482மேருமந்தர புராணம்  


 

     (இ-ள்.)  (அவ்வாறு பிறந்த அக்குழந்தைகள் வளருங்காலத்தில்)
மங்கையர்     -    தாய்மார்களுடைய,       கொங்கையென்னும் -
ஸ்தனங்களென்னும்,   குவட்டினின்று   -  பர்வத சிகரங்களினின்றும்,
இழிந்து  -  இறங்கி,   (அதாவது :   முலைப்பாலுண்டு அதை மறந்து
பின்பு),   நல்ல  -  நன்மையாகிய,  சிங்கப்   போதகங்கள் போல -
சிங்கக்குட்டிகளைப்போல, தவிசிடை  - மெத்தைகளின்மேல், தவழ்ந்து
சென்று   -  தவழ்ந்தோடி, (அதன் பிறகு),பங்கயத்தலங்கள் போலும் -
தாமரைத் தளங்களுக்குச் சமானமாகிய, பவழம் - பவளம்போற் சிவந்த,
சீறடியை    -     சிற்றடிகளை,   பாராம்மங்கை   தன்   சென்னி -
இப்பூமிதேவியாகிய    பெண்ணினுடைய   சிரசில், சூட்டி - அணிந்து,
மாலையாக - ஒழுங்காக, நடந்திட்டார் - நடந்தார்கள், எ-று.      (9)

 1020. நாவிளங் கொம்பி னல்ல கலையல்கு னலத்தை யுண்டு
      மாவிளங் களிறு தேர்வாள் விற்றொழில் வல்ல ராகித்
      தேவிளங் குமரர் போலத் தேசொடு திளைக்கு மேனிக்
      கோவிளங் குமரர் காமன் குனிசிலைக் கிலக்க மானார்.

     (இ-ள்.)  (அதன்மேல்), கோவிளங்குமரர் - அந்த இளமையாகிய
இராஜகுமாரரிருவரும்,  நாவிளங்கொம்பின்  -  நாவிலுறையும்படியான
இளங்கொடிபோன்ற   ஸரஸ்வதி   தேவியின், நல்ல - நன்மையாகிய,
கலையல்குனலத்தை    -    மேகலையணிந்த   அல்குல் நலத்திற்குச்
சமானமாகிய சதுச்சஷ்டி கலைஞானங்களையும் அதனாலாகும் அழகிய
பலன்களையும்,   உண்டு - அனுபவித்து, (அதாவது : தத்துவ சாஸ்திர
நிபுணர்களாகி),   மா   -   குதிரை     ஏறுதலும்,    இளங்களிறு -
இளம்பருவமுள்ள  யானைகளை  ஏறிச்  செலுத்துவதும், தேர் - இரத
சாரத்தியஞ்  செய்வதும்,  வாள்  -  வாள்  வீசுதலும்,   வில் - வில்
பழக்கமும்,   (ஆகிய),  தொழில்  -   தொழில்களில்,   வல்லராகி -
வல்லமையையுடையவர்களாகி, தேவிளங்குமரர்போல - இளமையாகிய
தேவகுமாரர்போல, தேசொடு - ஒளியோடு, திளைக்கும் - பொருந்திய,
மேனி  -  சரீரமுடைய,  காமன் - மன்மதனுடைய, குனி - வளைந்த,
சிலைக்கு  -  கருப்பு  வில்லுக்கு,  இலக்கமானார்  - குறியானார்கள்,
(அதாவது : யௌவனவயதையடைந்தார்கள்), எ-று.             (10)

 1021. கடைந்தநல் லலகம் பென்னக் கறுத்திடை வெளுத்துச் சூழ
      மடங்கல்போன் மொய்ம்பின் மைந்தர் மனத்தினைக் கணத்த
                                            ழிக்குந்
      தடங்கணம் பாக நல்லார் தனுவில்நா ணேற்றித் தானங்
      கடங்கிநின் றனங்கன் மைந்த ருள்ளத்தை யழிக்க லுற்றான்.

     (இ-ள்.)   (அவ்வாறு   யௌவனத்தை   யடைந்த காலத்தில்),
கடைந்த   -   கடைசற்பிடித்த,   நல் - நன்றாகிய, அலகு - கூர்மை
பொருந்திய, அம்பென்ன -