வருடங் கொண்ட) பணையும், யுகம் - (அதன்மேல் எண்பத்துநான்கு
நூறாயிரம் வருஷம் கொண்ட) பூர்வாங்கமும், பூவம்-(எண்பத்துநான்கு
நூறாயிரம் பூர்வாங்கம் கொண்ட) பூர்வமும், பல்லம் - (அசங்கியாதம்
பூர்வங்கொண்ட) பல்லமும், பவ்வம் - (பல்லம் பத்துக்கோடாகோடி
கொண்ட) கடலும், அனந்தம் - அதன் மேல் அனந்தமும், (ஆகிய
இவைகள்) கணம் முதல்ஈறா - ஸமயம் முதல் அனந்த மீறாக,
காலபேதம் - காலபேதமாகும்; சொல்லுறில் - இதற்குமேல் சொல்ல
வேண்டுமானால், காலமில்லை - ஸமயத்துக்குக் குறைந்த காலமும்
அனந்தத்துக்கு மீறினகாலமும் இல்லை, எ-று.
இந்தக் காலதிரவியத்தின் அம்சங்களும், மற்ற சீவ, புத்கல, தாம,
அதர்ம, ஆகாசதிரவியங்களின் அம்சங்களும் இங்குச் சுருக்கமாகச்
சொல்லப்பட்டன. இவைகளின் விரிவான விசேஷாம்ச குணங்களைப்
பதார்த்தசாரம், ப்ராப்ரத்திரயம் முதலிய பெருநூல்களில்
கண்டுகொள்க. (94)
95. அருடெளி வார்வஞ் சிந்தை யழகிய நிகழ்ச்சி ஞானம்
பொருவரு தவத்தி னானும் புனிதனா முயிரைப் புக்கு
மருவிய வினைகள் மாற்றா மாசினைக் கழுவி வீட்டைத்
தருதலாற் புனித மாகுந் தன்மையாற் புண்ணிய மாமே.
(இ-ள்.) அருள் - காருண்யத்தாலும், தெளிவு - ப்ரஸன்ன
பாவத்தாலும் (அதாவது : ஸமத்வீபாவத்தாலும்), ஆர்வம் -
குணாணுராகத்தாலும் : (அதாவது, இரத்னத்திரய பிரீதியாலும்), சிந்தை
- தியானப்ரவிருத்தியாலும், அழகிய நிகழ்ச்சி -
ப்ரசஸ்தப்ரவிருத்தியாலும், ஞானம் - சம்மியக்ஞான விருத்தியாலும்,
பொருவரு - உவமையில்லாத, தவத்தினானும் - தபானு
ப்ரயோகத்தினாலும், புனிதனாம் - பவித்திரமாகிய பரிணாம
பாவபுண்ணியமுடையவனான, உயிரை - ஆத்மனை, புக்கு -
அடைந்து, மருவிய - சேர்ந்திரா நின்ற, வினைகள் - கர்மங்கள்,
மாற்றாம் - முத்திவழிக்கு மாற்றமாகிய ஸம்சாரமென்னும், மாசினை -
அழுக்கை, கழுவி - பரிஹரித்து, வீட்டை - மோட்சத்தை, தருதலால்
- கொடுப்பதினால், புனிதமாகும் - பவித்திரமாகிய
பாவபுண்ணியமாகும், தன்மையால் - இத்தன்மையினால், புண்ணியமாம்
- திரவிய புண்ணியமாகாநின்றது, எ-று.
(95)
பாவமென்பது - சேதனாபரிணாமம்.
|
96. சாதமே புருச வேதஞ் சம்மத்தந் தக்க நாமங்
கோதமே லாய தேவர் மானவ ராயு வாழும்
போதமே பொருளோ டின்பம் புகழ்ச்சிமீக் கூற்ற மன்னர்க்
காதியாந் தன்மை நல்கி யறவர சாக்கு மன்னா.
(இ-ள்.) மன்னா - வைஜயந்த மஹாராஜனே!, (திரவிய
புண்ணியமானது) சாதமே - ஸாதவேதநீயமும், புருசவேதம் -
புருஷவேதமும், சம்மத்தம் - ஸம்,
|