(இ-ள்.) ஒழுக்கினை - ஸம்மியக் சாரித்திரத்தை, அழித்து -
கெடுத்து, உடன் - உடனே, அழுக்குணர்வு - கெட்ட செயலுக்கு
ஏதுவாகிய, குமதி, குஸ்ரீதிஜ்ஞானங்களை, உரைத்தார் - (கர்மானுகுண
உதயத்தால்) சொன்னவர்கள், (நரகத்திற்றோன்றி), புழுக்கள் நலிய -
(அவர்களது சரீரத்தில்) கிருமிகள் ஸஞ்ஜாதங்களாகி உபத்திரவம்
செய்ய, (தாளாமல்), புடை புடைத்து - விலாப்பக்கத்தில்
அடித்துக்கொண்டு, விழுகின்றார் - பூமியில் விழுந்து புரளா
நின்றார்கள், நன்னெறியின் - நன்மார்க்கமான செயல்களினின்றும்,
வழுக்கினவர் - நழுவினவர்களாகித் துச்சாரித்திரத்தில் சென்றவர்கள்,
(நரகத்திற்றோன்றிப் புராதன நாரகர்களால்), மத்திகை யெடுத்து -
சம்மட்டிகளைத் தூக்கி, விழுப்பு - முன் செய்த துர்ச்சாரித்திரமாகிய
அனாச்சாரம், அற - நீங்கும்படி, அதுக்க - (புராதன நாரகர்
தங்களை)அடிக்க, வினையே - நமது கர்மமே, கொடியது -
பொல்லாங்கினையுடையது, என்பார் - என்று சொல்வார்கள்,
எ-று. (25)
955. மிக்கவெகு ளிக்கனலி யிட்டுநகர் சுட்டார்
செக்குர லிடைப்பல திலத்தினெரி கின்றார்
சக்கர மடைந்தபின் னறத்தினை மறந்தா
ரெக்கதுணை மிக்கதுய ரத்திடை யுழைப்பார்.
(இ-ள்.) மிக்க - மிகுதியாகிய, வெகுளி - குரோதத்தினாலே,
கனலியிட்டு - நெருப்பை வைத்து, நகர் - ஊர்பட்டணம்
முதலியவைகளை, சுட்டார் - கொளுத்தினவர்கள், செக்குரலிடை -
(நரகத்தில் பிறந்து அங்குள்ள) கற்காணத்தில், பல திலத்தின் -
அனேகமாகிய எள்ளுகளைப்போல, (புராதன நாரகர்கள் தங்களை
இட்டுச்சுற்ற), நெரிகின்றார் - சரீரம் நொறுங்கித் துன்புறுகின்றார்கள்,
சக்கரமடைந்த பின் - அரசுக்குரிய ஆக்ஞாசக்கரத்தை யடைந்து மிக்க
ஐசுவரியம் பெற்ற பிறகு, அறத்தினை - தர்மத்தை, மறந்தார் -
மறந்தவர்கள், (நரகத்தில் பிறந்து), எக்கம் - ஏகமாக, (அதாவது :
ஒன்றாகவே நீங்காமல்), துணை தங்களைச் சேர்ந்திராநின்றதாகிய,
மிக்க - அதிகமாகிய, துயரத்திடை - அஸாதாதி துன்பங்களிலேயே,
உழைப்பார் - பொருந்திச் சுழன்று சிரமப்படுவார்கள், எ-று. (26)
956. கொலைகளவு பொய்பொருளி னாசையின் மகிழ்ந்தார்
மலையின்மிசை வட்டென வுருட்டவிழு கின்றார்
குலநல குடிப்பெரிய கற்பழிய மேவும்
புலைமகளிர் காரகலிற் புழுக்களெனப் பொரிவார்.
(இ-ள்.) கொலை - ஜீவவதை செய்வதும், களவு -
பிறருடைமையைத் திருடுவதும், பொய் - அசத்தியம் பேசலும்,
பொருளினாசையில் - (மண், பொன், பொண்ணாதி) பரிக்கிரகத்தில்,
மிகுந்த ஆசையுமாகிய இவைகளில், மகிழ்ந்தார் - |