450மேருமந்தர புராணம்  


 

இச்சித்து   அவற்றிற்குரிய  காரியங்களைச்  செய்தவர்கள், (நரகத்தில்
பிறந்து   புராதனநாரகர்களால்), மலையின்மிசை - பர்வதங்களிலேற்றி,
வட்டென   -    குண்டுகளைப்போல,   உருட்ட  - அங்கு நின்றும்
உருட்டித்தள்ள,   விழுகின்றார்  - விழுந்தலறா நின்றார்கள், குலம் -
உயர்குலத்தினும், நல்ல குடி - நற்குடிப் பிறப்பைக் காட்டிலும், பெரிய
- மிகுந்த   குணமுடைய, கற்பு - பதிவிரதா தன்மையானது, அழிய -
கெடும்படி,   மேவும்   - (அன்னிய புருஷர்களை மோஹ புத்தியால்)
பொருந்தும், புலைமகளிர் - துர்க்குணமாகிய நீசத்துவமுள்ள ஸ்த்ரீகள்,
கார்  - கறுத்த,  அகலில் - நெருப்பில்   வெந்த   இரும்பு ஓட்டில்,
புழுக்களென - புழுக்களைப்போல, பொரிவார் - (அக்னிதாபத்தினால்)
பொரிந்து வருந்துவார்கள், எ-று.                           (27)

957. தோலினை யுரித்திடு நிணத்தடி சுவைத்தார்
    சோலைபுக நீ ணெருப்பு சொரியவுரி கின்றார்
    மாலைகுடை மன்னவரை வஞ்சனைசெய் தமைச்சர்
    சாலக்கழு நிறத்திலுறத் தாமங்கணைந் திருப்பார்.

     (இ-ள்.)   தோலினை  -   சரீரத்தின் மேற்றோலை, உரித்து -
கழற்றி,   இடும்  - அத்தோலின்   கீழிடப்பட்டுள்ள, நிணம் - இரண
சம்பந்தமாகிய,    தடி   - மாமிசங்களை, சுவைத்தார் - தின்றவர்கள்,
(நரகத்திற்  சேர்ந்து), சோலை புக - நிழலுக்காகத் தோப்புகளிலடைய,
நீள்   -    பெரிதாகிய,   நெருப்பு   -   அக்கினியானது, சொரிய -
அத்தோப்புகளில்   மேனின்றும்   விழுதலால், உரிகின்றார் - தங்கள்
மேற்றோலுரிந்து        வேதனை    யடைகின்றார்கள்,    மாலை -
மாலைகளணிந்த, குடை - வெள்ளைக் குடையையுடைய, மன்னவரை -
அரசர்களை, வஞ்சனை செய்த - கபடஞ் செய்தே மாற்றிய, அமைச்சர்
- மந்திரிகள், (நாரகர்களாகப் பிறந்து), சால - மிகவும் பெரிதாகிய, கழு
- கழுமரங்கள்,   நிறத்தில்  - சரீரத்தில், உற - பொருந்தித் தைத்துக்
கொள்ளும்படி,   (புராதன    நாரகர்கள்     செய்விக்க),    தாம் -
நூதனநாரகர்களாகிய     தாங்கள்,    அங்கு    -    அவ்விடத்தே
அக்கழுமரத்தில்,     அணைந்து    -   சேர்ந்து,      இருப்பார் -
வருத்தமுற்றிருப்பார்கள், எ-று.

     ‘செய்த    அமைச்சர்"    என்பது,    ‘செய்தமைச்சர்"   எனத்
தொகுத்தலாயிற்று.                                       (28)

958. இனையதுய ரெண்ணரிய வுடையவெழு நிலத்தில்
    வினையிலிரண் டாநரகின் வீழ்ந்தவுனை மீட்டல்
    முனிவரிறை தனக்குமரி தாயவுள தாகும்
    இனியெனுரை யென்னினு மிதஞ்சிறி துரைப்பேன்.

     (இ-ள்.) எண்ணரிய - கணக்கில்லாததாகிய, துயர் - துன்பத்தை,
உடைய - உடைத்தாகிய, இனைய - இத்தன்மைத்தாகிய, எழுநிலத்தில்
- ஸப்த