரைப்படைகளுடன், புரவி
- குதிரைப்படைகளும்,  போர் - போரை, நாட் செய்த - தொடங்கின,
எ-று.

     நாட் செய்தல் - முதற் போரை நல்ல நாளில் தொடங்கல்.   (12)

903. கால்பொரக் கதலிக் கானங் கடிதுடன் மடிந்த தேபோற்
    கோல்பொரக் கொடியி னீட்டங் குடையொடு மற்று வீழ்ந்த
    வேல்பொரக் குருதிக் கும்பிக் குமிழிவிட் டெழுந்த நீல
    மால்வரை செங்கற் றாதின் குமிழிவந் தெழுந்த தொன்றே.

     (இ-ள்.)  (அவ்வாறு செய்த போரில்), கால் - காற்றானது, பொர
-      மிகுதியாக        அடித்தலினாலே,        கதலிக்கானம் -
வாழைத்தோப்பானது,     கடிது    -  சீக்கிரமாக, உடன் - உடனே,
மடிந்ததே     போல்    - (இலை, பூ, காய்களுடன் ஒடிந்து வீழ்ந்து)
நாசமானது     போல,    கோல்   பொர - அம்புகள் தைத்தலாலே,
குடையொடு     -      குடைகளோடு,    கொடியினீட்டம் - த்வஜ
சமூகங்களும்,     அற்று     வீழ்ந்த  - அறுந்து வீழ்ந்தன, கும்பி-
யானைகளின்     மேலே,    வேல்     பொர  -  வேலாயுதமானது
தைத்துக்காயமாக்க,    குருதி     - இரத்தமானது,   குமிழிவிட்டு -
குமிழியிட்டுக்    கொண்டு,   எழுந்த     - சொரிந்த தோற்றமானது,
நீலம்     -    நீல   நிறத்தையுடைய, மால் - பெரிதாகிய, வரை -
பர்வதத்தினின்றும்,    செங்கத்தாதின்   குமிழி வந்து -  சாதிலிங்கக்
குழம்பின்      குமிளியானது     வெளிப்பட்டு,       எழுந்தது -
சொரிந்ததாகிய, ஒன்று - ஒரு தோற்றமாகும், எ-று.            (13)

904. விற்படை சரங்கள் வீழ்ந்து மேகங்கள் போல மாய்ந்த
     மற்படை யுடன்றெ ழுந்து மடங்கல்போற் பொருது மாய்ந்த
     வெற்பகம் பிளந்த வைவா ளெழிலியின் மின்னைப் போன்ற
     கொற்றவர் குடைக ளேந்தி நடந்தது குருதி யாறே.

     (இ-ள்.) விற்படை -  வில்லினால்  போர் செய்யும் சேனைகள்,
மேகங்கள் போல  - மேகங்கள் மழையச் சொரிவதுபோல, சரங்கள் -
அம்புகள்,    வீழ்ந்து  -   மேலே    வீழ்ந்து பாய்தலால், மாய்ந்த -
உயிரிழந்து மாய்ந்தன, மற்படை - மல்லயுத்தஞ் செய்யுஞ் சேனைகள்,
உடன்று    - கோபித்து, எழுந்து   - கிளம்பி,    மடங்கல் போல் -
ஸிம்மத்தைப்போல, பொருது - யுத்தத்திற் பொருந்திச் சண்டை செய்து,
மாய்ந்த    -   உயிர்விட்டன, வெற்பு   - பர்வதம்போற் பெரிதாகிய
யானைகளின்,    அகம்   -    சரீரத்தினுள்ளே நுழைந்து, பிளந்த -
அச்சரீரத்தைப்    பிளவு  செய்தவை - கூர்மை பொருந்திய, வாள் -
வாள்களானவை, எழிலியின் - மேகத்திற்றோன்றும், மின்னைப்போன்ற
- மின்னற்கொடிக் கொப்பாயின, குருதியாறு - இரத்