பலதேவன் சுவர்க்கம்புக்க சருக்கம் 429


 

குத்  தடையாக, எங்கும்  - யுத்தகள மெவ்விடத்தும், பாறு - பருந்து,
மேல்   -   ஆகாயத்தில், பறந்தது - (மாமிசத்தை யுண்ணப்) பறந்து
திரிந்தது, அங்கே - அவ்விடத்தில், பருதியும் - சூரியனும், கரந்தது -
(அப்பருந்துபறப்பதால்)    மறைந்தது,    (அப்போது),   கேசவன் -
வாசுதேவனும், (அந்த   யுத்தகளத்தில்), மாறு   - தங்கட்கெதிரியாக,
எதிர்ந்தவனை  - எதிர்த்த பிரதி வாஸுதேவனை, காணா - பார்த்தும்,
மறிந்த   -   பின்னிடைந்து  திரும்பின, தன் சேனை - தன்னுடைய
சேனைகளை,    காணா   -   கண்டும், சீறினன் - கோபித்தவனாகி,
கருடனேறி    -    கருடதேவன்மே    லேறிக்கொண்டு, சென்று -
யுத்தகளத்தில்   சென்று,    எதிர்ந்தான்   - பிரதி வாஸு தேவனோ
டெதிர்த்தான், எ-று.                                     (13)

914. அருக்கன்வந் துதய மேற மதியொளி யவிவ தேபோற்
    றிருக்கிளர் கருடன் மேலக் கேசவன் றோன்றச் சிந்தி
    வெருக்கொண்டு சேனை யோட வீழ்ந்தொளி மதியி னின்றா
    னுருத்தெழு காலன் போல வுடன்றுசக் கரத்தை விட்டான்.

     (இ-ள்.)  (அவ்வாறு),  அருக்கன்  - சூர்யன், வந்து - தோன்றி
வந்து, உதயமேற் - உதய பர்வதத்தினின்றும் மேற்கு நோக்கிச் செல்ல,
மதியொளி    -   சந்திரனுடைய   பிரகாசமானது, அவிவதேபோல் -
மழுங்குவதுபோல,   திரு   -  அழகானது, கிளர் - பிரகாசியா நின்ற,
கருடன்     மேல்    - கருடதேவன்மேல்,    அக்கேசவன் - அந்த
வாஸுதேவனாகிய   விபீஷணன், தோன்ற - யுத்தரங்கத்தில் தோன்ற,
சிந்தி    - குலைந்து, வெருக்கொண்டு - பயத்தையடைந்து, சேனை -
பிரதிவாஸு தேவன்   சேனைகள், ஓட - தோற்றோட, வீழ்ந்தொளி -
மழுங்கிய      ஒளியையுடைய, மதியின் - சந்திரன்போல, நின்றான் -
புண்ணிய   கர்மம்   மாண்டு   நின்றவனாகிய  பிரதி வாஸுதேவன்,
உருத்தெழு  - கோபித்தெழுகின்ற, காலன்போல  - எமனைப் போல,
உடன்று    -   கோபித்து, சக்கரத்தை -  தேவதா சக்தியாயிராநின்ற
சக்ராயுதத்தை,    விட்டான்    - வாஸுதேவனாகிய விபீஷணன்மேல்
செலுத்தினான், எ-று.

   ‘வீழ்ந்த ஒளி" என்பது, ‘வீழ்ந்தொளி" எனத் தொகுத்தலாயிற்று. (24)

915. படைநடுக் கடலிற் செல்லும் பருதிபோ லாழி செல்ல
    முடிமன்னர் நடுங்கி யிட்டார் முதுகிட்ட தரசர் சேனை
    படைமன்ன ரார்த்தெ ழுந்தார் மாற்றவன் பக்கத் துள்ளார்
    மிடைகதி ராழி மேருச் சூழ்வரும் பருதி போல.

     (இ-ள்.) கடலில்  - கடலின் மத்தியில், செல்லும் - செல்கின்ற,
பருதிபோல் - சூர்யன் போல,ஆழி - அச்சக்கராயுதமானது, படை நடு
- சேனைகளின் மத்தியில், செல்ல - போக, முடி - கிரீடத்தையுடைய,
மன்னர் - இராமகேசவர் பக்கத்திலுள்ள அரசர்கள், நடுங்கியிட்டார் -
பயந்தார்கள், அரசர் சேனை - இராம