பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம் 427


 

     (இ-ள்.) வாளி -  (அந்த  யுத்தரங்கத்தில்)  பாணங்களானவை,
பாய்ந்திட  - ஊடுருவிப்பாய, மனங்கலங்கி - மனம் நொந்து, வாசிகள்
-   குதிரைகள், பாதம்   -   கால்கள், மேலாய் - மேலாக, வீசின -
வீசினவாய்  மல்லாந்து, விழுந்தன - விழுந்து கிடக்கின்றவை, வருடை
- அஷ்டாபதமென்னும்   திரியக்  பிராணியை, போன்ற - ஒப்பாயின,
பூசலில்   - யுத்தத்தில்,  பொன்றும் - இறந்து போகின்ற, வீரர் - வீர
புருஷர்கள் (தங்களுக்கு),  துறக்கம் - வீர சுவர்க்கம், ஆம் - ஆகும்,
என்னும்   -  என்கின்ற, பொய்ந்நூல் - யுத்தகற்பனா சாஸ்திரத்தின்,
ஆசையால்    -    ஆசையினாலே,   பொருது   - யுத்தஞ்செய்து,
அரம்பையார்   - (வீரத்தினால்   சுவர்க்கமடைந்தால் அவ்விடத்தில்)
தேவரம்பையர்களை    அனுபவிக்கலாமென்கிற,     ஆர்வத்தால் -
பிரீதியினீால், வீழ்ந்தார் - இறந்தார்கள், எ-று.                (19)

910. கடல்கவர்ந் தெழுந்து பெய்யுங் காரெனச் சாபங் கான்ற
    படுகணை மாரிக் கஞ்சிப் பலன்கெடப் பலன்வந் தன்று
    குடரடைக் கொளுவி யொன்னா ருடலெனுங் கொழும்புற் சாயப்
    படைமடுத் துழுது வெம்போர்ப் புலம்படு சேறு செய்தான்.

     (இ-ள்.)   (இச்சம்பவங்கள  ் நிகழுங்கால்), கடல்  - சமுத்திர
ஜலத்தை,  கவர்ந்து    - கிரகித்து, எழுந்து  - ஆகாயத்தில் கிளம்பி,
பெய்யும்   -   மழையைப் பெய்கின்ற,  காரென - மேகத்தைப்போல,
சாபம்    -   வில்லினால்,  கான்ற   - கக்கப்பட்ட, படு - எதிரிகள்
மடியத்தக்க,கணைமாரிக்கு - எதிரிகளின் அம்பு வருஷத்திற்கு, அஞ்சி
- பயந்து,     பலன்கெட  - (இராஜகுமாரர்களாகிய,         வீதபய,
விபீஷணரிருவர்களுடைய    சேனைகளின்) பலமானது கெட, (அவை
பின்னிட்டன), அன்று - அப்போது, பலன் - பலதேவனாகிய வீதபயன்,
வந்து - யுத்தரங்கத்தில் வந்து, ஒன்னார் - சத்துருச் சேனைகளுடைய,
உடலென்னும்   - சரீரமென்கிற, குடர் அடை - குடல்களைச் சேர்ந்த,
கொழும்       - கொழுவிய,    புல்   - புற்கள், சாய - சாயும்படி,
படைகொளுவி   -  தன்னுடைய ஹலாயுதத்தைக் கொளுவிச்செலுத்தி,
வெம் -வெப்பம் பொருந்திய, போர் - யுத்தரங்கமாகிய, புலம் - வயல்
நிலத்தை,    உழுது     -    உழுது,  படு - உண்டாகின்ற, சேறு -
இரத்தமாமிசச்சேற்றை, செய்தான் - உண்டு பண்ணினான், எ-று.  (20)

911. காற்றெறி கடலிற் பொங்கிக் காற்படை யுடையக் காணா
    மாற்றவன் கூற்றம் போல வடிநுனைப் பகழி நூறித்
    தோற்றினான் தோற்று வீரர் தொடுபடை யிட்டுத் தத்தங்
    காற்பயன் கொண்டு போனார் காவல ரதனைக் காணா.

     (இ-ள்.)  (அவ்வாறு  செய்தபோது, எதிரி படைதோற்றோடிற்று;
அங்ஙனம்) மாற்றவன் - சத்துருவாகிய பிரதிவாஸுதேவன், காற்படை -
தனது   பதாதிப்படைகள்,    காற்று   - மிகுந்த காற்றினாலே, எறி -
எறியப்பட்ட, கடலில் -