907. கொற்றவேன் மன்னர் வேழ கும்பத்தைத் தழுவி வீழ்ந்தார்
வெற்றிப்பொற் கொடியின் கொங்கை மேவினார் தம்மை யொத்தார்
அற்றதோர் கேட கக்கை கவ்விய நரிகண் ணாடிப்
பற்றிய குறளி செல்வா டன்முகம் பார்த்த போலும்.
(இ-ள்.) வேழகும்பத்தை - யானை மஸ்தகத்தை, தழுவி -
கையாற்றழுவிக்கொண்டு, வீழ்ந்தனர் - யுத்தகளத்தில்
விழுந்தவர்களாகிய, கொற்றவேல் மன்னர் - வெற்றியுள்ள
வேலாயுதத்தைத் தாங்கிய அரசர்கள், வெற்றிப் பொற்கொடியின் -
ஜெயஸ்ரீயினது, கொங்கை - ஸ்தனங்களை, மேவினார் தம்மை -
பொருந்தினவர்களை, ஒத்தார் - ஒப்பாயினார்கள், அற்றது -
அறுப்புண்டு விழப்பட்டதாகிய, ஓர் - ஒரு, கேட்கம் - கேடகத்தோடு
கூடிய, கை - கையை, கவ்விய - கடித்து எடுத்துக்கொண்டுபோகின்ற,
நரி - குள்ளநரியானது, கண்ணாடி பற்றிய - கண்ணாடியைக் கையில்
எடுத்த, குறளி - குறுகிய வடிவுள்ள ஒரு தாதியானவள், செல்வாள் -
நடப்பவளாய், தன் முகம் - தனது முகத்தை, பார்த்தபோலும் -
பார்க்கின்றதற் கொப்பாகும், எ-று. (17)
908. விழுந்துடன் கிடந்த வேழம் விட்டமூர்ச் சனைகள் பரந்தள்
செழுங்குகைச் சிறிது போந்து சீறுவ தொக்கும் போரி
னழிந்துடன் கிடந்த வீர ரருகுசென் னரியைக் கண்டு
முழஞ்சிடை யுறங்குஞ் சிங்க முனிவதே போன்மு ரன்றார்.
(இ-ள்.) விழுந்து - யுத்தகளத்தில் விழுந்து, உடன் - உடனே,
கிடந்த - சாகாமல் கிடக்கின்ற, வேழம் - யானைகள், விட்ட - நோய்
தாளாமல் விடுகின்ற, மூர்ச்சனைகள் - நினைவு மயங்கிய பெரு
மூச்சுகள், பாந்தள் - சர்ப்பமானது, செழும் - செழுமையாகிய, குகை -
குகையினின்றும், சிறிது போந்து - கொஞ்சம் வெளியே வந்து, சீறுவது
- சீறுகின்ற சப்தத்திற்கு, ஒக்கும் - சமானமாயிருக்கும், போரில் -
சண்டையில், அழிந்து - உயிர் போகாமல் பலமழிந்து, உடன் -
உடனே, கிடந்த - விழுந்து கிடக்கின்ற, வீரர் - வீரபடர்கள், அருகு -
தங்கள் பக்கத்தில், செல் - செல்கின்ற, நரியை - குள்ளநரிகளை,
கண்டு - பார்த்து, முழஞ்சிடை - பர்வத குகையில், உறங்கும் -
தங்கியிராநின்ற, சிங்கம் - சிம்மமனாது, முனிவதேபோல் - (சமீபத்துச்
செல்கின்ற இதர மிருகங்களைக்) கோத்து கர்ஜிப்பதுபோல,முரன்றார் -
கர்ஜித்தார்கள், எ-று. (18)
909. வாசிக ளுலக்க வாளி பாய்ந்திட மனங்க லங்கி
வீசின பாத மேலாய் விழுந்தன வருடை போன்ற
பூசலிற் பொன்றும் வீரர் துறக்கமா மென்னும் பொய்ந்நூ
லாசையாற் பொருது வீழ்ந்துரரம்பைய ரார்வத் தாலே. |