சங்கின் -
சங்கும் (ஆகிய) இருநிதிகளின், பேருடைய -
பெருமையையுடைய, நிதிக்கரசர் - நிதித்தலைவராகிய
தேவர்கள்,
பின்னை - பின்புறத்திலும், முன் - எதிர்ப்புறத்திலும்,
எழுந்தார் -
வந்தார்கள், எ-று. (26)
1037. பன்னகர்கள் பன்மணிக டீவிகைக ளாக
முன்னமிறை பாதம்பணிந் தேகினார்கண் முறையால்
வன்னிமுடி வானவர்கள் சென்னிமிசை வைத்த
பன்னரிய தூபகட மேந்திப்பணிந் தெழுந்தார்.
(இ-ள்.) பன்னகர்கள்
- பவணதேவர்கள், பன்மணிகள் -
பலவாகிய இரத்தினங்களை, தீவிகைகளாக - தீவட்டிகளாகக் கொண்டு,
இறை - ஸ்வாமியினுடைய, பாதம் -
திருவடிகளை, பணிந்து -
வணங்கி, முன்னம் - எதிரிலே, முறையால் - வரிசைக்கிரமத்தால்,
ஏகினர் - சென்றார்கள், வன்னி முடிவானவர்கள் - அக்னிகுமாரர்கள்,
சென்னிமிசை - சிரசின்மேல், வைத்த - வைக்கப்பட்ட, பன்னரிய -
சொல்லுதற்கரிய வாசனையை வீசுகின்ற, தூபகடம் - தூபகலசங்களை,
ஏந்தி - தாத்து, பணிந்து - (சுவாமியை)
வணங்கி, எழுந்தார் -
எழுந்துபோனார்கள், எ-று. (27)
1038. இரவிசசி யெண்ணரிய தொக்கனைய விறைவன்
றிருவுருவி னொளியழகு கண்டுசிறந் தேத்திப்
பருதிமதி பான்மையுடை மாந்தர்முக மென்னு
மரவிந்தமுங் குமுதங்களும் மலரவுட னெழுந்தார்.
(இ-ள்.) எண்ணரிய
- எண்ணுதற்கரிதாகிய, இரவி -
சூர்யர்களும், சசி - சந்திரர்களும், தொக்கனைய
- ஒன்றாகக்
கூடினாலொத்த பிரகாசமுள்ள, இறைவன் -
தலைவனாகிய
ஜினேந்திரனுடைய, திரு - அழகிய, உருவின் - பரமௌதாரிக திவ்விய
தேகத்தினுடைய, ஒளி - ஜோதியுள்ள, அழகு - லாவண்யத்தை, கண்டு
- பார்த்து, சிறந்து - சிறப்பையடைந்து, ஏத்தி - ஸ்தோத்திரம் பண்ணி,
பான்மையுடை - பவ்வியத்துவம் பொருந்திய, மாந்தர் மனிதர்களின்,
முகமென்னும் - வதனமென்கிற, அரவிந்தமும் -
தாமரைப்
புஷ்பங்களும், குமுதங்களும் - அல்லி மலர்களும்,
பருதிமதி -
ஸ்வாமியினுடைய சூர்ய சந்திர குணமொத்த ஒளிகளால்,
மலர -
மலர்ச்சியடைய, உடன் -
உடனே, எழுந்தார் -
சந்தோஷித்தெழுந்தார்கள், எ-று. (28)
1039. குடையினொடு கொடிபருதி மின்னின்மிசை குலவ
வடிவுடைய வைசயந்தை வான்கொடிமுன் னேக
விடியினொலி யவியவெழி னாந்திமுன் னியம்பப்
படருவினை யெறியுமரு ளாழியுமுன் னேக. |