466மேருமந்தர புராணம்  


 

மறுபடி  இப்பூமியில்   வந்து,  மன்னிய - நிலை பெற்ற, புகழினான் -
புகழ்ச்சியையுடையவனாகிய,    சஞ்சயந்தன்      -       சஞ்சயந்த
பட்டாரகனானான்,  தன் வரவு - அவனது பிறப்பின் வரிசை, இதாம் -
இத்தன்மையாகும், எ-று.                                   (18)

988. வயிரத்தை யொருவர்க் காக்கி யிருவர்க்கும் பிறவி தோறுந்
    துயரத்தை விளைத்தல் சொன்னா லிவர்களே சொல்ல வேண்டாம்
    மயரிகண் மறத்தி னீங்கி நாகபா சத்தை வாங்கி
    யுயிரொத்திங் கிவனோ டொன்றி யொழுகுநீ யுரகர் கோவே.

     (இ-ள்.) உரகர்   கோவே    - தரணேந்திரனே!, வயிரத்தை -
வைரபாவத்தை,  ஒருவர்க்கு - ஒருவருக்கு, ஆக்கி - உண்டு பண்ணி,
இருவர்க்கும்   - இந்த இரண்டு பேர்களுக்கும், பிறவிதோறும் - பவம்
பவந்தோறும்,   துயரத்தை   -    துக்கத்தை,  விளைத்தல் - உண்டு
பண்ணிக்கொண்டதை, சொன்னால் - சொல்லினால், இவர்களே - இந்த
இரண்டு      பேர்களே     அதற்குப்    போதுமான    சாட்சிகள்,
சொல்லவேண்டாம்    -    இனி      வேறொருவரைச்     சொல்ல
வேண்டியதில்லை, (ஆகையால்), மயரிகண் - மயக்கத்தையுடைய இந்த
வித்துத்தந்தன்    மேலாகிய,     (மறத்தின்   -  வைரபரிணதியாகிய
பாபத்தினின்றும்,   நீங்கி  - விலகி, நாகபாசத்தை - இவனைக்கட்டின
நாகபாசத்தை,வாங்கி - விடுவித்து, இங்கிவனோடு - இவ்விடத்து இந்த
வித்துத்   தந்தனோடு, ஒன்றி - சினேகத்திற் பொருந்தி, உயிரொத்து -
உனதுயிர்க்குச் சமானமாக, (இவனைக் கருதி), ஒழுகு - தயாபரிணதியிற்
கூடிச் செல்லக்கடவாய், எ-று.                              (19)

989. என்றலு மிறைவ வன்றென் னரகத்து ளிடும்பை தீர்த்தா
    யின்றுமிப் பிறவி யெல்லா நின்றவா றெனக்குச் சொல்லி
    வென்றவ ரறத்திற் காட்சி விமலம தாகச் செய்தா
    யென்றனக் கிறைவ னீயே யின்னமொன் றருளிச் செய்வன்.

     (இ-ள்.) என்றலும்  - என்று   ஆதித்யாபதேவன் சொல்லவும்,
(தரணேந்திரன்   அவனை   நோக்கி), இறைவ - நாதனே!, அன்று -
அப்பொழுது,   என் - என்னுடைய, நரகத்துள - நரகத்திளுண்டாகிய,
இடும்பை   - துன்பங்களை, தீர்த்தாய் - தர்மப் பிரபோதனஞ் செய்து
நீக்கினாய்,    இன்றும் - இப்பொழுதும், இப்பிறவியெல்லாம் - இந்தப்
பிறப்புகளெல்லாம்,   நின்றவாறு   - உண்டாகிய விதத்தை, எனக்குச்
சொல்லி  -எனக்குத் தெரியும்படி சொல்லி, வென்றவர் - கருமங்களை
ஜெயித்த    ஜினேந்திரனாற்   சொல்லப்பட்ட,   அறத்தில்    - ஸ்ரீ
ஜினதருமத்தினால்,     காட்சி    -    தர்சனத்தை,   விமலமதாக -
தோஷரஹிதமாக (அதாவது :    சுத்த ஸம்மியக்த்வமாக), செய்தாய் -
எனக்குத்   தெளியச் செய்தாய், என் தனக்கு  - எனக்கு, இறைவன் -
குருவானவன், நீயே - நீயே, இன்னம் - இன்னமும், ஒன்று - ஒரு