492மேருமந்தர புராணம்  


 

விருஷபத்தைப்போல,   (அதாவது :  விருஷபம்போல  கெம்பீரமாகி),
நடந்தார்        -       நடைக்கலாயினார்கள்,         எவரும் -
வருத்தமுள்ளவர்களெல்லாம்,   சோகம்   -  துக்கத்தை, ஒழிந்தார் -
நீங்கிச் சுகமடைந்தார்கள்,   செவிடர்   -   செவிடர்கள்,   மொழி -
பிறர்கூறும்   வசனத்தை,   கேட்டார்   -   செவிடு நீங்கி போஸ்ரீரீத்திர
பலத்தால்   கேட்டுக்   கொள்ளும் தன்மை யடைந்தார்கள், குபிதர் -
கோபிகள், கோபம் - குரோதத்தை,  ஒழிந்தார் - விட்டார்கள், குருடர்
- அந்தகர்கள்,   விழி   -   கண்விழியால்  பார்வையை, பெற்றார் -
அடைந்தார்கள், எ-று.                                    (31)

 1042. பிறவியுறு பகையுடைய பணிநகுல முதலா
      வுறவியிற வாதவுற வாயவ ணிலத்துக்
      கிறைவனிறை காதலொடு மங்கங்கெதிர் கொண்டார்
      மறமலி விலாழியுடை மன்னவனை வந்தே.

     (இ-ள்.)   பிறவி - ஜன்மத்தினாலேயே,  உறு - அடையப்பட்ட,
பகையுடைய   -    ஜன்மனவர சத்துருத்துவமுடைய, பணி - சர்ப்பம்,
நகுலம்   -    கீரிப்பிள்ளை,   முதலாம்   -    முதலாகிய, உறவி -
(ஒன்றுக்கொன்று   ஜன்மவைரமாயுள்ள)  பிராணிகளும்,  இறைவன் -
ஸ்வாமியின்மேல்,   நிறை  -   நிறைந்த, காதலொடு - பக்தியினோடு
(கர்மோப   சமமாவதோடு),   இறவாத    -     நீங்காத, உறவாய் -
மித்திரத்துவமாகி,    அவணிலத்து       -        ஸ்ரீவிஹாரமாகிற
அவ்வவ்விடங்களில்,  மறமலிவில் - பாபம் மிகுதலில்லாத, ஆழியுடை
- தர்ம சக்கரத்தையுடைய,    மன்னவனை - ஸ்வாமியை, அங்கங்கு -
அவ்வவ்விடங்களிலும்,   வந்து    -    வந்து,    எதிர்கொண்டார் -
எதிர்கொண்டார்கள், எ-று.                                 (32)

 1043. வெவ்வினைக டீரவிம லன்கமல மேற்கொண்
      டிவ்வகை யெழுந்தருளி வந்தவிவை கண்டாங்
      கவ்வியமின் மைந்தரை யணைந்துசிலர் சொன்னார்
      மௌவன்மலர் தூயவரும் மலரடி பணிந்தார்.

     (இ-ள்.) வெவ்வினைகள் - பொல்லாங்காகிய பாபவினைகள், தீர
- நீங்கும்படி, விமலன் - விமலதீர்த்தங்கரனாகிய ஜினேந்திரன்,
கமலமேற்கொண்டு - தேவநிர்மித செந்தாமரைப் புஷ்பத்தின் மேலேறி,
இவ்வகை - இவ்விதமாக, எழுந்தருளிவந்த- ஸ்ரீ விஹாரமாகிய, இவை
- இவ்வதிசயங்களை, கண்டு, பார்த்து, ஆங்கு - அப்பொழுதே, சிலர்
- சில பேர்கள், ஒளவியமில் - பொறாமையில்லாத நற்குணமுடைய,
மைந்தரை - இம்மேருமந்தரரென்னும் குமாரர்களிடத்தில், அணைந்து
- சேர்ந்து, சொன்னார் - தெரியச் சொன்னார்கள், அவரும் -
அக்குமாரர்களும், மௌவல்மலர் - வனமல்லிகைப் புஷ்பங்களை, தூய்
- சொரிந்து, மலரடி - பகவானுடைய மலர்ப்பாதங்களை, பணிந்தார் -
வணங்கினார்கள், எ-று. (33)