விருட்ச பூமியை, சூழ்
- சூழ்ந்ததாகிய, கல்யாண கோபுரத்தை -
கல்லியாணதரமென்கிற கோபுரத்தையும் மதிலையும்,
சார்ந்தார் -
அடைந்தார்கள், எ-று. (32)
1080. முதனடு விறுதி கோச மூன்றரை யரைய கன்றிட்
டுதயத்தின் முத்தி யோங்கித் தமனியத் தியன்று நானா
விதமணி யணிந்து சென்னி மிடைந்தவெண் கொடிய தாகி
மதிலின் தகத்தட் டாலை மலிந்தவேழ் நிலத்த தாமே.
(இ-ள்.)
(அந்தக் கல்யாணதரமென்கிற மதிலானது),
முதல் -
அடியில், கோசமூன்று - மூன்று குரோசமு, நடு - மத்தியில், அரை -
அம்மூன்றில் பாதியாகிய ஒன்றரைக் குரோசமும், இறுதி -
கடையில்
(அதாவது : தலைப்பில்), அரை - ஒன்றரையில் பாதியாகிய முக்கால்
குரோசமும், அகன்றிட்டு - அகலமுடையதாகி,
உதயத்தின் -
உதயதரமதிலினுடைய உன்னதத்திற்கு,
முத்தியோங்கி - மூன்று
பங்காகிய உன்னதமுடையதாகி, தமனியத்து -
ஸ்வர்ணத்தினால்,
இயன்று - செய்யப்பட்டதாகி, நானாவிதமணி
- பலவிதமான
ரத்தினங்களினால், அணிந்து அலங்கரித்துச்
செய்த தலைச்
சூட்டையுடையதாகி, சென்னி - தலையிலே, மிடைந்த - நெருங்கிய,
வெண் - வெளுப்பாகிய,
கொடியதாகி
-
துவஜக்கொடிகளையுடையதாகி, மதிலினதகத்து
- கல்யாண
தரமென்கிற அம்மதிலினுள், அட்டாலை - அட்டாலையங்களினால்,
மலிந்த - நிறைந்த,
ஏழ் நிலத்ததாம்
-
ஏழ்நிலவட்டாலையங்களுடையதாகும், எ-று. (33)
1081. பத்தரைக் காத மோங்கிப் பைம்பொற்கோ புரங்க ணான்கு
முத்தமத் துறக்க மேழை யொத்தவேழ் நிலத்த வாகிப்
பத்துநா மத்த வாமேழ் பவத்தொடர் பதனைக் காட்ட
வைத்தகண் ணாடி வாய்தல் மருங்கிரண் டுடைய தாமே.
(இ-ள்.) பைம் - பசுமை பொருந்திய, பொன் - பொன்னாலாகிய,
கோபுரங்கள் நான்கும் - கல்யாணதரமென்கிற கோபுரங்கள் நாலும்,
உத்தமம் - மேலான, துறக்கமேழை - ஏழுதேவருலகத்தை, ஒத்த -
நிகர்த்த, ஏழ்நிலத்தவாகி -
ஏழு நிலைகளையுடையனவாகி,
பத்தரைக்காதம் - ஐந்து காதம், ஓங்கி - உயர்ந்து, பத்து
நாமத்தவாம்
- பாகியபரிக்கிரம் பத்தின்மேலாகிய
ராகத்தினாலாகும், வாய்தல் -
அக்கோபுரவாசற்படியானது, இரண்டு
மருங்கும் - இரண்டு
பக்கங்களிலும், ஏழ்பவத்
தொடர்பதனை - முன்
ஏழ்பவத்தொடர்ச்சிகளை, காட்ட -
பார்க்கப்பட்டவர்களுக்குக்
காட்டும்படி, வைத்த - ஸ்தாபிக்கப்பட்ட,
கண்ணாடி -
கண்ணாடிகளை, உடையதாமே - உடைத்தாகியதாம், எ-று. (34)
1082. உரைத்தநா மத்த வாய புறத்தகத் துதயம் போலப்
பெருத்தகோ புரங்க ணான்கு பெருவிலை மணிய மாலை
|