428மேருமந்தர புராணம்  


 

சமுத்திரத்தைப்போல,   பொங்கி   -   அதிகரித்தெழுந்து, உடைய -
தோற்று ஓட, காணா - பார்த்து, கூற்றம் போல - எமராஜனைப்போல,
வடி    -    கூர்மைபெற்ற, நுனை  - நுனியையுடைய, பகழி - அம்பு
வருஷங்களை, நூறி - செலுத்தி, தோற்றினான் - யுத்தரங்கத்தில் வந்து
எதிர்த்துத்   தோன்றினான், (அப்போது    பல    தேவவாஸுதேவர்
படையிலுள்ள),  வீரர் - வீரர்கள், தோற்று - அப்போருக்குத் தோற்று,
தத்தம் தொடுபடை - தங்கள் தங்களுடைய தொடுக்கும் ஆயுதங்களை,
இட்டு    -     போட்டுவிட்டு,  காற்பயன்      கொண்டுபோனார் -
காலினாலாகின்ற   பலனைக்   கொண்டு   போனார்கள் (அதாவது :
ஓட்டம்   பிடித்தார்கள்), அதனை   -  அப்படித் தங்கள் சேனைகள்
தோற்று    ஓடுகிறதை,   காவலர் - இராமகேசவர்களாகிய அரசர்கள்,
காணா - கண்டு, எ-று.

     இதுவும் அடுத்த செய்யுளும் குளகம்.                   (21)

912. எரியுரு மென்னச் சீறி யிடஞ்சிலை யேந்து மெல்லைச்
    சுரியுளைச் செங்கட் பேழ்வாய்ச் சீயமுந் தோன்ற வேறி
    வரிசிலை குனிய வப்பு மாரியப் பலன் படைத்தான்
    செருவிளைத் துடைந்த வீரர் சேணிமேல் வினைக ளொத்தார்

     (இ-ள்.)   அப்   பலன் - (மேற்கூரிய இருவருள்) அந்தப் பல
தேவனானவன், எரி - எரியாநின்ற, உருமென்ன - இடியைப்போல், சீறி
- கோபித்துக் கர்ஜனை செய்து, இடம் - தனது இடக்கையில், சிலை -
வில்லை,  ஏந்தும் - தரிக்கின்ற, எல்லை - சமயத்தில், சுரி - சுருண்ட,
உளை    - கழுத்து மயிரையும், பேழ்வாய் - பிளப்பு வாயையுமுடைய,
சீயமும்  - ஒரு சிங்கமும், தோன்ற - பிரஸன்னமாக, (அதாவது :பூர்வ
புண்ணியோதயத்தால்   ஒரு   தேவதையானது சிம்மரூப நீர்மிதத்தைச்
செய்துகொண்டு  தோன்ற, அதன்மேல்),ஏறி - ஏறிக்கொண்டு, வரிசிலை
- வரிந்து    கட்டிய  வில்லானது, குனிய - நன்றாய் வளைந்து நிற்க,
அப்பு    மாரி   - அம்பு   வருஷத்தை,    படைத்தான்  - மிகவும்
உண்டுபண்ணினான்,   (அப்போது), செரு   - அந்த யுத்தரங்கத்திலே,
இளைத்து    -   பலஞ்செய்யாமல்   இளைத்து, உடைந்த - தோற்று
ஓடுகின்ற,  வீரர் - சத்துருஸமூஹ வீரர்கள், சேணிமேல் - சம்மியத்துவ
குணத்தினால்  க்ஷபகஸ்ரீணியில்,  மேல் - மேலே ஏறுகிற காலத்தில்,
(உடைந்தோடும்),வினைகள்   - கர்மங்களை, ஒத்தார் - நிகர்த்தார்கள்,
எ-று.                                                 (22)

913. பாறுமேற் பறந்த தெங்கும் பருதியுங் கரந்த தங்கே
    சேறுபட் டளற தாகிச் செருக்களஞ் செல்ல னீங்க
    மாறெதிர்ந் தவனைக் காணா மறிந்ததன் சேனைக் காணாச்
    சீறினன் கருட னேறிச் சென்றுசே ரவனெ திர்ந்தான்.

     (இ-ள்.)  (மேலும்), செருக்களம் - யுத்தகளமானது, சேறுபட்டு -
இரத்த    மாமிசச்சேறுண்டாகி,    அளறதாகி   - சருக்கும் பூமியாகி,
செல்லனீங்க - செல்வதற்