நிரையத்துளறவுரைச்சருக்கம் 443


 

942. எறிவெம் படையா லிவர்வீழ்ந் தெழலா
    லுறுவெந் துயரல் லதுடம் புவிடார்
    கறுவா திகடும் பரிணா மமிடை
    யெறியா வகையா யுவையாற் றலினே.

     (இ-ள்.) எறி - சரீரங்களை வெட்டும்படியான, வெம் - வெப்பம்
பொருந்திய,    படையால்    - (அந்நரக     பூமியிலிரா     நின்ற)
ஆயுதங்களினால்,   (சரீரம் வெட்டுண்டு), இவர் வீழ்ந்தெழலால் - இந்
நாரகர்கள்     இடைவிடாமல்    எழும்பி     விழுதலால்,  உறும் -
அடையப்பட்ட,    வெம்   -   வெப்பம்  பொருந்திய, துயரல்லது -
துக்கங்களே    யல்லாமல்,   கறுவாதி   -   குரோதம்   முதலாகிய,
கடும்பரிணாமம் - அசுபலேசியா பரிணாமமானது, இடை யெறியாவகை
-   நடுவில்   சேதிப்பதற்குக்    கூடாத    விதமாய்,   ஆயுவை -
தங்களுக்குண்டாகிய   ஆயுஷ்ய    ஸ்திதியை, ஆற்றலின் - உண்டு
பண்ணுகிறதால்,    உடம்புவிடார்   -   சரீரத்தினீங்கார், (அதாவது :
அபமிருத்யாயுஷ்யமில்லாதவர்க ளாவார்கள்), எ-று.            (13)

943. வினையே துயரத் தைவிளைப் பதலால்
    நினைவார் செயல்மற் றிலைநீ டுயிரை
    முனைமூட் டுவர்கீ ழுளதே வரிவன்
    உனைமுன் னினசெய் தனனென் றுரையா.

     (இ-ள்.)   உயிரை  -  அப்படிப்பட்ட நரகத்திலடைபவர்களின்
உயிரை,   நீடு    - பெரிதாகிய, வினையே - (அவ்வவ்வுயிர்கள் முன்
செய்த   பாவகர்மத்தினாலாகிய) திரவிய பாபகர்மங்களே, துயரத்தை -
துன்பத்தை,   விளைப்பதலால் - (உதயமாகித்) துன்பஞ் செய்வதல்லது,
நினைவார்    செயல் - இப்படித் துன்பமுறு கின்றவர்களை நினைத்து
அத்துன்பந்தீர பிரதிகாரக்   கிரியைகளால் செய்யப்படுங் காரியங்கள்,
இல்லை   - அந்நரகத்தில்   கிடையாது, (ஆனாலும்), கீழுள தேவர் -
பவண   தேவர்களானவர்கள், (அந்நரகத்தில்   போய்  நாரகர்களைப்
பார்த்து     ஒவ்வொருவரையும்      தனித்தனியாக,       இவன் -
இந்நாரகனானவன், உனை - உனக்கு, முன் - முன் சன்மத்திலே, இன
செய்தனன் - பொல்லாங்குகளைச் செய்தான், என்று - என்று, உரையா
- கலகஞ்  சொல்லி, முனை மூட்டுவர் - ஒருவர்கொருவர் சண்டையை
உண்டு பண்ணுவார்கள், எ-று.

     இப்படித்    துன்பம்   அதிகமாவதே   ஒழிய  விலகுந்தன்மை
ஆயுஷ்யமுள்ளவரையில்  நரகர்க்கு அரிதென்பது ஒரு வகையாலாகிய
தென்பது     இதன்      தாத்பரியம்.    இனாசெய்தான்    என்பது
இனாசெய்தானென்று வந்தது. உனை - உருபுமயக்கம்.           (14)

944. கணமும் மிடையின் றியெழும் பசியா
    லுணவென் றெனவந் துலகத் துளநஞ்