முறுகவெந் துருகுஞ் செப்புப் பாவையை முயங்க மூர்ச்சித்
தறிவழிந் தலம்வந் தாற்றா தரற்றுகின் றார்க ளையா.
(இ-ள்.) ஐயா - முன் விபீஷணனாகியிருந்த ஐயனாகிய
நாரகனே!, அறம் - தர்மமும், அறிவு - ஞானமும், அடக்கம் -
ஸம்யமமும், ஆண்மை - புருஷத்துவமும், (அதாவது : பௌருஷமும்),
குடிப்பிறப்பு - நற்குடிப்பிறப்பும், (ஆகிய இவைகளெல்லாம்), அழிய -
நாசம் அடையும்படி, அன்பில் - மோஹனீயோதய ஜனித
அப்பிரசஸ்தராக பரிணதியினால், பிறர்மனை நலத்தில் - அன்னிய
ஸ்த்ரீகளுடைய காம அனுபோகத்தில், சேர்ந்தார் - சேர்ந்தவர்கள்,
பேர் - பெரிதாகிய, அழற்குட்டந் தன்னில் - அக்னி ஸமூஹத்தின்
குழியில், முறுக - உஷ்ணம் மிக ஏறும்படியாக, வெந்து -
வேகப்பட்டதாகி, உருகும் - உருகும்படியான நிலைமையையுடைய,
செப்புப்பாவையை - செம்பாலாகிய பொம்மையை, முயங்க - சேர்ந்து
தழுவி, மூர்ச்சித்து - மயக்கமடைந்து, அறிவழிந்து - புத்திகெட்டு,
அலம் வந்து - வருத்தமுற்று, ஆற்றாது - பொறுக்க முடியாமல்,
அரற்றுகின்றார்கள் - சோகஸ்வரத்தால் கூக்குரலிட்டு அழா
நின்றார்கள், எ-று. (19)
949. ஊன்சுவைத் துறுதி யோரா ருள்ளத்திற் கொடிய ராகிக்
கூன்சிலைக் கணையோ டேந்திக் கொலைத்தொழில் புரிந்து வந்தார்
தான்செல விட்ட நாய்போற் கடியநாய் கவர வஞ்சி
வான்சினை யிலவ மேற்றி வந்துவீழ்ந் தரற்று கின்றார்.
(இ-ள்.) உறுதியோரார் - உறுதியாகிய தர்மத்தை
அறியாதவர்களாகி, உள்ளத்தில் - மனதில், கொடியராகி -
பொல்லாங்கினை யுடையவர்களாகி, கூன் - வளைந்திராநின்ற, சிலை -
வில்லை, கணையோடு - அம்புகளுடன், ஏந்தி - தரித்து,
கொலைத்தொழில் - ஜீவஹிம்ஸைத் தொழிலிலே, புரிந்து - மிகவும்
விரும்பி (அதாவது : ஹிம்ஸானந்த தத்பரர்களாய்), ஊன் சுவைத்து -
மாம்ஸ போஜிகளாகி, வந்தார் - வந்தவர்கள், செலவிட்ட -
(பூர்வஜென்மத்தில் வேட்டையாடத் தொடங்கிப் பிராணிகள் பேரில்
கடிக்கும்படி) ஏவப்பட்ட, நாய்போல் - நாய்களைப் போல், (புராதன
நாரகர்கள் கூட்டமாகிய), கடிய - பொல்லாங்காகிய, நாய் - நாய்கள்,
கவர - (தங்களைக்) கடிக்க, அஞ்சி - பயந்து, வான் - பெரிதாகிய,
சினை - கிளைகளையுடைய, இலவம் - முள்ளிலவமரத்தில், (சில
நாரகர் கூடி), ஏற்றி - ஏறச்செய்து, (மறுபடியும் அங்கு நின்றும் கீழே
விழும்படி அடித்தலால்), வந்து வீழ்ந்து - நரக பூமியில் வந்து வீழ்ந்து,
அரற்றுகின்றார் - அழுகின்றார்கள், எ-று.
தான் - அசை. (20)
950. மனையறம் மறந்து மன்றி னின்றுவான் குடிக ணையத்
தனம்வலி யதனின் வாங்கிச் சாலவுந் தளர்வு செய்தார் |