நிரையத்துளறவுரைச்சருக்கம் 453


 

    மீட்டுநர கத்திடை விழாதவகை வேண்டிற்
    காட்சிதலை நின்றொழுகு காதன்முத னீத்தே.

     (இ-ள்.)    வீட்டினை   -     மோட்சத்தை,   விளைக்கும் .
உண்டுபண்ணும்படியான,    நல    - நன்மையாகிய, காட்சியினை -
ஸம்மியக்தரிசனத்தை,  விட்டு  - (யோஜித்துப் பெறாமல்) விட்டுவிட்டு,
இம்மோட்டு     நரகத்துயர்   - இந்தப்     பெரிதாகிய       நரக
துன்பங்களையுடைய,  முழங்கு - பெரிதாகி     எரிகின்ற, அழலின் -
அக்னிக்குச் சமானமாகிய ஸந்தாபத்தினையுடைய பூமியிலே, வீழ்ந்தாய்
- வீழ்ந்தனை,    மீட்டு    -   மறுபடி (அதாவது : இனிமேல் வரும்
பிறவிகளில்),   நரகத்திடை - இப்படிப்பட்ட நரகங்களில், விழாதவகை
- அடையாதவகையை,வேண்டில்- நீ இச்சிப்பாயேயாகில், காதல் முதல்
- அன்னியத்  திரவியாபேட்சையாகின்ற   பாகியாப்பியந்தர பரிக்கிரக
வாஞ்சை    முதலியவற்றை,  நீத்து - பரிஹரத்து (அதாவது : நிர்காம்
க்ஷையாகி),    காட்சி    -      ஸம்மியக்தரிசனமாகின்ற தத்வார்த்த
சிரத்தானத்தில்,    தலை  நின்று - முதன்மையாக நின்று (அதாவது :
ஹேயோபாதேயங்களைத் தெரிந்து, உபாதேய ஸ்வரூபத்தில்), ஒழுகு -
நடக்கக்கடவாய், எ-று.                                   (34)

964. வெகுளிமத மாயைமிகை பற்றலிவை வினைக்குப்
    புகுதும்வழி நல்லவல பொறைவளைவு செம்மை
    நகையொடுவந் தீதலிவை நல்வினைக்கு வாய்தல்
    பகையுறவு பணிவுதெளி வின்பங்களைப் பயக்கும்.

     (இ-ள்.)   வெகுளி  - குரோதமும், மதம் - மானமும், மாயம் -
மாயாச்சாரமும்,    மிகைபற்றல் - அதிலோபமுமாகிய, இவை - இந்தச்
சதுர்விதமாகிய கஷாய பரிணாமங்கள், வினைக்கு - பாபகர்மங்களுக்கு,
புகுதும்    - அடைகின்ற, வழி - வழிகளாகும், நல்ல - நன்மையாகிய,
வல     - ஸம்மியக்துவ வல்லமை பொருந்திய, பொறை - க்ஷமையும்,
(அதாவது :  பிரசமமென்கிற உபசமபாவமும்), வளைவு - வணக்கமும்,
செம்மை     -   (மாயத்தினகன்ற)  உண்மையும்,      நகையொடு -
முகமலர்ச்சியுடன், உவந்து - உள்ளமுவந்து, ஈதல் - சத்பாத்திரங்களில்
ஆகாராதிகளை  யளிப்பதுமாகிய, இவை - இவைகள், நல்வினைக்கு -
புண்ணிய     கருமங்களுக்கு,  வாய்தல் - வரப்பட்ட     வழியாகிய
காரணங்களாகும், (ஆகையால்,    நாரகனே!), பகை - ஆத்மனுக்குச்
சத்துருவாகித் துன்பத்தைத்தரும் பாபகர்ம காரணங்களையும், உறவு -
மித்துருவாகி    இன்பத்தைத்தரும்   புண்ணிய கர்மகாரணங்களையும்,
தெளிவு  - இவைகளைத் தெளிதலென்னும் ஸம்மியக்துவத்தினாலாகிய,
பணிவு  - பிராணி  ஸம்யமம் விஷயஸம்யமங்களும், இன்பங்களை -
அப்பியுதயநிஸெ்ரீயஸ    சுகங்களை,   பயக்கும்    -  ஆத்மனுக்கு
உண்டுபண்ணும், எ-று.                                   (35)

965. என்றிக்கதி நீங்குவதென் றேதமுற வேண்டா
    நின்றவினை நீங்கிய கணத்திதுவு நீங்கு