506மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

எட்டெட்டுமரத்தின் -   எட்டு   எட்டாகிய  மரங்களில் (அதாவது :
கற்பாக    விருக்ஷம்    எட்டு    சைத்ய    விருக்ஷம்    எட்டாக
இராநின்றவைகளில்),    நான்கு    சினை    தொறும்  -   சைத்ய
விருக்ஷங்களினுடைய நாலு  கிளைகள் தோறும், செறிந்த - சேர்ந்திரா
நின்ற, சீயவணை மிசை - ஸிம்மாசனத்தின் மேலே யிராநின்ற, தேவர்
கோமானனைய -     ஜினேந்திரனுக்     கொப்பாகிய,    பொன் -
பொன்னாலாகிய,   படிமை   -  ஜினப்பிரதிமைகளையும்,  தூபை -
ஸ்தூபைகளிலுள்ள  ஜின  பிம்பங்களையும், அருச்சித்து - அர்ச்சனை
செய்து, பிரிதி சேர்ந்தார் -  (அவ்வன  பூமியின்  எல்லைப் பிரமாண
முடிவில் அப்பியந்தர   பாகத்திலுள்ள)  பிரிதிதரமென்னும்  மதிலை
யடைந்தார்கள், எ-று. (23-அ)

 1071. இருநிதி யிருந்த சென்னி யிமையம்வந் திறைவன் பாதம்
     மருவிய தென்னச் செம்பொன் மயமதாய் வெள்ளி சூடி
     யுருமலி யுதயத் திற்கு மிருமடி யாகும் பிரிதி
     தரமெனு மிஞ்சி யைந்து நிலையவட் டாலைத் தாகும்.

   (இ-ள்.)   இருநிதி -    சங்க  நிதி  பத்மநிதித்தலைவர்களாகிய
தேவர்கள்,  இருந்த -  தங்கியிராநின்ற, சென்னி - சிகரத்தையுடைய,
இமையம் - ஹிமவான்  பர்வதமானது,  வந்து - இவ்விடத்தில் வந்து,
இறைவன் பாதம் - ஜினேந்திரனுடைய ப ாதத்தை,  மருவியதென்ன -
சேர்ந்ததை யொப்ப, செம்பொன் மயமதாய் - சிவந்த ஸ்வர்ணமயமாகி,
வெள்ளி    சூடி -   வெள்ளியாலாகிய   தலைச்சூட்டையுடையதாகி,
உருமலி - ரூபத்தினால் நிறைந்த, உதயத்திற்கும் -  உதயதரமென்னும்
மதிலுக்கும்,     இருமடியாகும்    -     இரட்டித்த    உன்னதமும்
அகலமுமுள்ளதாகும்,  பிரிதிதரமெனும்  இஞ்சி  -  ப்ரீதிதரமென்னும்
மதிலானது, ஐந்து நிலைய - ஐந்து  நிலைகளை  யுடையவைகளாகிய,
அட்டாலைத்தாகும் - அட்டாலயங்களையுடையதாகும், எ-று. (24)

 1072. கொடிமிடைக் கோபு ரங்க ளோங்கின நான்கு காத
      மிடிமுர சியம்ப வானோ ரியற்றுமஞ் சிறப்பை யெய்தும்
      படிமைக ளிருந்த பஞ்ச நிலங்களை யுடைய பைம்பொற்
      குடமுகம் பதுமந் தேமாங் கொத்தன கோணந் தானே.

   (இ-ள்.)    கோணந்தான்    -   மூலைகளிலெங்கும்,  கொடி -
துவஜக்கொடிகளால், மிடை -  நெருங்கி அழகுடைய, கோபுரங்கள் -
ப்ரீதிதர மென்னும் கோபுரங்கள் நாலும்,  நான்குகாதம் - நாலுகாதம்,
ஓங்கின - உன்னதமாயின, இடி - இடிப்போல கர்ஜிக்கின்ற,  முரசு -
பேரிகைகள், இயம்ப - சப்திக்க, வானோர் -  தேவர்கள், இயற்றும் -
செய்கின்ற,  அம் -  அழகிய,  சிறப்பை -  பூைஜையை,  எய்தும் -
அடைகின்ற,  படிமைகள் -  ஜினப்ரதிமைகள்,  இருந்த - இராநின்ற,
பஞ்ச    நிலங்களையுடைய,     ஐந்து    நிலைகளையுடையதாகிய,
(சிகரத்திலே),  பைம்பொன் - பசுமை  பொருந்திய  பொன்னாலாகிய,
குடம் -  கடமும்,   முகம் -   அக்கடத்தின்  முகமும்,   பதுமம் -
பொன்னாலாகிய    தாமரை      புஷ்பமும்    தேமாங்கொத்தன -
அப்பதுமமலரின் அடியில் அழகிய மாவிலைக் கொத்துமுடையனவாய்
விளங்கும், எ-று. (25)

 1073. கோபுரத் திரு மருங்குங் குடவரை யனைய தோளார்
      பாகரப் பிரபை போலப் படரொளிப் பவண வேந்தர்
      நாகருக் கிறைவர் கோமா னலம்புகழ்ந் தலங்க லார்ந்த
      வேதிரம் பிடித்துக் காக்கும் புரத்துளார் கொடியின் வீதி.