484மேருமந்தர புராணம்  


 

மாகிற,   மாயத்தின்   -   நிலையில்லாத   தன்மையுள்ள,  வடிவு -
ஸ்வரூபமும்,   (ஆகிய), எல்லாம் - இவைகளெல்லாம், நினைப்பில் -
தியானத்தில்,   ஆம்   -   உண்டாகின்ற,    (அதாவது : இவற்றைச்
சிந்திக்கின்ற),   மனத்தினார்கள்    -    ஸம்வேக  பாவனையையும்
வைராக்கிய  பாவனையையுமுடைய இக்குமாரர்களிடத்தில், நுகர்ச்சி -
பஞ்சேந்திரிய  விஷய  வனுபோகமானது, நோயொத்த - வியாதிக்குச்
சமானமாகியது,   செல்வம்   -   ஐஸ்வரியமானது,   நுரையொத்த -
ஜலத்திலுண்டாகின்ற நுரையொத்தது, இளமை - பாலப்பருவமும், தேசு
- சரீர தேஜஸும்,  காயத்து - ஆகாயத்திலுண்டாகும், வில்லையொத்த
- இந்திரதனுசிற் கொப்பாகியது, (இத்தகைய  பாவனையுடைய), அங்கு
- அந்த   மனத்தினிடத்தில்,   காமனுக்கு   -  மன்மதனுக்கு, இடம்
உண்டோ - தங்குதற்கு இடமுண்டாகுமோ? (ஆகாது), எ-று.

     இங்ஙனம் கூறியதனால் அவர்களிடம் விராகம் மேலிட்டதென்பது
பெறப்படும். (13)

வேறு.

 1024. அனித்தமர ணின்மையுற வின்மைபிறி தின்மை
      யுனற்கரிய மாற்றுலக மூற்றுதர லுவர்ப்பு
      நினைப்பில்வருஞ் செறிப்புதிர்ச்சி போதிபெறற் கருமை
      மனத்தின்வர னினைத்துமனை யறத்தொழுகும் வழிநாள்.

     (இ-ள்.) (இவ்வாறாகி), அனித்தம் - சரீராதிகளினது அனித்தியத்
தன்மையையும்,    அரணின்மை   -   பந்துக்களும்  திரவியங்களும்
ரக்ஷணையாகாத   விதமாகிற  அசரண  பாவனையையும், உறவின்மை.
உடலாதிபரத் திரவியங்கள் அன்னியத்துவமென்பதையும், பிறிதின்மை -
ஆத்மகுண  ஞானாதிகள்  ஏகத்துவமான தன்மையையும், உனற்கரிய -
நினைத்தற்கரியதாகிய,   மாற்று - ஸம்ஸார அஸாரத்தையும், உலகம் -
இந்த   லோகத்தினது   தன்மையையும்,   ஊற்றுதரல் - ஆத்மனுக்கு
மித்தியாதர்சனாதி விபாவ குணத்தாலாகும் பாவாஸ்ரவத் திரவியாஸ்ரவ
ஸ்வரூபத்தையும்,   உவர்ப்பு   -   அசுசித்துவத்தையும்,  நினைப்பில்
வருசெறிப்பு    -    பாவஸம்     வரை     நிமித்தமாக    வரும்
திரவியஸம்வரையையும்,    உதிர்ச்சி    -    பாவ நிர்ஜ்ஜரை திரவிய
நிர்ஜ்ஜரைகளின்    விதாயத்தையும்,    போதி பெறற்கருமை - நிச்சய
ஸம்மியக்   ஞானம்  லப்தமாவ தருமையாகிய போதி துல்லபமென்கிற
தன்மையையும், மனத்தின் - மனதிலே, வரல் - இவைகள் வருதலாகிய
தர்ம   ஸ்வாக்கியாயத்தையும்,   நினைத்து   -   இந்த துவாதசானுப்
பிரேட்சைகளை   தியானித்து,   மனையறத்து - கிரஹஸ்த் தர்மத்தில்,
ஒழுகும் நாள் வழி - இக்குமாரர்கள் செல்கின்ற காலத்தில், எ-று. (14)

 1025. அமலநல வாடியகத் தானநிழற் போல
      துமிலமிடை மூவுலகுந் தோன்றுமறி வுடைய