வைசயந்தன் முத்திச்சருக்கம் 51


Meru Mandirapuranam
 

   (இ-ள்.)  கனை  -  சப்தியாநின்ற,  கழல்  -   வீரகண்டயத்தை
அணிந்த,  அரச  -  வைஜயந்த மஹாராஜனே!. (இன்னும்), வினை -
ஞானவரணாதி   அஷ்டகருமங்கள்,  அற  -  முழுமையும்   நீங்க,
விட்டபோழ்தின் -  ஆத்மனை விட்டு நீங்கினகாலத்தில், வெடித்த -
வெடித்துநீங்கிய,   எரண்டம்போல  -  ஆமணக்கங்கொட்டையைப்
போல,  நினைவரும்  - நினைத்தற்கரிய, குணங்களெட்டும் - அனந்த
ஞானாதி   அஷ்ட   குணங்களும்,   நிறைந்து   -   சம்பூர்ணமாகி,
மேனோக்கி - ஊர்த்துவகதி ஸ்வபாவமாகி, ஓடி - சென்று, முனிவரும்
-   முனீஸ்வரர்களும்,   உலக   மூன்றும்   -  மூன்றுலகத்திலுள்ள
ஞானிகளும்,      இறைஞ்ச    -    வணங்க,   மூவுலகினுச்சி   -
மூன்றுலோகத்துக்கும்  உச்சியாகிய  தனுவாதாக்கிரத்தில்,  நிற்றல்  -
நிலையாயிருக்குந்தன்மை,    கைவலமாகும்   -   கைவல்லியமாகிய
திரவியமோட்சமாகும், எ-று.

      கண்டாய் - வினாவொடுசாராத ஒருவகை அசை. (106)

 107. உரைத்தவிப் பொருளின் மெய்ம்மை யுணர்வது நல்ல ஞானம்
    புரைப்பறத் தெளிதல் காட்சி பொருந்திய விரண்டு மொன்றிற்
    றரித்தனல் லொழுக்க மாகுஞ் சாற்றிய மூன்று மொன்றின்
    விரைபொலி தாரோய் வீட்டின் மெய்ந்நெறி யாவ தாமே.

    (இ-ள்.)  விரை - வாசனையுள்ள,  பொலி - அழகு, விளங்குகிற,
தாரோய்  - மாலையை  யணிந்திராநின்ற  வைஜயந்த மஹாராஜனே!,
உரைத்த   -   சொல்லப்பட்ட,   இப்பொருளின்   -    இந்தசீவாதி
பதார்த்தங்களினது,  மெய்ம்மை - உண்மையை, உணர்வது - அறிவது,
நல்லஞானம்  -  ஸம்மியக்ஞானமாம்,  புரைப்பற  -   சந்தேகமின்றி,
தெளிதல் - தெளிவது, காட்சி - ஸம்மியக்தர்சனமாகும், பொருந்திய -
சேர்ந்திராநின்ற,   இரண்டும்   -   இந்த  சம்மியக்ஞான  தர்சனங்க
ளிரண்டையும்,   ஒன்றிற்றரித்தல்   -   ஒரு  தன்மையிற்  கொண்டு
அனுஷ்டித்தல்,   நல்லொழுக்கமாகும்  -  சம்மியக்  சாரித்திரமாகும்,
சாற்றிய  -  சொல்லப்பட்ட,  மூன்றும்  -  (ஸம்மியக்தர்சன,  ஞான,
சாரித்திர   மென்னும்   இந்த)   இரத்னத்திரயங்கள்,   ஒன்றின்  -
ஆத்மனிடத்தில்  பொருந்துமேயாகில்,  வீட்டின்  -  மோட்சத்திற்கு,
மெய்   -   உண்மையாகிய,   நெறி   -   மார்க்கம்,  ஆவதாம் -
உண்டாவதாம், எ-று.

     ‘அறிவு   காட்சியதா?     என்ற    69-வது   பாடல்   முதல்
‘உரைத்தவிப்பொருளின்  மெய்ம்மை?  என்னும் இந்த 107-வது பாடல்
வரையில்,  நவபதார்த்தஸ்வரூபமும்,  மோட்சமார்க்கமும் சுருக்கமாகச்
சொல்லப்பட்டிருக்கின்றன.

     இன்னும்  இவற்றை  விரிவாகத்  தெரியவேண்டின் பதார்த்தசார
கிரந்தத்தில்   பார்த்துக்கொள்க.   இன்னும்   ப்ராப்ரதத்திரயத்திலும்,
சர்வார்த்த    ஸித்தியிலும்,    கோமடஸாரத்திலும்  இவை விரித்துச்
சொல்லப்பட்டிருக்கின்றன.  அவைகளிலும்  இவற்றின் விவரங்களைப்
பார்த்துக் கொள்ளலாம்.                                 (107)