றோர் சங்கங்களில், ஆயும் - ஆராய்ந்தறியும் பொருளும், நீ - நீயே,
ஒரு நிலையிலா நிலையை - ஒரு நிலையலாத நிலைமையை
யுடையவன், (அதாவது : அர்த்தபரியாயத்தால் உத்பாத, வ்யய,
த்ரௌவ்ய யுக்த ஸத்தா லக்ஷண சுத்த திரவிய குண
பரியாயத்தையுடையவனாக), நீயாகிலும் - நீ இருந்தபோதிலும், உலகில்
- இவ்வுலகத்தில், நீ - நீ, உள்ளாய் - துருவமாகவிருக்கிறாய், இறைவ
- நாதனே!, எ-று. (29)
1உலகின் - திரிலோகத்தையும், உள்ளாய் - உன்னுடைய அனந்த
ஞானத்திற்குள் அடக்கிக்கொண்டவனும், நீ - நீயே, (அப்படி நீ
உலகத்தை உனக்குள் அடக்கிக்கொண்டு)உலகின் - இவ்வுலகத்திலும்,
உள்ளாய் - நீயும் ஒருபொருளாய் இருக்கிறாய், இறைவ - இறைவனே!,
என்று பொருள் கூறுவோருமுளர்.
உலகின் - உருபுமயக்கம்.
999. அமலனீ யறிவனீ யருகனீ யசலனீ
விமலனீ வீரனீ வேரமி லொருவனீ
துமிலனீ துறவனீ சுகதனீ சிவனுநீ
கமலனீ கருணைநீ கைவலச் செல்வனீ.
(இ-ள்.) அமலன் - மலமில்லாத நிர்மல ஸ்வரூபன், நீ - நீயே,
அறிவன் - சுத்தசேதனா பிரத்தியக்ஷ ஸ்வாத்மோத்தகுண, ஸ்வ,
பரப்பிரகாசனா ஸர்வஜ்ஞனும், நீ - நீயே, அருகனீ - யோக்யனும்
நீயே, அசலனீ - சலனமில்லாதவனும் நீ, விமலனீ - தன்னிலை
யெய்தின பரிசுத்தனும் நீயே, வீரனீ - ஸ்வயம்புகுண சக்த சுத்த சக்தி
யுக்த அனந்த வீரியனும் நீயே, வேரமில் - வைரபாவ மில்லாத,
ஒருவன் - ஒற்றுமையானவன், நீ - நீயே, துமிலனீ - ஓங்கார
வடிவனும் நீயே, துறவனீ - பாகியாப்பியந்தர பரிக்கிரகரஹிதனும்
நீயே, சுகதனீ - அனந்த சுக ஸ்வரூபியும் நீயே, சிவனு நீ -
மோக்ஷமங்களனும் நீயே, கமலன்நீ - பத்மாஸனனும் நீயே, கருணை நீ
- ஸர்வ ஜீவதயாபரனும் நீயே, கைவலச் செல்வனீ - நிச்சய
ஆத்மத்திரவிய ஸ்வரூபமாகிய கேவல லக்ஷ்மியையுடைவனும் நீயே,
எ-று.
‘சுகதனீ விகதனீ" எனவும் பாட பேத முண்டு. (30)
1000. இறைவனீ ஈசனீ எண்குணத் தலைவனீ
பொறியிலா வறிவனீ பூசனைக் கிறைவனீ
மறுவிலா வொருவனீ மாதவத் தலைவனீ
சிறியயா னின்குணஞ் செப்புதற் கரியனீ.
(இ-ள்.) இறைவன் நீ - நாதனும் நீயே, ஈசன் நீ - முதல்வனும்
நீயே, எண் குணத்தலைவனீ - அனந்தஜ்ஞானாதி அஷ்ட
குணத்தலைவனும் நீயே, பொறியிலாவறிவனீ - அதீந்திரிய
ஞானஸ்வரூபனும் நீயே, பூசனைக்கு இறை |