நுனைமுடி விலாத முள்ளின் மத்திகைப் புடையி னுங்கி
நினைவருந் துயரந் துய்த்து நெடிதுயிர்ப் பார்க ளையா.
(இ-ள்.) ஐயா - ஐயனாகிய நாரகனே!, மனையறம் - இல்லறம்
என்னும் தர்மத்தை, மறந்து - தெரியாமல் மயங்கி, மன்றினின்று -
சபையிலே நீதிநாயக ஸ்தானம் வகித்து நின்று, வான் - பெரிதாகிய
(அதாவது : பாரம்பரியமாக வரா நின்ற), குடிகள் - ஜனசமூகங்கள்,
நைய - வருந்தும்படி, தனம் - அவர்கள் சம்பாதித்த திரவியங்களை,
வலியதனின் - (நியாய விரோதமாக) வல்லமையினாலே, வாங்கி -
வாங்கிக்கொண்டு, சாலவும் - மிகவும், தளர்வு செய்தார் -
சனங்களுக்கு வருத்தத்தைச் செய்தவர்கள், (அப்பாவ
வினையினுதயத்தால் நரகத்திற்செனிக்க, அவர்களைப் புராதன
நாரகர்கள் கூடிக்கொண்டு அடிக்கும்), நுனை - கூர்மை பொருந்திய,
முடிவில்லாத கணக்கில்லாத, முள்ளின் - முட்களையுடைய,
மத்திகைப்புடையின் - சம்மட்டியடிகளினால், நுங்கி - சரீரம்
நொறுங்கி, நினைவரும் - எண்ணற்கரிய, துயரம் - கஷ்டங்களை,
துய்த்து - அநுபவித்து, நெடி துயிர்ப்பார்கள் - பெருமூச்செறிந்து
நிற்பார்கள், எ-று. (21)
வேறு.
951. வலையிலுயிர் வாரியதன் மாறுவிலை கொண்டார்
நிலையகழு வேறிநிணம் வந்தொழுக நின்றார்
விலையின்முடை கொண்டுணலை மேவினர்கள் கண்டாய்
நிலையில்பெருஞ் சீக்குழியி னின்றுசுழல் கின்றார்.
(இ-ள்.) வலையில் - வலை முதலாகிய கருவிகளினால், உயிர் -
மஸ்யாதி ஜீவ சமூகங்கள், வாரி - கொலை செய்து வாரி, அதன்மாறு -
அதற்குப் பிரதியாக, விலை - கிரயத்தை (அதாவது : பெறுமானமாக
இதர வஸ்துக்களான தன தான் யாதிவகைகளை), கொண்டார் -
பெற்றவர்கள், (நரகத்திற் செனித்து), நிலைய - அந்நரகத்தில் நிலை
பெற்றிராநின்ற, கழு -கழுமரத்தில் ஏறி - புராதன நாரகர்கள் ஏறும்படி
செய்ய ஏறி, நிணம் - சரீரத்தினின்றும் இரத்த மாம்ஸாதி நிணங்கள்,
வந்து - வெளியாகி வந்து, ஒழுக - உதிர, நின்றார் -
இரணவேதனையில் நின்றவர்களாவர்கள், விலையின் முடை -
விற்கப்பட்ட மாமிசத்தை, கொண்டு - விலைக்கு வாங்கிக்கொண்டு,
உணலை - உண்பதை, மேவினர்கள் - பொருந்தினவர்களாகிய
மாமிசபோஜிகள், நிலையில் - நீச்சு நிலையின்றி ஆழமாகிய, பெரும் -
விசாலமாகிய, சீக்குழியுள் - சீயினால் நிறைந்த பெருங்குழியில், நின்று
- தங்கி நின்று, சுழல்கின்றார் - சுழன்று வருந்துகின்றவர்களாவார்கள்,
எ-று. (22)
952. இல்லையுயிர் நல்வினை யிறந்தவர் பிறப்பெனச்
சொல்லினவர் செம்புருக்கி வாயிற்பெய் துயிர்வார் |