சமவசரணச்சருக்கம்511


Meru Mandirapuranam
 

   தரத்தினாற் பருத்துத் தாழ்ந்து சணசண வென்னுங் கண்டை
   பரித்துநாற் றிசையும் வீதி பருதிபோ லொளிரு நின்றே.

   (இ-ள்.)  உரைத்த - இப்போது  சொல்லப்பட்ட,  நாமத்தவாய -
கல்யாணதரமென்கிற       பெயரை   யுடைனவாகிய,   பெருத்த -
பெரியனவாகிய,  நான்கு  கோபுரங்கள்  -  சதுர்  கோபுரங்களிலும்,
புறத்தகத்து  -  உட்புறத்தில்,  உதயம்போல  - சூர்யோதயம் போல,
பெரு    விலை  -  பெரிதாகிய  விலை  மதிப்பையுடைய,  மணி -
இரத்தினத்தினாலாகிய,   அம்   -  அழகிய,  மாலை  -   சங்கிலி
மாலைகளானவை,  தரத்தினால்  -   மேலான வேலைத் தரத்தினால்,
பருத்து - திரண்டு, தாழ்ந்து . தொங்கப்பட்டதாகி, சணசண வென்னும்
- சணச்சணவென்று சப்திக்கும்படியான,  கண்டை - சேமங்கலமானது
(அதாவது :      ஜெயமங்களத்வனியையுடைய     வாத்தியமானது),
நாற்றிசையும் வீதி - நாலு திசையிலுமுள்ள மஹா வீதிகளில், பரித்து -
ஆர்ப்பரித்து, பருதி போல் -  சூர்ய  பிம்பம்போல, நின்றொளிரும் -
நிலை பெற்றுப் பிரகாசிக்கும், எ-று. (35)

 1083. உரைத்தகோ புரத்து வாய்தல் காப்பவ ருலக பாலர்
      நிரைத்தவேழ் நிலத்த தாய நாடக சாலை யின்கட்
      டரத்தினா னிரைத்த மின்னிற் றானடம் புரியு மாதர்
      விரித்தநா முரைத்த தேவர் மேவுமா தேவி மாரே.

      (இ-ள்.)         உரைத்த      -         சொல்லப்பட்ட,
கோபுரத்து -   இக்கல்யாணதரகோபுரத்தினுடைய,      வாய்தல் -
வாசற்படிகளினிருபக்கத்திலும்,    காப்பவர்    -  காவல் செய்கின்ற
த்வாரபாலகர்கள்,      உலகபாலர்   -     லோகபாலகதேவரென்று
சொல்லப்பட்ட      கல்பவாஸி     தேவர்களாவர்,     நிரைத்த -
(அக்கோபுரத்தின்    அப்பியந்தரத்தில்   கற்பக    விருட்சபூமியின்
வீதிகளிலிருபக்கங்களிலும்)  வரிசை  பெற்றிராநின்ற,  ஏழ்நிலத்தாய -
ஏழு      நிலைகளையுடையதாகிய,    நாடகசாலையின்     கண் -
நர்த்தனசாலையில், தரத்தினால் - மேலான தன்மையால், நிரைத்த -
வரிசையாகிய, மின்னின் - மின்னலைப்போல, நடம்புரியும்   மாதர் -
நடனஞ்  செய்கின்ற   ஸ்திரீகள்,   நாம் -  நாம்,  விரித்துரைத்த -
இப்பொழுது  விரித்துச்  சொல்லிய,  தேவர் - லோகபாலகதேவர்கள்,
மேவும்  -  பொருந்திச்  சேர்கின்ற,  மா  -  பெருமை பொருந்திய,
தேவிமார் - தேவிமார்களாவர், எ-று. (36)

 1084. வடிவுடைப் பீடத் திப்பால் மணித்திரள் மலர்ந்த நான்கு
      விடவங்கண் மிக்க திக்கை யளப்பன போன்று சித்தப்
      படிமைக ளிருந்த சித்த பாதவம் பயின்ற போதுங்
      குடையின்மீ தணிந்து வீதி நான்கினுங் குலாவு மிப்பால்.