ஸ்ரீ விஹாரச்சருக்கம் 487


 

வீதராக    ஸர்வஜ்ஞனுக்கு,   இது  -  இத்தன்மையாகிய ஸ்ரீ விஹார
ஆஸ்தரனாதி கிரியைகள், இயல்பாம் - ஸ்வபாவமாகும், எ-று.    (19)

 1030. இடிமுரசந் திமிலைகண்டை காளமெழிற் சங்கந்
      துடிமுழவ மொந்தைதுண வந்தண்ணுமை செகண்டை
      கடன்முகிலி னொலிகரந்து திசைகள்விம்ம வொலித்த
      தடமலரின் மிசையிறைவன் றானொதுங்கும் பொழுதே.

     (இ-ள்.)   இடி   -    இடிபோல்    சப்திக்கின்ற,   முரசம் -
பேரிகைகளும்,   திமிலை  -  பம்பையென்னும் மேளமும், கண்டை -
பெருமணியும்,   காளம்   -   சிறு    சின்னங்களும், எழில் - அழகு
பொருந்திய,   சங்கம்   -    ஊது    சங்குகளும்,  துடி - உடுக்கை
வாத்தியமும்,   முழவம்   -    மத்தளங்களும்,     மொந்தை - ஓர்
கட்பறைகளும், துணவம் - துணவமென்கிற வாத்தியமும், தண்ணுமை -
உறுமி மேளமும்,    செகண்டை   -    ஜெயகண்டை     யென்னும்
சேமங்கலமும்,   (ஆகிய   இவ்வாத்தியங்கள்), தடம் - விசாலமாகிய,
மலரின்மிசை   -    செந்தாமரைப்    பூவின்மேல், இறைவன் தான் -
ஸ்வாமியான   ஜினேந்திரன்,   ஒதுங்கும்பொழுது - ஸ்ரீவிஹாரமாகுங்
காலத்தில்,     கடல்    -    ஸமுத்திரத்தினுடையவும்,     முகில் -
மேகத்தினுடையவுமாகிய,    ஒலி   -   சப்தங்கள், கரந்து - மறைந்து
போகும்படி,   திசைகள் - எத்திக்குகளிலும், விம்ம - வியாபிக்கும்படி,
ஒலித்த - சப்தித்தன, எ-று.                                (20)

 1031. இன்னரம்பின் யாழ்குழல்கள் வீணைமுத லேந்திக்
      கின்னரியர் கிளைநரம்பி னோதினர்கள் கீதம்
      பொன்வயிர மணியமிர்த மீன்றுமல ரேந்திப்
      பன்னரிய வகையினில மடந்தையெதிர் பணிந்தாள்.

     (இ-ள்.) கின்னரியர் - கின்னர தேவர்கள், இன் - இனிமையாகிய
ஒலியைச்   சப்திக்கும்படியான,    நரம்பின்   -    நரம்பினாலாகிய
தந்திகளையுடைய,   யாழ்   வீணை  -    யாழ்வீணையென்னும் பல
பேதங்களையுடைய   வீணைகளின்   வாத்தியங்களையும், குழல்கள் -
ஊதிடுங்   குழல்வாத்தியங்களையும்,  ஏந்தி - தரித்து, கிளை - கிளை
கிளைகளாக,   கீதம் - சங்கீதங்களை, (கண்டத்தினாலும்), நரம்பின் -
தந்திப் பிரயோகத்தாலும்,  ஓதினர்கள் - பாடினார்கள், நிலமடந்தை -
பூமி தேவியானவள்,  பொன்    -    பொன்களையும்,     வயிரம் -
வஜ்ரக்கற்களையும்,  மணி - பத்மராகாதி மணிகளையும், அமிர்ந்தம் -
(பூலோகத்தில்    பிராணிகளுக்கு    ரக்ஷணையாகிய)   ஜலமாதியான
பொருள்களையும்,   ஈன்று - தந்து, மலர் - புஷ்பங்களையும், ஏந்தி -
தரித்து,  பன்னரிய - சொல்லுதற்கரிய, வகையின் - விதத்தினால், எதிர்
- சர்வஜ்ஞனுடைய எதிரில், பணிந்தாள் - வணங்கினாள், எ-று.   (21)