508மேருமந்தர புராணம்  


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)    மூன்றுவில்   சதுரமாகி  -   மூன்றுவில்  சதுரத்தை
யுடையதாகி,  முழுமணி -  முதிர்ந்த குணமுடைய ரத்தினத்தாலாகிய,
பீடத்து - பீடத்தினுடைய,  உச்சி - மேலே, ஊன்றி - நடப்பட்டதாகி,
வில்லிரண்டு  சுற்றாய் -  இரண்டுவில் சுற்றளவுள்ளதாய், இருகாதம் -
இரண்டுகாதம்,  உயர்ந்து -  உன்னதமாகி,  பைம்பொன்  -  பசுமை
பொருந்திய    பொன்னினாலே,   ஈன்றவேபோன்று   -   உற்பத்தி
செய்யப்பட்டவை  போல,  கண்ணின்  -  பார்க்கப்பட்டவர்களுடைய
கண்களிலுள்ள,   எழில்   -   அழகுபிரகாசியா   நின்ற,    மணி -
கண்மணிகள்,   இருந்த  -   தங்கிய,  (அதாவது :  பார்த்தகண்கள்
வேறொன்றிற்  செல்லாத    வழகுடைய),  தண்டின்  - ஸ்தம்பத்தின்
தலையிலே, ஆன்ற - பெரிதாகிய, பாலிகையின் - பாலிகையினுடைய,
உச்சி - உச்சியிலே, பலகை  மேல் -  அமைக்கப்பட்ட   பலகையின்
மேல், பதாகை - துவஜக் கொடிகள், ஆம் - ஆகும், எ-று. (28)

 1076. சிங்கமா லியானை மாலை சிகியன்னங் கருட னேறு
      பங்கய மகர மாழிப் பதிகளாம் பதாகை பத்தும்
      பொங்கியா காய மென்னும் புணரிவெண் டிரைகள் போலும்
      மங்கலக் கிழவன் கோயில் மதிலைச்சூழ்ந் தாடு நின்றே.

    (இ-ள்.)   சிங்கம் -  சிங்கமும்,  மால் - பெரிதாகிய, யானை -
யானையும்,  மாலை  -  பூமாலையும்,  சிகி -   மயிலும், அன்னம் -
ஹம்ஸமும்,  கருடன்  -  கருடனும், ஏறு - விருஷபமும், பங்கயம் -
தாமரை  புஷ்பமும்,  மகரம் -  மகர  மஸ்யமும், ஆழி - சக்கரமும்,
(ஆகிய  இவைகள்),   பதிகளாம் -   லாஞ்சனமாகவுடைய,  பதாகை
பத்தும் -     இந்த    தசவிதமான    துவஜங்களும்,   (ஒவ்வொரு
ஸ்தம்பங்களின்   பலகையின்   மேலும்),    பொங்கி -   பெரிதாகி,
ஆகாயமென்னும் -   ஆகாசமென்கின்ற,  புணரி - ஸமுத்திரத்திற்கு,
வெண் -  வெளுப்பாகிய, திரைகள் போலும் - அலைகளைப்போலும்,
மங்கலக்கிழவன்     -     பிரதமமங்கலத்திற்கு      முக்கியனான
ஜினேந்திரனுடைய,   கோயில்   -  ஸமவ  ஸரணத்தில்,  மதிலை -
இனிச்சொல்லப்படும்  கல்யாண  தரமென்னும்  மதிலை,  சூழ்ந்து  -
பரிவேஷ்டித்து,   நின்று -  நிலைபெற்று, ஆடும் -  அசைவனவாம்,
எ-று. (29)

 1077. முடிமணி முத்த மாலை நான்றுகிண் கிணிகள் மொய்த்த
      கொடிநிரை கோடி நான்கோ டறுபத்தா றிலக்கங் கோமா
      னுடையன வைம்பத் தாறா யிரமுன்றி லுலாவு கின்ற
      படியிது காத மூன்றாய்ப் பயோதிபோற் சூழ்ந்த தாமே.

    (இ-ள்.) முடி - அந்த  த்வஜஸ்தம்பங்களினது சிகரத்தினின்றும்,
முத்தம்  - முத்துமணிகளாலாகிய, மாலை -   மாலைகள், நான்று -
தொங்கி,   கிண்கிணிகள் - சிறுசதங்கைகள், மொய்த்த - நெருங்கிய,
கொடி   நிரை  -   த்வஜ  ஸமூகங்கள்,    கோடி   நான்கோடு -
நாலுகோடியோடு, அறுபத்தாறிலக்கம் - அறுபத்தாறுலக்ஷத்து,