488மேருமந்தர புராணம்  


 

 1032. சுந்தரியர் வந்தரியர் துறக்கத்திளம் பிடிய
      ரந்தரையி னந்தரத்தின் வானினடம் பயின்றார்
      மந்தரநன் மலர்மழைகள் வண்டினங்கள் சூழ
      விந்திரர்கோ னெழுந்தருளும் வீதியெங்கும் பொழிந்தார்.

     (இ-ள்.) சுந்தரியர் - ஜோதிஷ்கதேவ ஸ்த்ரீயர்களும், வந்தரியர் -
வியந்தரதேவ  ஸ்த்ரீயர்களும், துறக்கத்திளம் பிடியர் - கல்பலோகத்து
இளம் பெட்டை   யானையை நிகர்த்த நர்த்தகிகளும், அம் - அழகிய,
தரையின்  -  தேவ   நிர்மித   மண்டபத்தலத்தில்,   அந்தரத்தின் -
அந்தரமாகவிருந்து,   வானின்  -  ஆகாயத்தில்,    நடம்பயின்றார் -
நர்த்தனம்  செய்தார்கள்,   கோன்  -  ஸ்வாமியாகிய   ஜினேந்திரன்,
எழுந்தருளும் - செல்கின்ற, வீதியெங்கும், வீதிகளிலெல்லாம், இந்திரர்
- தேவேந்திரர்,   நல்   -   நன்மையாகிய,  மந்தரமலர்   -  கற்பக
விருட்சத்தின்   பூக்களை, வண்டினங்கள் சூழ - வண்டுக் கூட்டங்கள்
மொய்க்கும்படி,   மழைகள்   -   மழைகளைப்போல, பொழிந்தார் -
சொரிந்தார்கள், எ-று.                                     (22)

 1033. 1வாமனர்கண் மண்ணின்மறிந் தெழுந்துநடம் புரிந்தார்
       காமம்பில வகவரசர் கரணஞ்சுழன் றெழுந்தார்
       கேமங்கர நாமங்களோ ராயிரத்தோ ரெட்டுந்
       தாமங்கலம் பாடவர்க ளாமிந்திரர் படிந்தார்.

     (இ-ள்.)   வாமனர்கள்   -   அழகிய தேவர்கள், மண்ணின் -
இச்சமவசரண  பூமியில்,   மறிந்து - தங்கி, எழுந்து - உயர எழுந்து,
நடம் - நர்த்தனங்களை,   புரிந்தார் - செய்தார்கள், பிலவக வரசர் -
பவணலோகத் திறைவர்களாகிய பவணேந்திரர்கள், காமம் - அழகாக,
கரணஞ்சுழன்று  -  கரணம்   போடுதல்  முதலாகிய வித்தைகளைச்
செய்து,   எழுந்தார் - சென்றார்கள், இந்திரர் - கல்பாமரேந்திரர்கள்,
கேமங்கரம்   -   க்ஷேமத்தைச்   செய்யும்படியான,   நாமங்கள் -
ஜினேந்திரனுடைய    பெயர்களாகிய,    ஓர்    -        ஒப்பற்ற,
ஆயிரத்தோரெட்டும்  -  ஆயிரத்தெட்டையும், மங்கலம் - பாபவிநா
சார்த்தமாகவும்  புண்ணிய வியாப்த்தியர்த்தமாகவும், பாடவர்களாம் -
பாடுகின்றவர்களாகி, படிந்தார் - பொருந்தினார்கள், எ-று.

     தாம்   -   அசை. 1வானவர்களென்றும்    சில    பிரதிகளிற்
பாடபேதமுண்டு.                                        (23)

 1034. செங்கமல மொன்றிரண்டு பங்கயம லர்ந்தென
      வங்கமலத் தறிவன்றிரு வடியிணைவைத் தளவிற்
      றிங்களன குடைமும்மையும் மண்டலமுஞ் செறிந்த
      பொங்கியவெண் சாமரைகள் பூமழை பொழிந்தார்.