பிறவிமுடிச்சருக்கம் 475


 

     போல்  - சௌக்கியமில்லாத விதத்தைப்போல,அருளிலார்க்கு -
ஜீவகாருண்ய   மில்லாதவர்களுக்கு, இன்பம் - சௌக்கியம், இல்லை -
இவ்வுலகத்தில்   உண்டாவதில்லை, பொன்கொள்வாரில் - பொன்னை
வாங்குகின்றவர்களில், தெரிவிலார்க்கு - மாற்றுரை நிறைமுதலிய குணந்
தெரியாதவர்களுக்கு, இல்லை - நலமாகும் குணமில்லை, (இவைபோல),
என்றும்    -   எப்பொழுதும்,   தெரிவிலார்க்கு  - ஸம்மியக் தர்சன
மில்லாதவர்களுக்கு,  தீநெறி  - பொல்லாங்கான வழியில், (அதாவது :
ஸம்ஸாரவிருத்தியாகிய        பந்தமார்க்கத்தில்),        செல்லல் -
அடைவதைவிட்டும்,   நீங்கல் - நீங்கி மோக்ஷமார்க்கத்தை யடைவது,
இல்லை - உண்டாவதில்லை, (ஆகையால்), நீ - நீ, மருள் - மயக்கம்,
இலா    -   இல்லாத, மனத்தையாய் - மனமுடையனாகி, (அதாவது :
ஸம்மியக் ஞானாப்பியாஸம் செய்பவனாகி), மனையறம் - (அதற்கேற்ப
உபாஸகாத்தியயநாங்கமென்னும்   ஸ்ரீாவகாச்சாரத்தில், சொல்லப்பட்ட)
கிரஹஸ்ததர்மத்தை,  மருவுக    -   சேர்ந்து  அனுஷ்டிக்கக்கடவாய்
என்றான் - என்றும் சொன்னான், எ-று.

     ‘தெரிவிலார்க்கில்லை"   என்ற      தொடர்    இரண்டிடத்துங்
கூட்டப்பட்டது.                                          (37)

1007. அரசன்சஞ் சயந்த னாக வவற்குநீ யமைச்ச னாகப்
     பெரியமா தேவி யானேன் பின்னையப் பவங்க டோறும்
     மருவிநாம் மகிழ்ந்து சென்ற பிறப்புமற் றதனுக் கப்பா
     லொருவரா லுரைக்க லாகா வுலந்தன பிறவி மேனாள்.

     (இ-ள்.)  (வித்யுத்தம்ஷ்ட்ரனே!),  சஞ்சயந்தன் -  இச்சஞ்சயந்த
பட்டாரகன்,  அரசனாக   - பூர்வம் ஸிம்மஸேன மஹாராஜனாயிருக்க,
அவற்கு   -  அவ்வரசனுக்கு, நீ - நீ, அமைச்சனாக - அக்காலத்தில்
ஸ்ரீபூதி    என்னும்     பெயருடையவனாகி    மந்திரியாக,    (நான்
அவ்வரசனுக்கு),   பெரியமா   தேவியானேன் - பெருமை பொருந்திய
பட்டத்துத்   தேவியாகிய   இராமதத்தையானேன், பின்னைப்பவங்கள்
தோறும்   -  அதன் பிறகுண்டாகி இப்போதென்னால் சொல்லப்பட்ட
அந்தப்  பிறப்புக்கள்   தோறும்,  மருவி - கர்ம ஸஹிதமாகி, நாம் -
ஆத்மனாகிய நாம், மகிழ்ந்து - இச்சம்ஸார போகத்தில் சந்தோஷித்து,
சென்ற  - அடைந்த, பிறப்பு - பிறப்புக்களாகும், மற்று - பின்னையும்,
(சொல்ல    வேண்டுமானால்), அதனுக்கு - (இப்போது சொல்லப்பட்ட)
அந்த    பிறப்புவகைக்கு,   அப்பால்    - அப்பாலாகிய (அதாவது :
முன்னாகிய),   மேனாள்  - முற்காலத்தில், உலந்தன - எடுத்தெடுத்து
நீங்கப்பட்டனவாகிய,  பிறவி - பிறப்புக்கள், ஒருவரால் - ஒருவராலே,
உரைக்கலாமோ    - எண்ணிச்   சொல்லல்   முடியுமோ? (முடியாது,
அனந்தமாகும் என்றும் சொன்னான்), எ-று.                   (38)

1008. இனையன கேட்டுத் தன்னை யிழித்தந்த வித்துத் தந்தன்
     மனமலி கறுவு நீங்கி வானவன் றன்னை வாழ்த்திக்