50மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

    புஞ்சிய பந்த சந்த வுதயமோ டுதிர்ச்சி யாக்கி
    யஞ்சினா லுதயஞ் செய்திட் டப்பய னாக்கு மன்னா.

   (இ-ள்.)  மன்னா  -    வைஜயந்த   மகாராஜனே!,    பாவம் -
பாபானுபாகமானது,   நஞ்சென  -  விஷத்தைப்போல,  உறைக்கும் -
எரிச்சலாகி   சீவன்களுக்கு   துக்கத்தைக்  கொடுக்கும், நல்வினை -
புண்ணிய   வினையினனுபாகமானது,   நாவில்  - நாவிலே, இட்ட -
இடப்பட்ட,     அம்   -   அழகிய,   சுவை  -  ரஸம்பொருந்திய,
அமிர்தம்போல   -   அமிர்தத்தைப்போல,  இன்பத்தையாக்கும்   -
சௌக்கியத்தை  யுண்டுபண்ணும்,  ஆற்ற  -  மிகுதியாக,  புஞ்சிய -
சேர்ந்த,  பந்தம்  -  பந்தமும்,  சந்தம் - ஸத்துவமும், உதயமோடு -
உதயத்தோடு,     உதிர்ச்சியாக்கி    -   உதிரணையையும்  செய்து,
அஞ்சினால் -  (திரவிய,   க்ஷேத்திர,  கால,  பவ,   பாவமென்னும்)
ஐந்தினால்,  உதயஞ்செய்திட்டு - உதயத்தைக்கொடுத்து, அப்பயன் -
அந்தந்தக்கர்மபலனை, ஆக்கும் - செய்விக்கும், எ-று.

     பந்த, ஸத்துவ, உதய, உதிரணைகளின்  விவரங்களை பதார்த்த
ஸாரத்தில்  முதல்  அதிகாரத்திலும்,  இரண்டாவது  அதிகாரத்திலும்
விரிவாகக் கண்டு கொள்க. (104)

  105. யோகமே பாவந் தம்மா லுயிரினை யார்த்த கம்மம்
      யோகமே பாவந் தாம்வந் துயிரினை யுற்ற போழ்தின்
      யோகமே பாவந் தாமு முயிரின்கண் விடுதல் வீடாம்
      யோகமே பாவந் தம்மு ளுவந்தெழு மரச வென்றான்.

    (இ-ள்.)  அரச -   வைசயந்த   மஹாராஜனே!,     யோகமே
பாவந்தம்மால் - சுபாசுபமனவசனகாய பரிணாமங்களினால், உயிரினை
-  ஆத்மனை,   கம்மம்  -   கர்மங்கள்,   ஆர்த்த   -  பந்தித்த,
யோகமேபாவந்   தாம்வந்து   -   சுத்தநிச்சயமாகிய  மனவசனகாய
பரிணாமமானது  வந்து சேர்ந்து, உயிரினை - ஆத்மனிடத்தில், உற்ற
போழ்தில் -   அடைந்த   காலத்தில்   யோகமே  பாவந்தாமும் -
சுபாசுபமனவசனகாய        பரிணாமமானது,       உயிரின்கண் -
ஆத்மனிடத்தினின்றும்,   விடுதல்  -  விட்டு  நீங்குதல்,  வீடாம் -
பாவமோக்ஷமாகும், யோகமே  பாவந்தம்முள் - அப்படிப்பட்ட (பாவ
மோக்ஷமாகிய) சுத்தநிச்சய மனவசனகாய பரிணாமங்களில், உவந்து -
சந்தோஷித்து, எழும் - செல்வீராக,  என்றான் - என்று   ஸ்வயம்பு
நாமதீர்த்தங்கரர் அருளிச்செய்தார், எ-று.                   (105)

 

 106. வினையற விட்ட போழ்தின் வெடித்தவே ரண்டம் போல
     நினைவருங் குணங்க ளெட்டு நிறைந்துமே னோக்கி யோடி
     முனிவரு முலக மூன்று மிறைஞ்சமூ வுலகி லுச்சி
     கனைகழ லரச நிற்றல் கைவல மாகுங் கண்டாய்.