மியத்துவமும், தக்க நாமம் - சுபநாமகர்மமும், மேலாய கோதம் -
உச்சைர் கோத்திரமும், வாழும் - வாழ்கின்ற, தேவர்மானவராயு -
தேவாயுஷ்யம் மனுஷ்யாயுஷ்யங்களும், போதம் - ஞானமும்,
பொருளோடு - ஐஸ்வரியமும், இன்பம் - சௌக்கியமும், புகழ்ச்சி -
யசஸும், மீக்கூற்றம் - மேன்பாடும், மன்னர்க்கு - அரசர்களுக்கு,
ஆதியாம் - முதன்மையாகிய, தன்மை - சக்ரவர்த்தி தன்மையும்,
நல்கி - கொடுத்து, அறவரசு - தர்ம சக்ரத்துக்கு அதிபதியாகிய
அரஹந்த பதவியையும், ஆக்கும் - உண்டாக்கும், எ-று. (96)
97. காதியுங் கருணை யின்மை யாதியாற் கட்டி நின்ற
வேதனை முதல வெல்லாம் வெந்துயர் விளைக்கும் பாவ
மோதிய விரண்டும் யோகி னுயிரினை யுறுத லூற்றாந்
தாதுறக் காய்ந்த போழ்திற் றானுறு நீரை யொத்தே.
(இ-ள்.) காதியும் - காதி கர்மத்தினுடைய உதயத்தினாலும்,
கருணையின், மையாதியால் - அகாருண்யம் முதலியவைகளினாலும்
(அதாவது : அகாருண்யம், அப்ரஸன்னபாவம், அகுணானுராகம்,
அத்தியானப்ரவர்த்தி, அப்ரசஸ்தப்ரவர்த்தி, அஞ்ஞானவிருத்தி,
அதபோனு ப்ரயோகமுமாகிய இந்த ஏழினாலும்), கட்டிநின்ற -
பந்தித்திராநின்ற, வேதனை முதலவெல்லாம் - அசாதவேதநீயம்
முதலாகிய சமஸ்தத்தையும், வெம் - வெப்பம் பொருந்திய, துயர் -
நரகாதி துக்கங்களையும், விளைக்கும் - உண்டுபண்ணும்,
(அஃதியாதென்றால்) பாவம் - பாப பதார்த்தமாம், ஓதிய -
சொல்லப்பட்ட, இரண்டும் - புண்ணியபாப மிரண்டும், யோகின் -
மனவசன காய பரிணாமங்களினால், உயிரினை - ஸம்ஸார
சீவன்களை, உறுதல் - அடைதலானது, தாது - இரும்பானது, உற -
மிகுதியாக, காய்ந்த போழ்தில் - அக்கினியிற் காய்ந்த காலத்தில்,
உறு - அதனிடத்தில் அடைந்த, நீரையொத்து - ஜலத்துக்கு
ஸமானமாகி, ஊற்றும் - ஆஸ்ரவமாகும், எ-று.
(தான் - அசை). (97)
|
98. ஈனமே யதிக மீரா பதகமே சாம்ப ராயம்
ஞானமே ஞான மின்மை நல்லவாம் புண்ணிய பாவந்
தேனுலா மலங்கல் வேந்தே தவியமே பாவமென்று
தானெலா வுயிர்க்கு மாகு மூற்றிவை தாம்பத் தாகும்.
(இ-ள்.) தேன் - மதுவானது, உலாம் - வியாபித்திராநின்ற,
அலங்கல் - மாலையையணிந்த, வேந்தே - வைஜயந்த மகாராஜனே!,
ஊற்று - ஆஸ்ரவமானது. ஈனமே - ஹீநாஸ்ரவமென்றும், அதிகம் -
அதிகாஸ்ரவமென்றும், ஈராபதகம் - ஈரி யாபதாஸ்ரவமென்றும்,
சாம்பராயம் - கஷாயாஸ்வரமென்றும், ஞானம் -
ஞானாஸ்ரவமென்றும், ஞானமின்மை - அஞ்ஞானாஸ்ரவமென்றும்,
நல்லவாம் - நன்மை
|