பிறவிமுடிச்சருக்கம் 469


 

     (இ-ள்.)    (அவ்வாறு    செய்து    பின்னர்),   தரைமகள் -
பூமிதேவியின்,    திலக   மன்ன   - நெற்றிப்பொட்டுக் கொப்பாகிய,
(அதாவது :  பூமியிற்சிறந்த), தடவரையி  தன் கண் - இச் சஞ்சயந்தர்
பரி   நிர்வாணமுற்ற   இந்த   விசாலமான கிரியின்மேல், மேனாள் -
இனிவருங்காலத்தில், பிணையனாருக்கு - பெட்டைமான்போல் மருண்ட
பார்வையையுடைய    ஸ்த்ரீமார்களுக்கு,    பிரமரி  முதல - பிரம்மரி
முதலாகிய, விஞ்சை - வித்தைகள், அடிபட - வசமாக, இரிமந்தான் -
மானபங்கந்தான்,    இக்குலத்து    -     இந்த      வித்துத்தந்தன்
குலத்துட்டோன்றும்,    மைந்தர்க்கு - புருஷர்களுக்கு, ஆக என்று -
உண்டாகக்கடவது என்று உறுதிபண்ணி, இதன் பேர் - இப்பர்வதத்தின்
பெயரானது,   இரிமந்தமென்று    - ஹ்ரீமந்தமென்று சொல்லி, ஓர் -
ஒப்பற்ற,    குன்றின்   -   அப்பர்வதத்தின்மேல், இறைவனாலயம் -
சஞ்சயந்த    பட்டாரகருடைய      கோயிலை,      சமைத்தான் -
உண்டுபண்ணினான், எ-று.                                 (25)

     1 இரிமம்   -   ஹ்ரீமம் என்றும் வடமொழித் திரிபு : இரிமம் -
லஜ்ஜை.

வேறு

995. மஞ்சு லாமலை மேல்மலி மாநகர்
    பஞ்ச நன்மணி யோடு பசும்பொனாற்
    சஞ்ச யந்தபட் டாரக சட்டகம்
    நஞ்சு கட்கிறை வன்செய்து நாட்டினான்.

     (இ-ள்.)    (அவ்வாறு      செய்து),     நஞ்சுகட்கிறைவன் -
நரகர்க்கிறைவனாகிய   தரணேந்திரன்,  மஞ்சு - மேகங்கள், உலாம் -
உலாவுகின்ற,   மலை   மேல்  - ஹ்ரீமந்தமென்னும் அப்பர்வதத்தின்
மேலே,    மலி (லக்ஷணங்களால்) நிறைந்த, மா - பெருமையையுடைய,
நகர் கோயிலை, பஞ்சம் - ஐந்து விதமான வர்ணங்களையுடைய, நல் -
நன்மையாகிய,   மணியோடு    - (பத்மராகம், இந்திர நீலம், மரகதம்,
கோமேதகம்,   வைரம்,   ஸ்படிகம்,  முதலாகிய) இரத்தினங்களோடு,
பசும்பொனால்    - மாற்றற்ற  பசுமையாகிய பொன்னினால், செய்து -
இயற்றி,   சஞ்சயந்தபட்டாரக   சட்டகம்  - சஞ்சயந்தட்டாரகருடைய
பிரதிமாரூபத்தை, செய்து -செய்து, நாட்டினான் - ஸ்தாபித்தான், எ-று.

     ‘செய்து" என்பது இரண்டிடத்துங் கூட்டப்பட்டது.         (26)

996. முழவு தண்ணுமை மொந்தை முழங்கின
    முழை மழையின் முரன்ற வலம்புரி
    கழல நின்றழைத் திட்டன காகளங்
    குழலோ டேங்கின வீணைக் குழாங்களே.