சமவசரணச்சருக்கம்513


Meru Mandirapuranam
 

பத்திரை  -  (தக்ஷிணதிசையில்)     பத்திரை யென்றும்,  சயந்தை -
(அபரதிசையில்)   ஜயந்தை  யென்றும்,  பூரம்  -  (உத்திரதிசையில்)
பூர்ணை யென்றும்,   நாமத்த -  பெயரையுடையனவாகிய,   வாவி -
தடாகங்களாகும், நான்கில் --  அந்நான்கு  தடாகங்களில், வாரியைத்
தெளித்தபோழ்தின்  -   முதல்     தடாக    ஜலத்தை     மேலே
தெளித்துக்கொண்டபோது,  (அவ்வாறு   தெளித்துக்கொண்டவர்கள்),
முந்தைய  பிறப்பை  -  பூர்வ ஜன்மத்தை,   ஓர்வார் - அறிவார்கள்,
முன்பின்  ஏழ்பவத்தைக்   காண்பார்  - (இரண்டாவது  தடாக  ஜல
ஸம்பர்க்கத்தால்)  முன்  பின்னாகிய  ஏழ்பவ   ஜாதியைத்தெரிந்து :
கொள்ளுவார்கள்,  பார்க்க  -  மூன்றாந்தடாகோதகத்தைப்  பார்த்த
மாத்திரத்தில்,  சிந்தை  செய்தவற்றை  - நினைத்தவற்றை யெல்லாம்,
காண்பார் -  பிரத்தியக்ஷமாகத்  தோன்றக் காண்பார்கள், தெளிக்க -
(நாலாந்தடாக  நீரைத்)  தெளித்துக்கொள்ள,  நோய்யாவும்  -  சகல
வியாதிகளும்,  தீரும் - நீங்கும், எ-று.

   ‘காண்பார்? என்பது இரண்டிடங்களினுங் கூட்டப்பட்டது. (39)

 1087. வாசநின் றறாத சோலை மதிலின் தகத்து மாண்ட
      வோசனை யகன்ற தேனு முலகெலா மடங்கி னாலு
      மாசைபோ லகன்று தோன்று மருமணி நிலத்த தாகி
      மாசிலா மணியி னாய மரங்களாற் செறிந்த தெங்கும்.

   (இ-ள்.)   மதிலினது -  கல்யாணதர  மதிலினுடைய,  அகத்து -
அப்பியந்தர   பாகத்தில்,   வாசம்  -   பரிமளமானது,   நின்று -
நிலைபெற்று, அறாத - நீங்காத, மாண்ட - மாட்சிமையுடைய, சோலை
- கற்பகச்   சோலையாகிய    ஆறாம்    பிராகாரமானது,  ஓசனை
யகன்றதேனும் -    நாலுகாத      விஸ்தீர்ணமுடையதா  யிருந்தும்,
உலகெலாம் - இந்தத்  திரிலோகத்தும்  பவ்வியத்துவமுள்ள   தேவர்
மனிதர் விலங்குகள் எல்லாம் வந்து,  அடங்கினாலும் - சேர்ந்தாலும்,
ஆசைபோல் - ஆசையைப்போல, அகன்று -  விசாலித்து, தோன்றும்
- தோன்றுகின்ற,  அரும் -  அரிய,  மணி -  இரத்தினங்களாலாகிய,
நிலத்ததாகி -   பூமியையுடையதாகி,  எங்கும்  -  எவ்விடங்களிலும்,
மாசிலா - குற்றமில்லாத,   மணியின்  - இரத்தினங்களினால், ஆய -
ஆகிய,   மரங்களால் -  விருட்சங்களால்,  செறிந்தது  - நிறைந்தது,
எ-று. (40)

 1088. பலநிறம் பயின்ற போதும் பலங்களுஞ் செறிந்த சாகை
      நிலைதளர்ந் தொசியக் காணா நிறையவஞ் சிறைகளீண்டி
      மலர்நிறைந் திருந்த மட்டை வாங்கினாற் றாங்கப் பாரா
      மிலையெனா மிலாத வர்க்கு விருந்தெழுந் துண்ட தேனை.

   (இ-ள்.)   (அம்மரங்களில்),    பல   -   பலவாகிய,  நிறம்  -
வர்ணங்களை, பயின்ற -  உடைத்தாகிய,  போதும் -  புஷ்பங்களும்,
பலங்களும் - பழங்கள்