நரகங்களில், வினையில் - பாபவினையினால், இரண்டா நரகில் -
இரண்டாவது நரகத்தில், வீழ்ந்த - வீழ்ந்திராநின்ற, உனை - உன்னை,
மீட்டல் - அத்துன்பத்தினின்றும் விலக்குவது, முனிவர் - கணதராதி
முனிவர்களுக்கெல்லாம், இறைதனக்கும் - எஜமானனாகிய அரஹந்த
பரமதேவனுக்கும், அரிதாய் - முடியாத தன்மையாக, உளதாகும் -
உண்டானதாகும், இனி - இனிமேல், உரை - சொல்வது, என் - என்ன
இருக்கின்றது, என்னினும் - என்றாலும், இதம் - நன்மையாகும்படியான
தர்ம மொழிகளை, சிறிது - சுருக்கமாக, உரைப்பன் - (நான்) உனக்குச்
சொல்லுவேன் கேட்பாயாக, எ-று.
‘அரிதாய்" என்பது அகரச்சாரியை பெற்று, - ‘அரிதாய" என
வந்தது. (29)
959. பொறிபுலம் வெறுத்தெழு தவத்தமா னாகி
மறத்தொடு மலிந்தொளிரு மாழிமன்ன னாகிப்
பொறிபுல மிசைப்பொலி மனத்தொடு புணர்ந்தாய்
கறுத்துமுடை மேனிநர கத்திங்ஙன மானாய்.
(இ-ள்.) (நாரகனே!,) பொறி பஞ்சேந்திரியங்களின், புலம் -
விஷயங்களில், வெறுத்து - வைராக்கியமடைந்து, எழும் - உண்டாகிய,
தவத்து - தபஸினாலே, அமரனாகி - கல்பலோகத்தில் தேவனாகி,
(பின்பு), மறத்தொடு - பாபத்தோடு, மலிந்து - நிறைந்து, ஒளிரும் -
பிரகாசிக்கின்ற, ஆழிமன்னனாகி - அர்த்த சக்ரவர்த்தி பதவியை
யடைந்து, (அப்போது), பொறி புலமிசை - பஞ்சேந்திரிய
விஷயங்களின் மேலே, பொலி அழகுபெற்று நிறைந்திராநின்ற,
மனத்தோடு - மனதோடு, புணர்ந்தாய் - சேர்ந்தாய், (ஆகையால்),
இங்ஙனம் - இப்படிப்பட்ட துன்பமுள்ள, நரகத்து - நரகத்தில், கறுத்து
- கறுப்பாகி, முடை - துர்க்கந்தம் வீசுகின்ற, மேனி . சரீரமுடைய
நாரகனாக, ஆனாய் - பிறந்தாய், எ-று. (30)
960. அறத்தொடு புணர்ந்தமர லோகமடை வாயோ
மறத்தொடு மலிந்தெழு நிலத்துமுறை வாயோ
திறத்தினிவ் விரண்டையு நினைத்துறுதி சேரி
னறப்பொரு ளுரைப்பனுன தல்லல்கெடும் வண்ணம்.
(இ-ள்.) அறத்தொடு - தர்மத்தோடு, புணர்ந்து - சேர்ந்து,
அமரலோகம் - தேவலோகத்தை, அடைவாயோ - இனிமேல்
சேர்வாயோ?, (அல்லது), மறத்தொடு - பாபத்தொழிலோடு, மலிந்து -
மிகுதியாகச் சேர்ந்து, எழு நிலத்தும் - இந்த சப்த நரகங்களிலும்,
உறைவாயோ - மறுபடி மறுபடியும் சேர்வாயோ? இவ்விரண்டையும் -
இந்த இரண்டு வகைகளையும், நினைத்து - தீர்க்காலோசனை செய்து,
திறத்தின் - ஆத்மனுடைய திறத்தில், உறுதி - உறுதியாகிய நிலையை,
சேரின் - அடைவாயாமாகில், உனது - உன்னுடைய, அல்லல் -
இத்துன்ப |