430மேருமந்தர புராணம்  


 

கேசவபக்ஷ ராஜராதி சைன்யங்கள், முதுகிட்டது - யுத்த பூமியினின்றும்
புறமுதுகு    காட்டி   ஓடின,   மாற்றவன்    - சத்துருவாகிய பிரதி
வாஸுதேவனுடைய,  பக்கத்துள்ளார் - பக்ஷத்தி விராநின்றவர்களாகிய,
படைமன்னர்    -   சேனா   வீரர்களாகிய அரசர்களும், ஆர்த்து -
ஜெயசப்தமிட்டு,    எழுந்தார்    - எழுப்பினார்கள், (அப்போது மேற்
கூறியவாறு  சென்ற), மிடை நெருங்கிய, கதிர் - பிரகாசம் பொருந்திய,
ஆழி  - சக்ராயுதமானது, மேரு  - மஹாமேரு பர்வதத்தை, சூழ்வரும்
வலஞ் செய்கின்ற, பருதி போல - சூர்யனைப் போல, எ-று.      (25)

     இதுவும், அடுத்த செய்யுளும் குளகம்.                   (25)

916. கேசவன் றன்னைச் சூழ்ந்து வலப்பக்கங் கெழுமக் கண்டு
    பேசொணா வகையி னாழி பிடித்தவன் றிரித்து விட்டான்
    மூசுதேன் கவசங் கீண்டு மொய்வரை மார்பு புக்குத்
    தேசறத் துருவி யோடித் திசைவிளக் குறுத்த தன்றே.

     (இ-ள்.) கேசவன்  தன்னை - வாஸுதேவனாகிய விபீஷணனை,
சூழ்ந்து     -    பிரதக்ஷிணமாக  வந்து, வலப்பக்கம் - அவனுடைய
வலப்பாரிசத்தில்,   கெழும - பொருந்தி நிற்க, கண்டு - அக்கேசவன்
பார்த்து, (ஸந்தோக்ஷித்து), பேசொணா வகையின் - சொல்வதற்கரிதான
சக்தி வாய்ந்த, ஆழி - அச்சக்ராயுதத்தை, அவன் - அவ்வாசுதேவன்,
பிடித்து  - கையாற்பற்றி, (விதிபூர்வகம் தியானித்து), திரித்து - (மறுபடி
தனது   தக்ஷிணஹஸ்த்தால்)    திருப்பி,   (பிரதி   வாஸுதேவனான
சத்துருவின்மேல்),    விட்டான்    - ஏவினான், (அப்படி ஏவப்பட்ட
அச்சக்கராயுதமானது),  மூசுதேவன்  கவசங்கீண்டு - பிரதி வாஸுதேவ
னணிந்திராநின்ற    அழகிய      ஜீராவைப் பிளந்து, மொய் - பலம்
பொருந்திய,     வரை    - பர்வதம் போன்ற, மார்பு - அவனுடைய
மார்பினிடத்தில்,     புக்கு - புகுந்து,   தேசு - அவனது ஒளியானது,
(அதாவது : உயிர்), அற - நீங்கும்படி, துருவி - துளைத்துக் கொண்டு,
ஓடி     - கேசவனிடம்     சென்று,    திசை - திக்குகளிலெல்லாம்,
விளக்குறுத்தது    -    பிரகாசத்தை    உண்டாக்கியது, (அதாவது :
கேசவனுக்கு ஜெயத்தை உண்டுபண்ணிற்று), எ-று.              (26)

     "தேசழித்துருவிக்கொண்டு" என்றும் பாடபேதமுண்டு.

917. கருமுகி லுருமி னோடிக் கேசவன் கையி னாழி
    யுருமிடிப் புண்ட நீல மலையிலொன் னானை வீழ்ப்ப
    விருள்பரந் திட்ட தெங்கும் யாவரும் நடுங்கி வீழ்ந்தா
    ரொருவர்க ணின்ற துண்டோ திருவென வுரைத்திட் டாரே.

     (இ-ள்.)   (அவ்வாறு), கேசவன் - விபீஷணனுடைய, கையின் -
கையினின்றும்,    ஆழி  - சக்ராயுதமானது, கரும் - கருத்த, முகில் -
மேகத்தினின்றும்