கொடிகளைப் போல்,
சோலைவாய் - தோப்புகளில், பொலிந்து -
அழகாக, தோன்றி - வந்து தோன்றி, கயல் -
கெண்டைமஸ்யம்
போன்ற, விழி - கண்களானவை, பிறழ - சுழலும்படி, காமங்கனிய -
பார்ப்பவர்களுக்கு இச்சை அதிகரிக்கும் படியாக, நின்று ஆடினார் -
நின்று நர்த்தனம் புரிந்தார்கள்,
எ-று. (21)
1069. கற்பக மடநல் லார்கள் காமனைச் செறிவ தேபோற்
கற்பக மரத்தைக் காம வல்லிகள் செறிந்த காமர்
விற்பயி லொயிளியைக் கண்டு வேதிகை யென்று மீள்வார்
தப்புவர் நடையிற் றாழ்வை யொளியினா லுயரமென்னா.
(இ-ள்.)
கற்பு - பதிவிரதா குணம்
பொருந்திய, அகம் -
மனத்தை உடைய, மட நல்லார்கள்
- இளமையுள்ள அழகிய
ஸ்த்ரீமார்கள், காமனை - இச்சையைச் செய்யும் தங்கள் புருஷனை,
செறிவதே போல் - சேர்ந்து மனமொத்திருப்பது
போல, கற்பக
மரத்தை - கற்பக
விருட்சங்களை, காமவல்லிகள் -
காமவல்லிக்கொடிகள், செறிந்த -
சேர்ந்திராநின்றன, (மற்றும்
அவ்வனபூமியில்), காமர் - அழகிய, வில் - கிரணத்தினால், பயில் -
மிகுதியாகி ஸ்தம்பித்திராநின்ற, ஒளியை - ஜோதித்திரளை, கண்டு -
பார்த்து, வேதிகையென்று - மதிலென்று,
மீள்வார் - (அங்கே
சென்றவர்கள்) திரும்புவார்கள், தாழ்வை - பள்ளமாகிய தலத்தை,
ஒளியினால் - பிரகாசத்தினால், உயரமென்னா
- இது மேடான
பூமியென்று கருதி, நடையில் - அடி பெயர்த்து நடப்பதில், தப்புவர் -
தவறிப் பிரமிப்பார்கள்,
எ-று. (22)
1070. மதுகரந் தும்பி வண்டுவண்சிறைப் பறவை மற்றும்
பொதியவிழ் போதின் மீது போர்த்தன புகழ லாற்றா
மதியொளி பரந்த பூமி விதியுளி கிடந்த வல்லிப்
பொதுளிய போதின் மீது போர்த்தகண் வாங்க லாற்றா.
(இ-ள்.) மதியொளி -
சந்திரகிரணம்போல, பரந்த - விசாலித்த,
பூமி - அவ்வன பூமியில், விதியுளி - கிரமத்தையுடையதாய், கிடந்த -
சேர்ந்திராநின்ற, பொதியவிழ் - முறுக்கவிழ்ந்து
மலர்ந்திரா நின்ற,
போதின் மீது - புஷ்பங்களின் மேல், மதுகரம் - தேனினங்களும்,
தும்பி - தும்பிக்கூட்டங்களும், வண்டு - வண்டினங்களும், வண் -
வளப்பமாகிய, சிறை - இறகுகளையுடைய,
பறவை - பக்ஷிகளும்,
மற்றும் - மற்ற ஞிமிறின முதலானவைகளும்,
போர்த்தன -
நிறைந்திரா நின்றன, புகழல் - அதைப் புகழ்ச்சியாக வர்ணிப்பது,
ஆற்றா - முடியாது, (மேலும்), வல்லி - காமவல்லியாதிக்கொடிகளில்,
பொதுளிய - நெருங்கிமலர்ந்த, போதின்
மீது - பூக்களின் மேலே,
போர்த்த - பார்க்கப்பெற்ற, கண் - கண்களை,
வாங்கல் - திருப்பி
வாங்குதல், ஆற்றா - முடியாது, எ-று. (23)
1070.(அ) வனமிது விதியி னெய்தி வாவியைச்
சார்ந்து மைந்த
ரினமல ரேந்திச் சொன்ன வெட்டெட்டு மரத்தி னான்கு
சினைதொறுஞ் செறிந்த சீய
வணைமிசைத் தேவர் கோம
னனையபொற் படிமைத் தூபை யருச்சித்துப் பிரிதி சேர்ந்தார்.
(இ-ள்.) விதியின் - கிரம
வரிசையையுடைய, வனம் இது - இந்த
வன பூமியை, மைந்தர் - மேருமந்தர குமாரரிருவரும்,
எய்தி -
அடைந்து, வாவியை - தடாகங்களை, சார்ந்து
- வரிசைப்படி
யடைந்து, இனமலர் - நல்ல இனங்களான புஷ்பங்களை, ஏந்தி -
தரித்து, சொன்ன - அவ்வன பூமியில் சொல்லப்பட்ட,
|