486மேருமந்தர புராணம்  


 

செந்தாமரைப்   புஷ்பத்தின்மேல்,  இறைநான்கின் - சதுரங்குலத்துக்கு
மேலே,   மேவி  -  பொருந்தி,   எழுந்தருளுமென  - ஸ்ரீ விஹாரம்
வருவாரென்று,  வானோர்  -  தேவர்கள், எழில் - அழகு பொருந்திப்
பிரகாசியாநின்ற,    மணி    -    இரத்தினங்களாலும்,     பொன் -
ஸ்வர்ணத்தினாலும்,   ஓசனை    யிரண்டகன்ற  - இரண்டு யோசனை
யகலமுடையதாகிய, மண்டபமொன்று - ஒரு மண்டபத்தை, அமைத்தார்
- நிர்மா     பணஞ்   செய்தார்கள்,   (அவ்வாறு  செய்து), உடன் -
அப்பொழுது,    முத்தின்    -     முத்துக்களினால்,       (மணற்
பரப்புக்களையுடையதாக),  ஓசனைகள் மூன்றகன்ற - மூன்றுயோஜனை
யகலமுடையதாகிய,   வீதி   -  வீதியை, அமைத்தார் - செய்தார்கள்,
எ-று.                                                   (17)

 1028. மாருதியும் வாசமய மாகிமந்தம் வீசிப்
      பாரின்மலி நுண்டுகள் பரிந்திட முயன்றான்
      காரின்மிசை வந்துவரு ணன்கமல மாதி
      வேரிமலர் கமழுநறு நீர்த்துவலை விட்டான்.

     (இ-ள்.)   (அவ்வாறு   அவற்றை அமைத்த பின்), மாருதியும் -
வாயுகுமாரனும்,    வாசமயமாகி   -     வாஸனை மயமாக, மந்தம் -
மந்தமாருதத்தை,   வீசி  -   வீசப்பண்ணி,  பாரில்மலி - இப்பூமியில்
மிகுந்துண்டாகின்ற,   நுண்துகள்  -   சிறிய   துளிகளை, பரிந்திட -
பரிகரித்துச்   சுத்தஞ்   செய்ய,   (அதாவது :  அத்தூளிகள்  பறந்து
போகும்படி),   முயன்றான்  - முயற்சி செய்தான், வருணன் - வருண
குமாரனானவன்,  காரின்மிசை  -  மேகத்தின் மேலே, வந்து - வந்து,
கமலமாதி    -    தாமரைப்    பூவாதியாக,  மலர் கமழும் - புஷ்ப
வாஸனைகளை  வீசும், வேரிநறு நீர்த்துவலை - வாசனை பொருந்திய
நல்ல    நீர்த்துளிகளை,   விட்டான்   -   தெளித்துக் குளிர்ச்சியை
யுண்டுபண்ணித் தூளியுபசமஞ் செய்தான், எ-று.               (18)

 1029. இந்திரனு மெண்மையுல காந்தியரு மிறைவன்
      வந்தெழுந் தருளும்பொழு தென்றெதிர் வணங்க
      இந்திரர்தங் கோனுமெழுந் தானிரு நிலத்து
      ளந்தரங்க டீர்ந்தவறி வற்கியல்பி தாமே.

     (இ-ள்.)  (அத்தருணத்தில்), இந்திரனும் - ஸௌதர் மேந்திரனும்,
எண்மை  -  எட்டுப்  பிரகாரமான,   உலகாந்தியரும் - லௌகரந்திக
தேவர்களும்,  இறைவன் - ஸர்வஜ்ஞன், வந்து - ஸ்ரீ விஹாரமாகும்படி
வந்து, எழுந்தருளும் பொழுதென்று - எழுந்தருளுங்காலமென்று, எதிர்
- ஜினேந்திரனுடைய   எதிரிலே,    வணங்க  -  வணக்கஞ் செய்ய,
இந்திரர்தங்   கோனும்   -   தேவேந்திரர்களுக்கெல்லாம் நாதனாகிய
ஸ்வாமியும்,   எழுந்தான்   -    செல்லா  நின்றான், இருநிலத்துள் -
பெரிதாகிய இப்பூமியில், அந்தரங்கள் - மோகங்கள், தீர்ந்த - நீங்கின,
அறிவற்கு -