பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம் 425


 

தப்    பிரவாகமானது,    கொற்றவர் - ராஜாக்களுடைய, குடைகள் -
குடைகளை, ஏந்தி - தரித்துக்கொண்டு, நடந்தது - சென்றது, எ-று. (14)

905. கால்பொரப் பெண்ணை நெற்றிக் கனிகள்போற் றலைகள் வீழ்ந்த
    கோல்பொரக் குளித்த யானைக் குருவிசேர் குன்ற மொத்த
    வேல்பொரக் கிடந்த வீரர் வேற்கணார் விழும நோயின்
    மால்பொரக் கிடந்த நெஞ்சின் மைந்தர்போன் மயங்கி னாரே.

     (இ-ள்.)   கால்பொர    -  பலமான காற்றடிக்க, பெண்ணை -
பனைமரத்தினுடைய,  நெற்றி - மஸ்தகத்தில் இராநின்ற, கனிகள்போல்
- பனம்   பழங்கள்    உதிர்வதுபோல,  தலைகள் - படைவீரர்களின்
தலைகளானவை,    வீழ்ந்த   -   பூமியில் வீழ்ந்தன, கோல்பொர -
சரீரமுழுமையும்   அம்புகள்  தைத்துக்கொள்ள,  குளித்த - அதனால்
மறைக்கப்பட்ட,    யானை   -    யானைத்திரள்கள், குருவி சேர் -
பட்சிகளால்  நிறைந்திருக்கப்பெற்ற, குன்றமொத்த - பர்வதங்களுக்குச்
சமானமாயின,    வேல்    பொர -    வேலாயுதங்கள்    சரீரத்தில்
தைத்துக்கொள்ள, கிடந்த - மூர்ச்சையாகி விழுந்துகிடக்கின்ற, வீரர் -
யுத்த    வீரர்கள்,   வேற்கணார் - வேல் போன்ற கண்களையுடைய
ஸ்த்ரீமார்களின்மேற்றோன்றிய,   விழும     நோயின் - வருத்துகின்ற
காமநோயினது,   மால் - மயக்கமானது, பொர - மிகுதியாக நெருக்கி
வருத்த,   கிடந்த - வேறொன்றும் தோன்றாமல் கிடந்து மயங்குகின்ற,
நெஞ்சின்   - மனதையுடைய,  மைந்தர்போல - புருஷர்களைப்போல,
மயங்கினார் - மயக்கமுற்றவர்களானார்கள், எ-று.               (15)

906. உருமிடிப் புண்ட நீல மலையென வுருண்ட வேழம்
    வரைமிசைப் பருதி போல மன்னவர் வந்து வீழ்ந்தார்
    கரைபொரு கலங்கள் போலத் தேர்த்தொகை விழுந்து போன
    புரவிகள் கரையைச் சார்ந்த திரையெனப் பொருது மாய்ந்த

     (இ-ள்.)   உருமிடிப்புண்ட    -   இடிவிழுந்ததனால்  பிளந்து
விழப்பட்ட,    நீலம்  - நீல நிறமுடைய, மலையென - பர்வதம்போல,
வேழம்    - யானைகள், உருண்ட - உருண்டு மடிந்தன, வரைமிசைப்
பருதிபோல - பர்வதத்தின் மேலிருக்கின்ற சூர்யனைப்போல, மன்னவர்
- யானைகளின்மேல்   வரப்பட்ட   அனேக வரசர்கள், வந்து - யுத்த
களத்தில் வந்து சண்டையிட்டு, வீழ்ந்தார் - மடிந்தார்கள், கரை பொரு
- ஸமுத்திரத்தில்  கரைதட்டிக் கவிழ்ந்து போகப்பட்ட, கலங்கள்போல
- கப்பல்களைப்போல,  தேர்த்தோகை - ரதசமூகங்கள், விழுந்துபோன
- விழுந்து   முறிந்தன,  புரவிகள்  - குதிரைகள், கரையைச்சார்ந்த -
கரையிற்றாக்கிய,   திரையென  -   அலைகளைப்போல,  பொருது -
யுத்தத்திற்றாக்கி, மாய்ந்த - உயிரிழந்து மாய்ந்தன, எ-று.         (16)