வைசயந்தன் முத்திச்சருக்கம் 43


Meru Mandirapuranam
 

  (இ-ள்.) அச்சு - அச்சும், நீர் - ஜலமும், தேரொடு - இரதத்தையும்,
மீனை - மத்ஸியத்தையும், ஈர்த்திடும் - முறையே இழுக்கும்,  அச்சு -
இரதத்துக்கு  அச்சும்,  நீர்  -  மத்ஸியத்துக்கு  ஜலமும்,   இன்றி -
இல்லாமல்,  தேரும் -  இரதமும்,  மீன் -  மத்ஸியமும்,   செல்லா -
செல்லமாட்டா,  அச்சு  -  இரதத்துக்கு அச்சும், நீர் - மத்ஸியத்துக்கு
ஜலமும்,  போல-,  தன்மத்தி -  தர்மாஸ்தி திரவியமானது, சேறலை -
(சீவபுத்கல   மிரண்டுக்கும்   கமனத்தை   அதாவது)   செல்கையை,
இச்சையும்  -  ஆசையும்,  முயற்சியும்  -  பிரயத்தனமும்,  இன்றி -
இல்லாமல், ஆக்கும் - செய்விக்கும், எ-று.                   (90)

 91. அந்தரத் தறுபத்து மூன்ற தாகிய
    விந்திர படலமும் நிரய மேழ்களும்
    மந்தர மழைமண்ணு மற்று நின்றிடா
    வந்தமி னிலையதன் மத்தி யில்லையேல்.

    (இ-ள்.) அந்தமில் - முடிவில்லாத, நிலை - நிலைமையையுடைய,
அதன்   மத்தி   -   அதர்மாஸ்தி  திரவியமானது,  இல்லையேல் -
இல்லாமல்   போகுமேயானால்,  அந்தரத்து  - ஆகாயத்திலிராநின்ற,
அறுபத்து  மூன்றதாகிய  - அறுபத்து மூன்றாகிய, இந்திர படலமும் -
சுவர்க்கலோக   படலங்களும்,   நிரயமேழ்களும் .  ஏழ்நரகங்களும்,
மந்தரம்  -   மகம்மேருபர்வதமும்,   மலை  -  குலகிரி  முதலாகிய
பர்வதங்களும்,   மண்ணும்   -   பூமியும்,   மற்றும்   -  இன்னும்
உள்ளவைகளும், நின்றிடா - நிலைத்திருக்க மாட்டா, எ-று.     (91)

 

92. பறவையின் சிறகொடு பாத நின்றுழி
   நெறியினாற் செலவொடு நிலையை யாக்குமா
   லுறவிபுற் கலமிவை யோட னிற்றலைச்
   செறிவுறித் தம்மதம் மத்தி செய்யுமே.

     (இ-ள்.)  பறவையின் - பக்ஷியினுடைய, சிறகொடு - இறகோடு,
பாதம் - கால்களும், நின்றுழி - இராநின்ற விடத்தில், நெறியினால் -
கிரமத்தினால்,  செலவொடு  -  இறகு  செல்கையையும், நிலையை -
கால்கள் ஸ்திரதரத்தையும், ஆக்கும் - செய்யும், (அவைபோல்) உறவி
- சீவன்களும்,  புற்கலம் -  புத்கலமும், (ஆகிய) இவை - இவைகள்,
ஓடல்  -  செல்கையையும்,  நிற்றலை - ஸ்திரதரத்தையும், செறிவுறி -
சேர்தலைப்பொருத்தி  (அதாவது : செல்லவும்  நிற்கவும்) இசைவித்து,
தம்மதம்மத்தி - தர்மாஸ்தி அதர்மாஸ்திகள், செய்யும் - செய்வனவாம்,
எ-று. ஆக்குமால் என்பதில், ஆல் - அசை.                 (92)

  93. அளவின்றி யத்தியா யமூர்த்தி யாதியா
     யுளவென்ற பொருட்கெலா மிடங்கொ டுத்துடன்