சமவசரணச்சருக்கம்507


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)   கோபுரத்து - அக்கோபுரத் துவாரத்தின், இருமருங்கும்
-  இரண்டு    பக்கத்திலும்,    குடவரையனைய  -    அஸ்தங்கிரி
பர்வதத்திற்குச்  சமானமாகிய, தோளார் - புஜத்தையுடையவர்களாகிய,
பாகரப்பிரபை   போல -   சூர்யப்   பிரபைப்போல,   படரொளி -
மிகுதியான   ஒளியை   வீசுகின்ற,   பவண    வேந்தர்  -  பவண
தேவர்களுக்கு      அதிபதியாகிய,      வைரோசன      ரென்கிற
பவணேந்திரர்கள், நாகருக்கு இறைவர் - தேவேந்திரர்களுக்கெல்லாம்,
கோமான் -    நாதனாகிய   ஜீனேந்திரனுடைய,  நலம்  -  அழகிய
குணாதிசயங்களை,    புகழ்ந்து     -     துதித்துக்     கட்டியஞ்
சொல்லிக்கொண்டு,      அலங்கலார்ந்த    -        மாலைகளால்
அலங்கரித்திராநின்ற,     வேதிரம்   -    பிரம்பை,     பிடித்து -
பிடித்துக்கொண்டு,   காக்கும்   -   காவல்  செய்கின்ற,  புரத்து  -
அக்கோபுரத்து,  உள் -  அப்பியந்தரத்தில், ஆர் - நிறைந்திராநின்ற,
கொடியின்  -  துவஜங்களையுடைய,   (துவஜ   பூமியாகிய  ஐந்தாம்
பிராகாரத்தின்), வீதி - மஹாவீதிகளாகும், எ-று. (26)

 1074. ஐந்துவிற் சதுர மாகி யாயிரத் தெண்ப தாய
      பந்தியின் வருக்க மாய மண்டலம் பத்தின் பாக
      மிங்கிவை திரட்டி யேக திக்கினுக் காமி வற்றை
      மங்கலந் தன்னின் மாற வந்தவப் பந்தின் மீது.

    (இ-ள்.)   ஐந்தாம்  பிரகாரமாகிய   வப்பூமியில்  மஹா  வீதி
போகக்  கோணங்கள்  நாலில் ஒவ்வொரு கோணத்திலும்), ஐந்துவிற்
சதுரமாகி -  ஐந்துவில்  சதுரத்  தோடு கூடி, ஆயிரத் தெண்பதாய -
ஆயிரத்தெண்பதாகிய,  பந்தியின்  வருக்கமாய - (ஆயிரத்தெண்பது
ஆயிரத்தெண்பது)   பந்தி     வரிசைகளையுடைய,    மண்டலம் -
மேடைகள்,   பத்தின்பாகம்   -   பத்தில்   பாதியாகிய  ஐந்துவில்
உன்னதமாம்,  இங்கிவை  -  இங்கு  இந்த  மேடைகளை, திரட்டி -
மொத்தக்    கணக்காகச்    சேர்க்க,    (வந்த   சங்கியைகளாகிய,
பதினொருலக்ஷத்து   அறுபத்தாறாயிரத்து    நானூறு   மேடைகள்),
ஏகதிக்கினுக்கு - ஒரு  கோணமாகிய   பூமியில்,   ஆம்  - ஆகும்,
இவற்றை - இத்தொகையை, மங்கலந்தன்னில் - முக்கிய மங்கலத்தின்
தொகையாகிய நாலினால்,  மாற  -  பெருக்க,  வந்த  -  வரப்பட்ட
சங்கியைகளாகிய, அப்பந்தின்  மீது -  அந்நாலு  கோணத்திலுமாகிய
திரண்ட கணக்காகிய,  நாற்பத்தாறு  லக்ஷத்து  அறுபத்தையாயிரத்து
அறுநூறாகிய மேடைகளின்மேல், எ-று.
         
         இதுவும் அடுத்த செய்யுளும் குளகம். (27)

 1075. மூன்றுவிற் சதுர மாகி முழுமணிப் பீடத் துச்சி
      யூன்றிவில் லிரண்டு சுற்றா யுயர்ந்திரு காதம் பைம்பொ
      னீன்றவே போன்று கண்ணி னெழின்மணியிருந்த தண்டி
      னான்றபா லிகையி னுச்சிப் பலகைமேற் பதாகை யாமே.