காரியமுண்டு, (அதை), அருளிச் செய்வன் - அன்புடன்
சொல்லுகின்றேன், (கேட்பாயாக), எ-று. (20)
990. விஞ்சையின் வலியிற் போகி மேதக்கோர் தம்மை வவ்வித்
தஞ்சிறை வைக்கும் வித்துத் தந்தன்றன் குலத்து மிக்க
விஞ்சையைப் பறித்து வீழ்ந்த சிறகுடைப் பறவை போல
விஞ்சைமா நகரத் துள்ளே யிருத்துவ னிவரை யின்றே.
(இ-ள்.) விஞ்சையின் - வித்தைகளினுடைய, வலியில் -
வல்லமையினால், போகி - ஆகாயமார்க்கமாக விமானத்திற்சென்று,
மேதக்கோர் தம்மை - மேன்மை பொருந்திய குணமுடையவர்களையும்,
வவ்வி - பிடித்து, தஞ்சிறை - தங்களிடம் கொண்டு வந்து சிறையாக,
வைக்கும் - வைக்கின்ற, வித்துத்தந்தன் தன் - இந்த
வித்யுத்தம்ஷ்ட்ரனுடைய, குலத்து - குலத்தார்களில் உண்டாகிய, மிக்க
விஞ்சையை - மஹா வித்தைகளை, பறித்து - அவர்கட்காகாமல் தடை
செய்து நீக்கி, வீழ்ந்த சிறகுடை - சிற குதிர்ந்திருக்கின்ற, பறவை
போல - பட்சியைப்போல, இவரை - இவ்வித்தியாதர வம்சத்தார்களை,
இன்று - இப்பொழுது, விஞ்சைமா நகரத்துள்ளே - வித்தியாதரர்
வசிக்கின்ற பட்டணங்களிலேயே, இருத்துவன் - ஸ்தாபிப்பேன்,
எ-று. (21)
991. என்றிடா வுரைப்ப வாதித் தாபனிப் பிழைபொ றென்னப்
பொன்றிடாக் கேதஞ் சூழா திவர்களென் வெகுளி நீங்கா
தென்றிடா வுரைத்து மேனா ளிறைவநின் னருளி னாலே
மன்றுலாங் குழலி னார்க்கே மாவிஞ்சைப் பணிசெய் கென்றான்.
(இ-ள்.) என்றிடா - என்று, உரைப்ப - சொல்ல,ஆதித்தாபன் -
ஆதித்யாபதேவன், (அவனை நோக்கி தரணேந்திரனே!), இப்பிழை -
இவனால் செய்யப்பட்ட இந்தத் தவறுதலை, பொறு - நீ க்ஷமைப்
பண்ணிக்கொள், என்ன - என்று சொல்ல, (அதற்கவன்), இறைவ -
நாதனே!, இவர்கள் - இவ்வித்தியாதர வர்க்கத்தார்கள், பொன்றிடா -
என்னால் இறவாமலும், கேதம் சூழாது - இவர்கட்கு என்னால் ஒரு
பொல்லாங்காகிய தண்டனை பற்றாமலும், என் வெகுளி - எனது
கோபம், நீங்காது - நீங்கமாட்டாது, என்றிடாவுரைத்து - என்று
சொல்லி, (மேலும்), மேனாள் - இனிவருங் காலத்தில்,
நின்னருளினாலே - உனது தயாபரிணாமானு சாரத்தினால், மன்றுலாம்
- வாசனை வீசும், குழலினார்க்கு - அளகத்தையுடைய இவ்வம்ஸத்து
ஸ்த்ரீமார்களுக்கு, மாவிஞ்சை - மஹா வித்தைகள், பணிசெய்க -
சாதகமாகி ஏவல் செய்க, என்றான் - என்று சொன்னான், எ-று. (22)
992. இவ்வண்ணஞ் செய்தி டேனே லிருட்பிழம் பிரண்டு மின்னுக்
கவ்விய தனைய மேனிக் கடையர்தங் களிப்பி னாலே |